JUST IN சிம்புவின் ‘மாநாடு’ அதிகாலை காட்சிகள் ரத்து.; KDM பிரச்சினையால் கடுப்பான ரசிகர்கள்!

JUST IN சிம்புவின் ‘மாநாடு’ அதிகாலை காட்சிகள் ரத்து.; KDM பிரச்சினையால் கடுப்பான ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு.

யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் மாநாடு படத்தில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் ‘தி லூப்’ என்ற பெயரில் இன்று நவம்பர் 25ல் ரிலீசாகிறது.

தமிழகத்தில் ‘மாநாடு’ சிறப்பு காட்சிக்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றும் தீர்ந்துவிட்டன.

இந்த படம் இன்று நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் திடீர் என தள்ளி வைப்பதாக அறிவித்தார் சுரேஷ் காமாட்சி. அறிவித்த நேரம் 24/11/2021 மாலை 6 மணி்.

அவரின் ட்விட்டர் பதிவில்..

நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்

தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்.. ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.” என பதிவிட்டார்.

இவையில்லாமல் மாநாடு படத்திற்கான கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை பஞ்சாயத்து முற்றியதாகவும் கூறப்படுகிறது.

நேற்று 11.30 மணியளவில் ‘மாநாடு’ படத்திற்கான பண பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதனால் திட்டமிட்டபடி படம் (நவ.25) வெளியாகும் என தெரிய வந்தது..

இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு.. ‘மாநாடு’ ரிலீஸ் என அறிவித்தார்.

இதனையடுத்து தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் உறுதி செய்யப்பட்டன. ரசிகர்களும் கொண்டாட்டங்களுடன் காத்திருந்தனர்.

ஆனாலும் ரீலீசில் சிக்கல் என மீண்டும் பிரச்சினை ஆரம்பமானது. பேச்சுவார்த்தை தொடங்கியது.

எனவே தமிழகம் முழுவதும் அதிகாலை 5 மணி காட்சிகள் ரத்தானது.

இதனால் தியேட்டர்களில் ரசிகர்கள் டென்சன் ஆனார்கள்… காவர்துறையினர் & பவுன்சர்கள் ரசிகர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். சில இடங்களில் கலாட்டாக்கள் நடைபெற்றன.

ரிலீஸ் தொடர்பான KDM பிரச்சினை பேசப்பட்டது. இந்த KDM பிரச்னையால் படம் காலை வெளியாகவில்லை.

இந்த KDM-தான் பாஸ்வேர்டு. இது வந்தால்தான் ஒரு படத்தை தியேட்டரில் திரையிடவே முடியும்.

ஆரம்ப காலங்களில் படப்பெட்டி & படச்சுருளுக்காகக் காத்திருக்கும் திரையரங்குகள் இன்று KDM-ஐ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

பின்னர் ஒருவழியாக 25/11/2021 காலை 7 மணியளவில் KDM பிரச்சினை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

7 மணி முதல் ‘மாநாடு’ படத்தை திரையிட அனுமதி கிடைத்துள்ளது.

இது குறித்து காலை 7.15 மணிக்கு சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் பதிவிட்டார். அதில்…

Everything ok. Sry for the trouble the fans crossed. Nw its our time. God s great. Thnks to everyone who stood for me.

#Maanaadu

Early morning Shows Cancelled.. Later All issues sorted out Simbus Maanadu released

#Maanaadu Release update – All concerned parties are trying to sort out financial issue surrounding the film. If the issues ( KDM – digital & satellite rights sale) are worked out by midnight, will green light release.

JUST IN நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் & மனைவி மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி.; உதவி கேட்கும் குடும்பம்!

JUST IN நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் & மனைவி மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி.; உதவி கேட்கும் குடும்பம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

,

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார் திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர்

இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.

இவர் நடித்த படங்கள் இவை..:
சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம், இன்று நேற்று நாளை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, அலை, பாப்கார்ன், ஒன்பது ரூபாய் நோட்டு, பரதேசி, தில்லுமுல்லு, என்ன சத்தம் இந்த நேரம், அரண்மனை, அதிபர், எங்கிட்ட மோதாதே, கஜினிகாந்த், நாடோடி கனவு மற்றும் பல..

இந்த நிலையில் நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மற்றும் அவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் AlG மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார்கள்.

இதில் சிவசங்கர் மாஸ்டர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

அவரது இளைய மகன் அஜய்கிருஷ்னா உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார்.

அவர்களுக்கு சிகிச்சை செலவிற்கு பணம் தேவைப்படுகிறது

அஜய்கிருஷ்னாவின்
வங்கி கணக்கும்
அவரது அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

பண உதவி செய்யுமாறு அஜய் கிருஷ்னா கேட்டுள்ளார்.

Noted Choreographer #ShivaShankar Master affected with #COVID19 and now in critical condition. Due to expensive treatment the family is unable to pay the bills.Wishing him a speedy recovery.

For Contact
Ajay Krishna (Son)
9840323415

Ajay Muralikrishna
107710011005841
Union bank Saligrama brach
IFSC.UBIN0810771

Choreographer Actor Shiva Shankar Master affected with COVID19 He need help

JUST IN நாளை நவம்பர் 25 சிம்புவின் ‘மாநாடு’ ரிலீஸ் கன்பார்ம்.; என்ன நடந்தது.?

