தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா.; மருத்துவமனையில் அனுமதி

கேப்டன் என மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த்.

சினிமாவிலிருந்து விலகி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை 2005ல் தொடங்கினார்.

கடந்த சில மாதங்களாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் (வயது 68) உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

DMDK Leader Vijayakanth tests Corona Positive

Overall Rating : Not available

Latest Post