அற்புதமான இதயங்கள் இணைந்த அழகான திருமணம்.; எமி & எட்-க்கு விஜய் வாழ்த்து

அற்புதமான இதயங்கள் இணைந்த அழகான திருமணம்.; எமி & எட்-க்கு விஜய் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அற்புதமான இதயங்கள் இணைந்த அழகான திருமணம்.; எமி & எட்-க்கு விஜய் வாழ்த்து

நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!*

மதராசபட்டினம் படம் மூலம் எமி ஜாக்சனை இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் விஜய்.

இதனையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலர் எமி ஜாக்சன்.

இந்த நிலையில் எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்.

இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி…

‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி.

உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Director Vijay wishes Amy Jackson for her wedding

முதல் நாளில் 25 கோடியை அள்ளி உலகளவில் ₹ 100 கோடியை நெருங்கும் ‘தங்கலான்’

முதல் நாளில் 25 கோடியை அள்ளி உலகளவில் ₹ 100 கோடியை நெருங்கும் ‘தங்கலான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல் நாளில் 25 கோடியை அள்ளி உலகளவில் ₹ 100 கோடியை நெருங்கும் ‘தங்கலான்’

*தங்கலான் – உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணம்.

சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது.

தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முதல் நாள் வசூலை கொண்டு வந்தது.

ரூபாய் 26 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

இப்படத்தின் இரண்டாவது வாரம், தமிழ்நாட்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருந்த போதிலும், வசூலில் ஸ்டெடியாக இப்படம் சென்று கொண்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானாவில், பெரும் வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் இப்படம் 141 தியேட்டர்கள் அதிகரித்து, தற்போது 391 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 30-ம் தேதியன்று மும்பை, டெல்லி மற்றும் அனைத்து வட மாநிலங்களில் தங்கலான் வெளியாக உள்ளது.

அதன் மூலம் மேலும் பல கோடிகளை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இப்படத்திற்கு கிடைத்த வெற்றிகளினால், தயாரிப்பாளருக்கு அவரின் முதலீட்டை தாண்டி வசூல் செய்யும் என அனைவராலும் பேசப்படுகிறது.

பா. ரஞ்சித் அவர்களின் சிறப்பான இயக்கத்தால், உருவான தங்கலான் திரைப்படத்தில், சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி என பல நடிகர்கள் தங்களின் சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.

சீயான் விக்ரம் அவர்கள் இப்படத்திற்காக கொடுத்த உழைப்பையும், அர்ப்பணிப்பையும், ஆகச்சிறந்த நடிப்பையும் பாராட்டாத பார்வையாளர்களோ ஊடகங்களோ இல்லை. அந்த அளவு தன் மாபெரும் உழைப்பை இப்படத்திற்காக விக்ரம் அவர்கள் கொடுத்துள்ளார்.

கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இப்படம், 18-ம், மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்கள், அவர்களின் போராட்டங்கள், மேஜிக்கல் ரியலிசம் என பல புதுமையான விஷயங்களை உள்ளடக்கி, ஒரு சிறந்த காட்சி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் G.V. பிரகாஷ் குமாரின் பாடல்களும், பின்னணி இசையும், பெரிய பலமாக அமைந்துள்ள தங்கலான், 2024-ல் ஒரு மறக்க முடியாத திரைப்படமாகவும், ரூபாய் 100 கோடியளவில் வசூல் செய்த ஒரு படமாகவும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இருக்கும்.

Thangalaan movie nearing 100cr in WW collection

கோலிவுட் மறந்த நடிகர்களை மீண்டும் அழைத்து வரும் விஜய் ஸ்ரீஜி

கோலிவுட் மறந்த நடிகர்களை மீண்டும் அழைத்து வரும் விஜய் ஸ்ரீஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் மறந்த நடிகர்களை மீண்டும் அழைத்து வரும் விஜய் ஸ்ரீஜி

தாதா 87, பவுடர், ஹரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய் ஸ்ரீஜி… இவர் இந்த மூன்று படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக காணாமல் போன நடிகர்களை இவர் மீண்டும் அழைத்து வந்து நடிக்க வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

தாதா 87 என்ற படத்தில் சாருஹாசனை கதையின் நாயகனாக நடிக்க வைத்து வித்தியாசமாக கதை சொல்லியிருந்தார். அதுபோல ‘பவுடர்’ படத்தில் பிஆர்ஓ நிகில் முருகனை முதன்மை வேடத்தில் நடிக்க வைத்திருந்தார்.

