தல போல வருமா.? அஜித்தை பிரபலங்கள் பின்பற்ற திமுக MLA டி.ஆர்.பி. ராஜா வேண்டுகோள்

தல போல வருமா.? அஜித்தை பிரபலங்கள் பின்பற்ற திமுக MLA டி.ஆர்.பி. ராஜா வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRB Rajaசினிமாவை தாண்டி பைக் ரேஸ் & கார் ரேஸ் என அனைத்திலும் சிறந்தவர் நடிகர் அஜித்.

இந்த நிலையில் அஜித்தின் ரேஸ் விளையாட்டுக்கள் குறித்து திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

நடிகர் அஜித்தை பின்பற்றி, மற்றவர்களும் தங்களது பிரபலத்தை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள விளையாட்டுகளுக்கு ஆதரவு தர வேண்டும்!

என திமுக MLA டி.ஆர்.பி. ராஜா ட்வீட் செய்துள்ளார்.

சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது.; நான் இருந்தா கீர்த்தி சுரேஷ் வரமாட்டாங்க.. – மீரா மிதுன்

சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது.; நான் இருந்தா கீர்த்தி சுரேஷ் வரமாட்டாங்க.. – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithunகோலிவுட் ஹீரோஸ் & ஹீரோயின்ஸை வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

சமீப காலமாக த்ரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவரை வம்புக்கு இழுத்தார்.

மேலும் ரஜினி & விஜய்யை பற்றி தவறாக பேசியுள்ளார்.

இதனிடையில் அஜித்தை மட்டும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தற்போது சூர்யாவை வம்புக்கு இழுத்து அவரது ரசிகர்களை வெறுப்பேத்தி இருக்கிறார் மீரா மிதுன்.

சூர்யாவுக்கு ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என கலாய்த்துள்ளார்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் இறந்தபின் சூர்யா அழ வேண்டும்.. பலமுறை டேக் எடுத்தார். நடிப்பே வரலை அவருக்கு.

நான் ஒரே டேக்கில் ஓகே வாங்கி விடுவேன்.

(சூர்யாவுக்கு நடிப்பின் நாயகன் எனவும் இன்னொரு பெயர் உண்டு என்பது இங்கே கவனிக்கத்தக்கது.)

சூப்பர் மாடல் மீரா நடித்த படம் என்று தானா சேர்ந்த படத்திற்கு மீடியா புரோமோசன் மீடியா பண்ணினாங்க.. அதான் சூர்யா டென்ஷனாயிட்டார்.

தானா சேர்ந்த கூட்டம் பட இசை விழாவுக்கு கூட நான் இருந்தா கீர்த்தி சுரேஷ் வரமாட்டாங்க சொன்னாங்க. என்னைய வர விடல..

சிவகுமார் குடும்பம் தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாபியாக்கள் எனவும் தெரிவித்துள்ளார் மீரா.

மீரா மிதுன் நடித்த காட்சிகளை தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வெட்டி எடுத்து விட்டார்கள். அதான் இவ்வளவு ஆத்திரம் அம்மணிக்கு என்கிறார்கள் பலரும்.

அஞ்சுகம் – அமெரிக்கா ஜனாதிபதியா? ராசாத்தி – ராஜ குடும்பமா?.. உதயநிதியை உருட்டும் நெட்டிசன்ஸ்..; ஏன்.?

அஞ்சுகம் – அமெரிக்கா ஜனாதிபதியா? ராசாத்தி – ராஜ குடும்பமா?.. உதயநிதியை உருட்டும் நெட்டிசன்ஸ்..; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinகோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்ட அரசாணை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நடிகர் உதயநிதி.

தன் ட்விட்டர் பக்கத்தில்.. முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையாலும், தலைவர் @mkstalin அவர்களின் உழைப்பாலும் உருவான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் பெயரை வைத்துள்ளது அடிமைக்கூட்டம். மெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம்!…

என பதிவிட்டார்.

இது குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த பதிவுகள் இதோ…

உங்கள் கட்சியில் திரு .ராசா,திருமதி.கனிமொழி யும் குற்றவாளி தானே எப்படி தூத்துக்குடி யில் நாடாளுமன்ற தேர்தலில் நின்றார் அப்ப திமுக விற்கு அறுவறுப்பு தெரியவில்லை..தானே..

ஹலோ வாரிசு தலைவரே, ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவங்க பெயரை வைப்பது அருவருப்புனா, அஞ்சுகம் அம்மாள் என்ன அமெரிக்கா ஜனாதிபதியா இல்ல ராசாத்தி என்ன இராஜ குடும்பமா? https://t.co/HiQN8lg1Xy

ஹலோ உஸ் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குல அல்சைமர் நோய் வந்துருச்சின்னு சொன்னீங்களே உங்க தாத்தாவோட மூனாவது சம்சாரம் ராசாத்தீ அவங்க ஐநா சபை லீடருங்களா??? https://t.co/pkO1uEotvH

Attachments area

‘களவாணி 2’ பட வில்லனுக்கு ‘டேனி’ படம் தந்த புரோமோசன்

‘களவாணி 2’ பட வில்லனுக்கு ‘டேனி’ படம் தந்த புரோமோசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

danny posterகதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்வர் துரை சுதாகர்.

அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய அவர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து களவாணி 2 படத்தில் கலக்கினார்.

தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தில் மிடுக்கான தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் டேனி திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் துரை சுதாகர், கொலை குறித்து தனது கோணத்தில் புலனாய்வு செய்து வழக்கை முடிக்க, வரலட்சுமி அதே வழக்கில் இருக்கும் பல மர்மங்களை தனது விசாரணை மூலம் கண்டுபிடிக்கும் போது படத்தில் பல எதிர்ப்பார்க்காத திருப்பங்கள் ஏற்படுகிறது.

பிறகு வரலட்சுமியும், துரை சுதாகரும் இணைந்து தொடர் கொலைகளின் பின்னணி குறித்தும் உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டு பிடிக்கிறார்கள்.

வரலட்சுமி அளவிற்கு நிகரான கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாக செய்திருக்கிறார் துரை சுதாகர். இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இவரிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம்

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

What the birds want to say will be screened at Bahamas country’தாய்நிலம்’ என்ற திரைப்படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழ் திரைப்பட உலகிற்கு காலெடுத்து வைதிருப்பவர் டாக்டர் அமர் ராமச்சந்திரன்…

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் நடித்த தாய்நிலம் நிறைவு பெற்று ரிலீசிற்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ’பக்ஷிகளுக்கு பறயான் உளது’ (பறவைகள் சொல்ல நினைப்பது ) கதாநாயகனாக நடித்துள்ளார்.

பஹாமாஸ் நாட்டின் உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விழாவிற்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு திரைப்படமும் இதுவே.

சுதா ராதிகா என்ற பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சந்தர்ப்பம் சூழலால் சில தவறுகளுக்கும் புதைக்கப்பட்ட மனநிலை கொண்ட ஒரு பறவைகள் ஆராய்ச்சியாளராக தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்திரன் என்கிறார்கள் விழாத் தேர்வுக்குழுவினர்.

செல்லும் விழாக்களில் எல்லாம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது ’பக்ஷிகளுக்கு பறயான் உளது.’ அநேக திரைப்பட விழாக்களில் இதுவரை திரையிடப்பட்ட இப்படம் பஹாமாஸில் அதிலும் பெண்கள் திரைப்பட விழாவில் பங்கேற்பதால் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மிகப் பெருமையாக உள்ளது எனக் குறிப்பிட்டார் டாக்டர் அமர் ராமச்சந்திரன்.

இந்த திரைப்படத்தில் அமர் ராமச்சந்திரன், மீனாக்ஷி, நீலாஞ்சனா, லைலா, நமீதா ஆகியோர் நடித்திருக்கின்றனர்…டாக்டர் அமர் இராமச்சந்திரன் ஏற்கெனவே நடித்து தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படம் தாய்நிலம் இந்த வருடம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்க தயாராகி வருகிறது.

ஒரே வருடம் இரண்டு திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்திரன்.

What the birds want to say will be screened at Bahamas country

Exclusive ஏழைகளுக்காக ‘மகிழ்மதி இயக்கம்’ தொடங்கினார் திவ்யா சத்யராஜ்

Exclusive ஏழைகளுக்காக ‘மகிழ்மதி இயக்கம்’ தொடங்கினார் திவ்யா சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Divya Sathyaraj starts the Mahilmadhi movementபுரட்சித் தமிழன் சத்யராஜின் மகள் திவ்யா.

இவர் தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமான ஊட்டச்சத்து நிபுணர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

அண்மையில் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பெரும் இழப்புகளளச் சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் அரசுக்கு கோரிக்கை வைத்தார் திவ்யா.

இந்த நிலையில் ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இது ஆரோக்கியத்திற்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

இந்தியாவில் ஒர் ஆண்டின் கணக்கின் படி 10 மில்லியன் திருமணங்கள் நடைபெறுகிறது.

அத்திருமணவிழாக்களில் பரிமாறப்படும் 30 விழுக்காடு உணவு வீணாகிறது.

உணவும், ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டுந்தான் என்பது நியாயம் இல்லை.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்த்தினரும், குழந்தைகளும் கொரோனா தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை.

‘மகிழ்மதி இயக்கம்’ அரசியல் கட்சியோ,, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்குகிறோம்

கொரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம் மேற்கொள்ளும் ‘மகிழ்மதி இயக்கம்’ என் கனவு.

என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது , ‘மகிழ்மதி’ என்ற பெயர் தோன்றியது. என் அம்மா பெயர் மகேஸ்வரியின் முதல் பாதியை என் இயக்கத்தின் பெயரில் இணைக்கவேண்டும் என்பது என் ஆசை”. என்கிறார் இந்த புரட்சிப் பெண்.

Divya Sathyaraj starts the Mahilmadhi movement

Divya Sathyaraj starts the Mahilmadhi movement

More Articles
Follows