முதியோருக்கு ரூ 1500.. கலைஞர் உணவகம்.. பெட்ரோல் விலை குறைப்பு.. ஆட்டோ வாங்க ரூ 10000..; திமுக தேர்தல் அறிக்கை

முதியோருக்கு ரூ 1500.. கலைஞர் உணவகம்.. பெட்ரோல் விலை குறைப்பு.. ஆட்டோ வாங்க ரூ 10000..; திமுக தேர்தல் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் முக. ஸ்டாலின் வெளியிட்டார்.

டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, சுப்புலட்சுமி ஜெகதீசன், டிகேஎஸ் இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

காலை 10.30 மணியளவில் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடம் ஆகியவற்றில் திமுக தேர்தல் அறிக்கையை வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார்.

*தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்…*

*கடன் ஊழல் புகாருக்கு ஆளான அதிமுக அமைச்சர்களை விசாரிக்க தனி நீதி மன்றம் அமைக்கப்படும்.

* உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிக்ழச்சியில் பெறப்பட்ட மனுக்கள் மீது தனித்துறை அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.

*ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும். சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்.

* அனைத்து அரசு வேலைகளிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% அதிகரிப்பு.

* சட்டம் – ஒழுங்கு பணியில் உயிரிழக்கும் காவலர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு ரூ.1 கோடி வழங்கப்படும்.

ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க 10,000 ரூபாய் மானியம்

*விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்க 10,000 ரூபாய் மானியம்.

* குழாய் மூலம் குடிநீர் சென்னையில் கட்டாயமாக்கப்படும்.

* மலைக்கோயில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி.

* கிராம புற பூசாரி ஓய்வூதியம் அதிகரிப்பு.

* இந்து ஆலயங்கள் புனரமைக்கப்படும்.

* 205 அர்ச்சகர்களுக்கு உடனடி பணி நியமனம்.

* 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை 1500 ஆக அதிகரிப்பு

* மற்ற ஓய்வூதியங்களும் 1500 ஆக அதிகரிப்பு.

* கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்.

*பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைக் களைய சைபர் காவல் நிலையங்கள் கொண்டுவரப்படும்.

*கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

*கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன்களுக்குள் இருக்கும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

*பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக பால் வழங்கப்படும்.

*200 தடுப்பணைகள் கட்ட 2000 கோடி ரூ ஒதுக்கீடு.

* சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்.

* ஆறு மாசு அடைவதை தடுக்க தமிழக ஆறு திட்டம்.

* கரோனாவில் உயிரிழந்த முன் களப்பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு.

* பத்திரிகையாளர், ஊடகத்துறையினர் தனி ஆணையம், ஓய்வூதியம் அதிகரிப்பு.

* பேறுகால உதவித்தொகை 25000 ரூபாயாக அதிகரிப்பு.

* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை.

* சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு.

* புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

* 3 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும்.

*ஆன்மீக சுற்றுலா செல்ல 25ஆயிரம் வழங்கப்படும்.

*பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்படும்.

*பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

*ஜெயலலிதா மறைவு குறித்த விசாரணை ஆணையம் மூலம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பல அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

DMK leader Stalin releases Election manifesto 2021

யோகிபாபுவின் ‘மண்டேலா’..; ஏலே படத்தை போல நேரிடையாக டிவி-யில் ரிலீஸ்.?

யோகிபாபுவின் ‘மண்டேலா’..; ஏலே படத்தை போல நேரிடையாக டிவி-யில் ரிலீஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மண்டேலா’.

இதில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார், கனிகா ரவி, சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

விது அய்யனா ஒளிப்பதிவு செய்ய பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இணைந்துள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டூடியோ சசி வெளியிடுகிறார்.

நேற்று இந்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று டீசர் வெளியாகிறது.

இதற்கு முன்பு ‘ஏலே’ படத்தை நேரடியாக விஜய் டிவியில் வெளியிட்டு அதன் பிறகு ஓடிடி தளத்தில் வெளியிட்டார் ஒய் நாட் சசி.

அதே போன்று ‘மண்டேலா’ பட ரிலீசையும் டிவி & ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறாராம்.

Yogi Babus Mandela Teaser and Release updates

https://www.youtube.com/watch?v=L73MUTAuTiIiYogiBabu

‘தளபதி 65’ படத்தில் விஜய் கேரக்டர் இதுதானா..? அட செமயாய் இருக்கும்ல..

