சினிமாவை அடுத்து சின்னத்திரையிலும் கலக்கும் நடிகர் துரை. சுதாகர்

சினிமாவை அடுத்து சின்னத்திரையிலும் கலக்கும் நடிகர் துரை. சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை அடுத்து சின்னத்திரையிலும் கலக்கும் நடிகர் துரை. சுதாகர்

சின்னத்திரையில் கலக்கும் களவாணி – 2 வில்லன்
———————————————
களவாணி-2 படத்தில் வில்லனாக அறிமுகமானவர் துரை.சுதாகர்

உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான எலன் மஸ்க், இவர் கதாநாயகனாக நடித்த தப்பாட்டம் படத்தை பகிர்ந்ததால் உலகமெங்கும் டிரென்ட் ஆனார் துரை.சுதாகர்.

மேலும் அதர்வா மற்றும் ராஜ்கிரன் இணைந்து நடித்த ‘பட்டத்து அரசன்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் துரை சுதாகர்..

சினிமாவை தொடர்ந்து தற்போது சின்ன திரை சீரியல்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இவர்.

தற்பொழுது சன் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவருடைய நடிப்பு சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்..

Durai Sudhakar in tv Serial Moondru Mudichi

அரசியல் திரில்லர் படத்தை தமிழர்களுக்காக உருவாக்கிய மலையாளிகள்

அரசியல் திரில்லர் படத்தை தமிழர்களுக்காக உருவாக்கிய மலையாளிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் திரில்லர் படத்தை தமிழர்களுக்காக உருவாக்கிய மலையாளிகள்

ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழில் உருவாக்கி இருக்கும் அரசியல் த்ரில்லர் ‘சேவகர்’

முழுக்க முழுக்க ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் ‘சேவகர்’ இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது.

‘சேவகர்’ படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் , மனோ, ஜமீன்குமார், ஷர்புதீன், சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர்.

இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன்.. சவுண்ட் இன்ஜினியர் கதிர். தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு.

சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ்,தயாரித்துள்ளார். அவருடன் சுனில் குமார் பி ஜி ,இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் இணைந்துள்ளனர்.

நாட்டில் எங்கு அநியாயம் அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக் கேட்கும் ஒருவராக கதாநாயகன் பிரஜின். அவருக்கு உடன் நின்று கைகொடுக்க நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் அங்கே அனைத்து அட்டூழியங்களும் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன் இருக்கிறார். அவருக்குத் துணை போகும் காவல் துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். உற்று நோக்கிய போது அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இந்த அநியாயத்தின் பின்னணியில் ஓர் இணைப்புப் பின்னல் இருப்பது புரிகிறது. இதைக் கண்டு நாயகன் பிரஜின் குமுறுகிறார்.

தன் இயல்புப்படி அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் பிரஜின், ஒரு மக்கள் சேவகனாக இருக்கும் தனது நீதியின் பாதையில் குறுக்கிடும் தீயசக்திகளை அழிக்க நினைக்கிறார். அப்போது போலீசையும் எதிர்த்துத் தாக்க வேண்டிய சூழல் வருகிறது.

இதனால் அவருக்குப் பல வகையில் தொல்லைகள். அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அப்படிப்பட்ட அவருக்குக் காவல்துறையில் இதயம் உள்ள ஒருவரின் புரிதல் கிடைக்கிறது.

அப்படி வரும் ஒரு காவல் அதிகாரி தான் போஸ் வெங்கட். அதன் பிறகு கதையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதைச் சொல்லும் படம் தான் இந்த சேவகர்.

இப்படத்தைத் தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரித்துள்ளார். இவர் அமெரிக்காவில் இருக்கிறார்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் சில காலம் வாழ்ந்தவர். திரைப்படங்கள் மீது அவருக்கு அளவு கடந்த ஆர்வம் உண்டு. பால்ய வயதிலேயே ஏராளமான திரைப்படங்களை ரசித்துப் பார்த்ததுண்டு.திரைப்படங்களுக்கான சுவரொட்டிகளைக்கூட ரசித்து ரசித்துப் பார்த்தவர்.

தானும் ஒருநாள் படம் தயாரித்து தனது பெயரும் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். தனது உலகியல் தேவைகளுக்காகப் பொருளீட்டுவதற்காக அமெரிக்கா சென்றார்.

தனது நண்பர் சந்தோஷ் கோபிநாத் படம் இயக்க இறங்கிய போது அவருக்குக் கை கொடுத்து உதவ முடிவெடுத்து, தயாரிப்பாளராகியுள்ளார்.

அதன் வழியே தனது பால்ய காலத்துக் கனவையும் மீட்டு நிறைவேற்றிக் கொண்டுள்ளார் எனலாம்.அப்படித்தான் உருவானது ‘சேவகர்’ திரைப்படம்.இந்தப் படத்தில் பிரசன்னா பாடியுள்ள வா வா தமிழா, பாடல், மற்றும் இரண்டு பாடல்கள் படம் வெளியான பின் பேசப்படும்.

இப்படத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட படக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களும் கேரளத்தில் இருந்து வந்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்,முழுக்க முழுக்க தென்காசி சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழில் புதிய முயற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு இந்தப் பட முயற்சியில் இறங்கி வெற்றிகரமாக
‘சேவகர்’ படத்தை முடித்துள்ளது இப்படக்குழு.படத்திற்கான மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன விரைவில் ‘சேவகர்’ வெளியாகியுள்ளது.

