தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கிரிக்கெட் வீரர் எம்எஸ். தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இவர் அண்மையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.
ஆனால் சுஷாந்த்தின் உறவினர்கள் அது தற்கொலை அல்ல கொலை என்று கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் சுஷாந்த்தின் மரணமே தற்போது சினிமாவாகிறது.
இந்த படத்தை ஷாமிக் மௌலிக் என்பவர் இயக்க விஜய் சேகர் குப்தா தயாரிக்கிறார்.
சினிமா பின்புலமே இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் நபர்களை இந்தி திரையுலகம் எப்படி நடத்துகிறது, அவர்களின் போராட்டம் எப்படி பட்டது? என்பதை இந்த படம் சொல்லவிருக்கிறதாம்.
மேலும் பாலிவுட்டை மையப்படுத்தி இந்தப் படத்தை ஷாமிக் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Film inspired by Sushant Singh Rajputs life in process