‘தளபதி 65’ படத்தில் விஜய் கேரக்டர் இதுதானா..? அட செமயாய் இருக்கும்ல..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

விஜய்யின் 65-வது படமாக இது உருவாகவுள்ளதால் தளபதி 65 என்றே அழைக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க பூஜா ஹெக்டே இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இதில் விஜய்க்கு மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன என அன்பறிவ் சகோதரர்கள் (ஸ்டண்ட் இயக்குனர்கள்) தெரிவித்து இருந்தனர்.

கேஜிஎப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்தப் படத்தில் ஒரு ரகசிய உளவு அதிகாரியாக அதாவது ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்க இருக்கிறார் தளபதி்.

Vijays Thalapathy 65 Character updates

‘வலிமை’ & ‘டாக்டர்’ அப்டேட் கொடுத்த கலெக்டர்..; நீங்க வேற லெவல் ப்ரோ என பாராட்டிய சிவகார்த்திகேயன்

‘வலிமை’ & ‘டாக்டர்’ அப்டேட் கொடுத்த கலெக்டர்..; நீங்க வேற லெவல் ப்ரோ என பாராட்டிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் டார்ச்சர் செய்யவே “எங்களை புரிந்துக் கொண்டு பொறுமை காக்கவும்” என அறிக்கை விட்டார் நடிகர் அஜித்.

இதனால் அடங்கிப் போன ரசிகர்களுக்கு திடீரென ‘வலி-மை’ அப்டேட் கொடுத்தார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்.

இவர் வித்தியாசமான முறையில் வலிமை அப்டேட் என்கிற பெயரில் ஓட்டு போட விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

உங்கள் வாக்கு வலி *மை* நிறைந்தது என தன் ட்விட்டரில் பதிவிட்டார்.

ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது. 100% ஓட்டு தான் இந்தியர்களின் பெருமை.” என குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது டாக்டர் அப்டேட் எனக் குறிப்பிட்டு, சிவகார்த்திகேயன் மாஸ்க் அணிந்த படி இருக்கும் போஸ்டரை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு சிவகார்த்திகேயன் ‘நீங்க வேற லெவல் பிரதர்’ உண்மையிலேயே இது மிகவும் பொறுப்பான ஒரு செயல். நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

தயவு செய்து அனைவரும் வாக்களிக்க செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், ‘அதான் டாக்டரே சொல்லிட்டாரே, நாம் மாஸ்க் அணிந்து ஓட்டளிப்போம்’ என்று பதிலளித்துள்ளார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்.

Tirupur District Collector about Valimai and Doctor updates

பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி

பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

asuran manju warrierகேரளாவில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர்.

தமிழில் பல வாய்ப்புகள் வந்தபோதும் மறுத்தவர்.

ஆனால் கடந்த 2019ல் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தார்.

தற்போது முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் மஞ்சு வாரியர்.

ஹிந்தியில் மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியார்.

கல்பேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.

Actress Manju Warrier to act with Madhavan

கமல் கட்சிக்கு அழைத்தாலும் நோ.. மக்கள் தெளிவாக உள்ளனர்..; உஷாரான ஆதி

கமல் கட்சிக்கு அழைத்தாலும் நோ.. மக்கள் தெளிவாக உள்ளனர்..; உஷாரான ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திரைப்பட புகழ் நடிகர் ஆதி பங்கேற்றிருந்தார்.

முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆதி:

“நற்பணி மன்றத்தினரை சந்திக்கும் நேரங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, சமூக பணிகளில் ஈடுபடுவது வழக்கம். நம்மை பார்த்து மற்றவர்கள் நன்மை செய்ய வேண்டுமென்பதை ரசிகர்களுக்கு அறிவுறுத்துவதாகவும்

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அழைத்தால் செல்வீர்களா என்கிற கேள்விக்கு

இப்பொழுது நடிப்பில் கவனம் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

தற்போது மக்கள் விழிப்புடன் உள்ளனர் நல்லது செய்பவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்றார்.

விஜயகாந்த், கமல் என சினிமாத்துறையினர் தொடர்ந்து அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு:

அரசியலுக்கு சினிமாத்துறையினர் வரக்கூடாது என்பதில்லை சேவை செய்ய எந்த துறையினரும் அரசியலுக்கு வரலாம் என்றார்…

அடுத்து கிளாப், பார்ட்னர் என்கிற தமிழ் படங்களும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருவதாக கூறினார்

அவருடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.

Actor Aadhi reply on joining politics

More Articles
Follows