JUST IN நாளை நவம்பர் 25 சிம்புவின் ‘மாநாடு’ ரிலீஸ் கன்பார்ம்.; என்ன நடந்தது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு.

யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் மாநாடு படத்தில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் ‘தி லூப்’ என்ற பெயரில் நாளை ரிலீசாகிறது.

இந்த படம் நாளை நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் திடீர் என தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

அவரின் ட்விட்டர் பதிவில்..

நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்

தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்.. ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.” என பதிவிட்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் சான்றிதழ் காட்டினால் மட்டுமே தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

‘மாநாடு’ சிறப்பு காட்சிக்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றும் தீர்ந்துவிட்டன.

முன்பதிவில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் கொரோனா தடுப்பூசி காரணத்தால் தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதாக தகவல்கள் பறந்தன.

மற்றொரு பக்கம் இவையில்லாமல் மாநாடு படத்திற்கான கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை பஞ்சாயத்து முற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று இரவு 10 மணியளவில் ‘மாநாடு’ படத்திற்கான பண பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதனால் திட்டமிட்டபடி படம் நாளை (நவ.25) வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு.. நாளை ‘மாநாடு’ ரிலீஸ் என அறிவித்துள்ளார்.

நெல்லை ராம் திரையரங்கில் நாளை காலை 5 மணிக்கு முதல் காட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

All issues sorted out Simbus Maanadu releasing Worldwide Tomorrow

#Maanaadu Release update – All concerned parties are trying to sort out financial issue surrounding the film. If the issues ( digital & satellite rights sale) are worked out by midnight, will green light release.

JUST IN ‘மாநாடு’ ரிலீஸ் தள்ளிப்போனது..; வலியோடு சுரேஷ் காமாட்சி அறிவிப்பு. இதுதான் காரணமா?

JUST IN ‘மாநாடு’ ரிலீஸ் தள்ளிப்போனது..; வலியோடு சுரேஷ் காமாட்சி அறிவிப்பு. இதுதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு. சிம்பு இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் மாநாடு படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் திடீர் என தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

அவரின் ட்விட்டர் பதிவில்..

நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்

தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்.. ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் சான்றிதழ் காட்டினால் மட்டுமே தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

முன்பதிவில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் கொரோனா தடுப்பூசி காரணத்தால் தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.

Just in! #Maanaadu release postponed!

வேதா இல்லத்தை தீபாவிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு..; ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வசூலிக்கவும் ஆர்டர்

வேதா இல்லத்தை தீபாவிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு..; ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வசூலிக்கவும் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது.

வேதா இல்லம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு*

*நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது – உயர்நீதிமன்றம்*
==
*வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது*
==
*தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் வேதா இல்லத்தை ஒப்படைக்க சென்னை ஆட்சியருக்கு உத்தரவு.
==
*சாவியை மனுதாரரிடம் ஒப்படைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*

*வேதா நிலையம், மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு?உயர்நீதிமன்றம்*

*கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமானவரி நிலுவை போக மீதியை தீபக், தீபாவிற்கு கொடுக்கலாம்*

*ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வசூலிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி*

*இழப்பீடாக நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட ரூ.67.9 கோடி அரசுக்கு திருப்பி அளிக்க உத்தரவு*

HC quashes order converting Jayalalithaa’s Chennai residence as memorial

வீட்டுக்கு பூட்டு.. பூனை மரணம்..; நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்கு போக மறுத்த மன்சூர் அலிகான்

வீட்டுக்கு பூட்டு.. பூனை மரணம்..; நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்கு போக மறுத்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.

இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூரலிகானின் வீடு, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, தனது வீட்டில் மாட்டிக்கொண்ட தான் வளர்க்கும் பூனையை மீட்பதற்காக வீட்டை திறக்க வேண்டும், என்ற கோரிக்கையும் வைத்தார்.

வெளிநாட்டை சேர்ந்த மன்சூரலிகானின் செல்ல பூனை அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி, பூனையை மீட்பதற்காக 1 மணி நேரம் மட்டும் வீட்டை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார்.

ஆனால், பூனை ஒரு மாதமாக உணவு இன்றி உயிரிழந்ததால், நீதிமன்றம் அறிவித்தது போல், தனது வீட்டை திறக்க வேண்டாம், என்று மறுப்பு தெரிவித்த மன்சூரலிகான், அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு கடிதமும் கொடுத்து விட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் மன்சூரலிகான்…

தான் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இடத்தில் முறையாக அனுமதி பெற்று வீடு கட்டினேன். இன்று வரை சொத்து வரி உள்ளிட்ட வரிகள் கட்டிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், அந்த சொத்தை வாங்கியவர்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சனை காரணமாக, என் வீட்டின் மீது தவறான தகவல்களையும், புகார்களையும் பரப்பி, என் வீட்டுக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் என்னை போன்று தான் வீடு கட்டியுள்ளார்கள்.

ஆனால், அவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்படவில்லை. காரணம், நான் ஒரு நடிகன் என்பதால் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை கொடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக போராட்டம் நடத்தி தீர்வு காணும்படி, என் நண்பர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களுக்காக போராடி வரும் நான், எனக்காக போராட விருப்பம் இல்லை. இருந்தாலும், இந்த பிரச்சனையை உச்ச நீதிமன்றம் மூலம் நிச்சயம் தீர்வு காண்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Reason behind Mansoor Ali khan refused to go inside house

More Articles
Follows