மலைவாழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் *எவனும் புத்தனில்லை*

மலைவாழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் *எவனும் புத்தனில்லை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Evanum Buthanillai Motion poster launch and story line updatesவி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “எவனும் புத்தனில்லை”.

இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்.

கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் கெளரவ வேடத்தில் சினேகன் நடிக்கிறார்.

மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ராஜா c.சேகர்
இசை – மரியா மனோகர்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
பாடல்கள் – சினேகன்
வசனம் – S.T.சுரேஷ்குமார்
ஸ்டண்ட் – அன்பு அறிவு, மிராக்கில் மைக்கேல்
நடனம் – அசோக்ராஜா சங்கர்
கலை – A.பழனிவேல்
இணை தயாரிப்பு – கே.டி.எஸ்.பாஸ்கர், K.சுப்ரமணியன் I.ஜோசப் ஜெய்சிங், M.கார்த்திகேயன், V.C.சூரியன்
தயாரிப்பு – வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ்
கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் S.விஜயசேகரன்

ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படம் உருவாகி உள்ளது.

அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் திரில்லர் படமாக மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம் என்கிறார் இயக்குனர் S.விஜயசேகரன்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

Evanum Buthanillai Motion poster launch and story line updates

தோல்வி அடைஞ்சவங்க நல்ல படத்தை கொடுப்பாங்க.; விஜய் ஆண்டனி நம்பிக்கை

தோல்வி அடைஞ்சவங்க நல்ல படத்தை கொடுப்பாங்க.; விஜய் ஆண்டனி நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Failure peoples will give successfull movies says Vijay Antonyவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுக்க வெளியிடும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விஜய் ஆண்டனி சாருக்கு இது 9வது படம், எனக்கும் இது 9வது படம். அவருடன் இது எனக்கு 4வது படம். திமிரு இருந்தா தான் நம்பிக்கை இருக்கும். நம் மூதாதையர்கள் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தவர்கள், திமிரோடு இருந்தவர்கள்.

அதை கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து எடுத்து விட்டார்கள். திமிரு என்பது நம் உரிமைகளை தட்டிக் கேட்பது. இந்த பெயரை தலைப்பாக வைக்க ஒரு திமிர் வேண்டும். அது விஜய் ஆண்டனி சாருக்கு இருக்கிறது என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ்.

திமிரு புடிச்சவன் படத்தில் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன். விஜய் ஆண்டனி சார் திரையில் எத்தனையோ பேருக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

என்னையும் இந்த படத்தின் மூலம் அடுத்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறார். இரண்டாம், மூன்றாம் நிலையில் இருந்த தீனாவை மெயின் வில்லனாக்கியிருக்கிறார். அவரின் நம்பிக்கை ஜெயிக்கும் என்றார் நடிகர் சம்பத் ராம்.

என்னதான் திமிரு புடிச்சவன் என தலைப்பு வைத்தாலும் உண்மையில் ரொம்ப அமைதியான மனிதர். நல்ல சர்கார் அமையணும்னா, திமிரு புடிச்ச அதிகாரிகள் நிச்சயம் தேவை. இந்த தீபாவளி எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலான தீபாவளி என்றார் காமெடி நடிகர் கதிர்.

எத்தனையோ நடிகர்கள், பெரிய ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் விஜய் ஆண்டனி சார் ரொம்பவே அர்ப்பணிப்பு உடையவர். மிகவும் எளிமையானவர். நிறைய பேரை திரையுலகில் தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறார், அவர் தொடர்ந்து இதை செய்வார் என்றார் நடிகை ஆதிரா.

தமிழ் சினிமாவில் ஒரு திருநங்கையை ஒரு முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த விஜய் ஆண்டனி, கணேஷா சாருக்கு நன்றி. முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டர் ப்ரீத்திகா அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

எல்லோரும் பயந்து கண்டுகொள்ளாத ஒரு விஷயத்தை எந்தவித, தயக்கமும் பயமும் இல்லாமல் அதை கையாண்டு முடித்து வைத்தார். திருநங்கைகள் வாழ்வில் இந்த படம் முக்கிய திருப்பமாக இருக்கும் என்றார் சிந்துஜா.

இந்த படத்தை நான் பார்த்து விட்டேன், கணேஷா மிகச்சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். எந்த போலீஸ் கதையிலும் சொல்லப்படாத நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார். 25 காட்சிகளில் கைதட்டல் வாங்கும்.

மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை இந்த படத்தின் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். 4 பசங்க மிரட்டியிருக்கிறார்கள். அனைவருமே தங்கள் கதாபாத்திரங்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

தீபாவளிக்கு வெளியாகும் தகுதி இந்த படத்துக்கு நிச்சயம் இருக்கிறது. கடந்த 3 மாத காலமாகவே தமிழ் சினிமாவுக்கு நல்ல நேரம். அதை இந்த படமும் தொடரும் என்றார் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.

கதையை சொல்லும்போதே இயக்குனர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்டணும்னு சொன்னார். அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன், திடீரென மீன் பாடி வண்டி ஓட்ட சொன்னார். டப்பிங்கில் படத்தை பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது.

படம் முழுக்க புதுசு புதுசா நிறைய செய்ய சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இருக்கும் என்றார் நிவேதா பெத்துராஜ்.

ஃபாத்திமா மேடம் 7 மணி நேரம் கதையை கேட்டார், நல்லா இருக்கு என்று சொல்லி, தொடர்ந்து முழுக்கதையையும் கேட்டார். விஜய் ஆண்டனி சார் படங்களுக்கு இதுவரை பூஜை போட்டதே இல்லை. ஆனால் எனக்காக பூஜை போட்டார்.

நான் கேட்ட எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்தார் விஜய் ஆண்டனி சார். என்னை முழுமையாக மதித்தார்.

ஒரு தயாரிப்பாளர் கதை நல்லா இருக்கு, கதையை மட்டும் வச்சிக்கிட்டு வேற இயக்குனர் வச்சி படத்தை பண்ணலாம் என சொன்னார். ஆனால் விஜய் ஆண்டனி சார் தோல்வி அடைஞ்சவர் தான் நல்ல படத்தை கொடுப்பார் என சொல்லி நான் தான் இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

நான் பெரிய நடிகர்களை கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தேன். அவர் புகழ் வெளிச்சம் படாத நல்ல திறமையான நடிகர்களை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அவர்கள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர் நம்பிக்கை வீண் போகாது என்றார் இயக்குனர் கணேஷா.

Failure peoples will give successfull movies says Vijay Antony

Thimirupudichavan Movie Press Meet

ஹீரோவை நீக்கிவிட்டு *முடிவில்லா புன்னகை* படத்தை முடித்த டைரக்டர்

ஹீரோவை நீக்கிவிட்டு *முடிவில்லா புன்னகை* படத்தை முடித்த டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mudivilla Punnagai movie Audio launch and news updatesகுட்சன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆரோக்கியசாமி க்ளமென்ட் தயாரித்து, இசையமைத்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னகை’.

இதில் ஹீரோவாக டிட்டோ என்ற பல் மருத்துவர் அறிமுகமாக, ஹீரோயினாக பெங்களூரை சேர்ந்த ரக்‌ஷா நடிக்கிறார்.

இவர்களுடன் இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமென்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கூல் சுரேஷ் வில்லனாக நடித்திருக்கிறார். மற்றும் டெலிபோன் ராஜ், நெல்லை சிவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

சென்னையை சேர்ந்த ஆரோக்கியசாமி க்ளமென்ட் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாலும், தனக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வத்தின் மூலம் ‘முடிவில்லா புன்னகை’ படத்தை தயாரித்து இயக்கியிருப்பதோடு, நடித்தும் இருக்கிறார்.

முதலில் இந்த படத்தை தயாரித்து இயக்குவதை மட்டும் செய்த க்ளமென்ட், படத்தின் ஹீரோ டிட்டோ ஆரம்பத்தில் கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிக்க சம்மதித்தவர், முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்த பிறகு அதிகமான தொகையை சம்பளமாக கேட்டதோடு, கொடுத்தால் தான் நடிப்பேன், என்றும் அடம் பிடித்திருக்கிறார்.

இப்படி அவர் செய்த பிரச்சினையால் ரொம்பவே அப்செட்டானதோடு, ஒரு கட்டத்தில் அழும் அளவுக்கு சென்றவர், பிறகு டிட்டோவை நீக்கிவிட்டு கதையை சற்று மாற்றி, புதிய கதாபாத்திரம் ஒன்றை படத்தில் சேர்த்து, அதில் தானே நடித்தும் இருக்கிறார்.

ஆர்.எஸ்.பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசையரசர் தஷி பின்னணி இசையமைத்திருக்கிறார். பாடல்களுக்கு ஆரோக்கியசாமி க்ளமென்ட் இசையமைத்திருப்பதோடு, இளையகம்பனுடன் சேர்ந்து பாடல்களும் எழுதியுள்ளார். பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார்.

