தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏராளமான மராத்தி மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் ஜெயந்த் சவார்கர்.
ஆரம்ப காலத்தில் மேடைக்கலைஞராக இருந்த ஜெயந்த் பின்னர் மராத்தி, இந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.
குறிப்பாக ‘ஹரி ஓம் விதாலா’, ’66 சதாசிவ்’, ‘சிங்கம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்
சினிமா மட்டுமின்றி, சின்னத்திரையிலும் அவர் நடித்து இருக்கிறார்.
இவர் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருந்து வருகிறார்.
வயது முதிர்வு மற்றும் ரத்த அழுத்தம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஜெயந்த் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்த நிலையில் ஜெயந்த் நேற்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87.
மேலும், நடிகர் ஜெயந்த் சவார்கர் மறைவிற்கு பாலிவுட் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Famous Marathi actor Jayant Savarkar dies at 87