Malayalam team political thriller Tamil titled Sevakar

முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்ற ராமச்சந்திரன்

முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்ற ராமச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்ற ராமச்சந்திரன்

மலையாள இயக்குநர் அனில் இயக்கத்தில் சவுந்தரராஜா கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘சாயாவனம்’.

இந்தப் படத்தில் தேவானந்தா, அப்புக்குட்டி, சந்தோஷ் தாமோதரன், ஜானகி, வெற்றிவேல் ராஜா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இடைவிடாது மழை பெய்யும் மலைப்பகுதியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள்தான் படத்தின் மையக்கரு.

மலை, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. பெரும்பாலான காட்சிகள் சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளன.

எல் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அருள் இ சித்தார்த் எடிட்டிங் செய்துள்ளார். பாலி வர்கீஸ் இசையமைத்துள்ளார்.

தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கும் இந்தப் படம் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா உட்பட பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தனது முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவதற்கான விருதை வென்றுள்ளார் எல் ராமச்சந்திரன்.

இந்த விருது விழானது இரண்டாவது தமிழ்நாடு திரைப்பட விழா ஆகஸ்ட் 10 – 19 தேதிகளில் நடைபெற்றது.. International Narrative Feature என்ற பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

L Ramachandran won best cinematographer for Saayavanam

தனது முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றார் எல். ராமச்சந்திரன்

Congratz DOP @lramachandran 🎥

.@soundar4uall & #DevanandaSS starring #SAAYAVANAM 🌳#சாயாவனம் 🌳

Prod by @santoshdamodar
Directed by #AnilBabu
Music @polyvarghese
Editor @editorsiddharth

——-

பாண்டிராஜ் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி & நித்யா

பாண்டிராஜ் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி & நித்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி & நித்யா

*சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்*

வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமிக்க இந்த குடும்பம் முதல் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் விஜய் சேதுபதி உடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறது. இத்திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்

கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.

Vijay Sethupathi and Nithya joins in Pandiraj direction

அற்புதமான இதயங்கள் இணைந்த அழகான திருமணம்.; எமி & எட்-க்கு விஜய் வாழ்த்து

அற்புதமான இதயங்கள் இணைந்த அழகான திருமணம்.; எமி & எட்-க்கு விஜய் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அற்புதமான இதயங்கள் இணைந்த அழகான திருமணம்.; எமி & எட்-க்கு விஜய் வாழ்த்து

நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!*

மதராசபட்டினம் படம் மூலம் எமி ஜாக்சனை இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் விஜய்.

இதனையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலர் எமி ஜாக்சன்.

இந்த நிலையில் எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்.

இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி…

‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி.

உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Director Vijay wishes Amy Jackson for her wedding

முதல் நாளில் 25 கோடியை அள்ளி உலகளவில் ₹ 100 கோடியை நெருங்கும் ‘தங்கலான்’

முதல் நாளில் 25 கோடியை அள்ளி உலகளவில் ₹ 100 கோடியை நெருங்கும் ‘தங்கலான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல் நாளில் 25 கோடியை அள்ளி உலகளவில் ₹ 100 கோடியை நெருங்கும் ‘தங்கலான்’

*தங்கலான் – உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணம்.

சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது.

தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முதல் நாள் வசூலை கொண்டு வந்தது.

ரூபாய் 26 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

இப்படத்தின் இரண்டாவது வாரம், தமிழ்நாட்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருந்த போதிலும், வசூலில் ஸ்டெடியாக இப்படம் சென்று கொண்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானாவில், பெரும் வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் இப்படம் 141 தியேட்டர்கள் அதிகரித்து, தற்போது 391 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 30-ம் தேதியன்று மும்பை, டெல்லி மற்றும் அனைத்து வட மாநிலங்களில் தங்கலான் வெளியாக உள்ளது.

அதன் மூலம் மேலும் பல கோடிகளை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இப்படத்திற்கு கிடைத்த வெற்றிகளினால், தயாரிப்பாளருக்கு அவரின் முதலீட்டை தாண்டி வசூல் செய்யும் என அனைவராலும் பேசப்படுகிறது.

பா. ரஞ்சித் அவர்களின் சிறப்பான இயக்கத்தால், உருவான தங்கலான் திரைப்படத்தில், சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி என பல நடிகர்கள் தங்களின் சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.

சீயான் விக்ரம் அவர்கள் இப்படத்திற்காக கொடுத்த உழைப்பையும், அர்ப்பணிப்பையும், ஆகச்சிறந்த நடிப்பையும் பாராட்டாத பார்வையாளர்களோ ஊடகங்களோ இல்லை. அந்த அளவு தன் மாபெரும் உழைப்பை இப்படத்திற்காக விக்ரம் அவர்கள் கொடுத்துள்ளார்.

கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இப்படம், 18-ம், மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்கள், அவர்களின் போராட்டங்கள், மேஜிக்கல் ரியலிசம் என பல புதுமையான விஷயங்களை உள்ளடக்கி, ஒரு சிறந்த காட்சி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் G.V. பிரகாஷ் குமாரின் பாடல்களும், பின்னணி இசையும், பெரிய பலமாக அமைந்துள்ள தங்கலான், 2024-ல் ஒரு மறக்க முடியாத திரைப்படமாகவும், ரூபாய் 100 கோடியளவில் வசூல் செய்த ஒரு படமாகவும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இருக்கும்.

Thangalaan movie nearing 100cr in WW collection

More Articles
Follows