தற்போது நாட்டில் விவாகரத்து என்பது பெரிகிவிட்டது. இளம் தம்பதியினரிடையே விவாகரத்து என்பது சர்வசாதரணமாகிவிட்ட நிலையில், இப்படம் அத்தகைய நிலையை மாற்றும் அளவுக்கு சிறப்பான மெசஜை சொல்வதோடு, சினிமாத்துறையில் இருக்கும் கஷ்டங்களை பற்றியும் பேசுகிறது. சினிமா என்பது கடல் போல, அதில் நீச்சல் அடித்து கரை சேர்வது என்பது மிக மிக கடினம், என்பதையும் இப்படம் விளக்குகிறதாம்.

செண்டிமெண்ட், காதல், காமெடி, மெசஜ் என்று அனைத்தையும் கலந்து சொல்லப்பட்டிருக்கும் இப்படம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடிக்கும் அளவுக்கு உருவாகியுள்ளது, என்று கூறும் இயக்குநர் க்ளமெண்ட், இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை அமெரிக்காவில் திரையிட்டாராம்.

அதில் படத்தை பார்த்தவர்கள் அனைவரும், படம் சிறப்பாக இருக்கிறது, என்று கூறினார்களாம். முக்கியமாக பெண்கள் வெகுவாக பாராட்டியதோடு, தற்போதைய காலக்கட்டத்திற்கு அவசியமான படம், என்றும் கூறினார்களாம்.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வை சென்னையில் நடத்த இருக்கும் ஆரோக்கியசாமி க்ளமென்ட், பாரதிராஜா முன்னிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதோடு, விழாவில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு சிறப்பான உணவு, உடை ஆகியவற்றை வழங்கவும் முடிவு செய்திருக்கிறார்.

Mudivilla Punnagai movie Audio launch and news updates

Mudivilla Punnagai movie Audio launch and news updates

அரசியல்வாதிகளின் வன்முறையால் சர்காருக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்

அரசியல்வாதிகளின் வன்முறையால் சர்காருக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijayபொதுவாக விஜய் படங்கள் என்றாலே குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கும். இவரது படங்கள் யு சான்றிதழ் பெற்ற வெளியாகும்.

ஆனால் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள சர்கார் திரைப்படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த படத்தின குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வகையில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கியுள்ளார்.

ஆனால், படத்தில் சில காட்சிகளில் அதிக வன்முறை உள்ளதாம். அந்த வன்முறைகளை அரசியல்வாதிகள் அரங்கேற்றுவது போல் இருக்கிறதாம்.

மேலும் சில காட்சிகளை அவர்கள் கத்தரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

ரசிகர்களால் பெருமை; எங்களை பிரிக்க முடியாது என ரஜினி அறிக்கை

ரசிகர்களால் பெருமை; எங்களை பிரிக்க முடியாது என ரஜினி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

No power can split me and my fans says Rajinikanthநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார்.

விரைவில் தன் அரசியல் கட்சி மற்றும் கொடியை அறிவிக்க உள்ளார்.

இதனிடையில் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இதில் மன்ற விதிகளை மீறியதாக சிலரை ரஜினிகாந்த் நீக்கினார்.

அவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் என்பதற்காக காரணத்தை ஒரு நீண்ட அறிக்கையாக சில தினங்களுக்கு முன் வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.

தற்போது நீக்கப்பட்டவர்களில் சிலர் நேரடியாகவும், கடிதம் மூலமும் ரஜினியிடம் மன்னிப்பு கோரியுள்ளர்.

இதனையடுத்து, அவர்களை மீண்டும் மக்கள் மன்றத்தில் இணைப்பது குறித்து, சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளதாவது…

நான் கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்த சில உண்மைகளை சொல்லியிருந்தேன்.

அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களை போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் சென்றாலும், அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்.”

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No power can split me and my fans says Rajinikanth

*டகரு* படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற *கொம்பன்* முத்தையா

*டகரு* படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற *கொம்பன்* முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Muthaiah got remake rights of Kannada Super Hit Tagaruசசிகுமார் நடித்த ‘குட்டிப் புலி’, கார்த்தி நடித்த கொம்பன், விஷால் நடித்த ‘மருது’ ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா.

தற்போது கௌதம் கார்த்திக், சூரி, மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘தேவராட்டம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மதுரை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘டகரு’ என்ற கன்னட படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் முத்தையா கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சிவராஜ்குமார் நடித்திருந்த ‘டகரு’ படம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Muthaiah got remake rights of Kannada Super Hit Tagaru

More Articles
Follows