மேலும் சமீபத்தில் வெளியான ஹரா என்ற படத்தில் நடிகர் மோகனுக்கு ரிஎன்ட்ரி கொடுத்திருந்தார்.

தற்போது கோட் GOAT படத்தில் விஜய்க்கு வில்லனாக மோகன் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

‘ஹரா’ படம் ஓடிடி தளத்தில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இயக்குனர் விஜய் ஸ்ரீ தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பெயர் மகேஸ்வரா.. இதில் நாயகனாக அம்சவர்தன் நடிக்கிறார்.

நடிகர் ஹம்சவர்தன்.. மந்திரன், புன்னகை தேசம், மானசீக காதல், பிறகு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.. இவர் 1970களில் கலக்கிய பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஆவார்..

மகேஸ்வரா பர்ஸ்ட் லுக்கில் யானை பின்னணியில் இருக்கும் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது..

‘ஹரா’ படத்திற்கு இசையமைத்த ரசாந்த் அரவின் இசையமைக்க மோகன் குமார் ஒளிப்பதிவு செய்ய சண்டை பயிற்சிகளை தினேஷ் மேற்கொள்ள ரெட் டிராகன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே விஜய் ஸ்ரீஜி மற்றும் அம்சவிருதன் இருவரும் ‘பீட்ரு’ என்ற படத்திற்காக இணைந்திருந்தனர்… இந்தப் படத்தின் போஸ்டர்கள் சோசியல் மீடியாக்களில் ஏற்கனவே வெளியான நிலையில் அந்த படம் என்ன ஆனது? என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Vijay sri next movie titled Maheshwara

#RedDragonEntertainment

@Hamsavirdhan In & As #Maheshwaraa

A @vijaysrig witness

#மகேஷ்வரா @rashaanth #Mohankumardop @DineshAction360

An New Attempt of Statistical Commercial & Intelligent film

Title Teaser releasing Soon …

@onlynikil

சதீஷ் & வெண்பா இணைந்த ‘சட்டம் என் கையில்’ ரிலீஸ் அப்டேட்

சதீஷ் & வெண்பா இணைந்த ‘சட்டம் என் கையில்’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சதீஷ் & வெண்பா இணைந்த ‘சட்டம் என் கையில்’ ரிலீஸ் அப்டேட்

‘சட்டம் என் கையில்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சதீஷ்.

‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகை சம்பதா நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் இளம் நடிகை வெண்பா நடித்துள்ளார்.

மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியை தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Sathish and Venba starring Sattam En Kaiyil movie release update

விஜயகாந்த் ஆசியுடன் பொன்ராம் இயக்கத்தில் சரத் & சண்முக பாண்டியன்

விஜயகாந்த் ஆசியுடன் பொன்ராம் இயக்கத்தில் சரத் & சண்முக பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் ஆசியுடன் பொன்ராம் இயக்கத்தில் சரத் & சண்முக பாண்டியன்

ஆகஸ்ட் 25ஆம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் தொண்டர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

விஜயகாந்த் மறைவிற்குப்பின் வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு 72 பேருக்கு விஜயகாந்த் உருவம் கைகளில் டாட்டூ போடப்பட்டது..

இந்த நிலையில் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பு விஜயகாந்த் நினைவிடத்தில் வெளியானது.

அதன்படி பொன்ராம் இயக்கத்தில் முகேஷ் செல்லையா தயாரிப்பில் சரத்குமார்- சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படக்குழுவினர் விஜயகாந்த நினைவிடத்தில் நல்லாசி பெற்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் & ரஜினி முருகன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பொன்ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijayakanth son Shanmuga Pandiyan joins with Sarathkumar

தண்ணீரை மட்டுமே குடித்து கிளைமாக்ஸ் சீனை படமாக்கிய ‘கெவி’ படக்குழு

தண்ணீரை மட்டுமே குடித்து கிளைமாக்ஸ் சீனை படமாக்கிய ‘கெவி’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!*

*அறிமுக படத்திலேயே அடிபட்டு, தீக்காயம் பட்டு அர்ப்பணிப்புடன் நடித்துள்ள நடிகர் ஆதவன்*

*வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு ஒன்றரை நாட்கள் ‘கிளைமாக்ஸை படமாக்கிய ‘கெவி’ படக்குழுவினர்*

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘வெள்ளக்கெவி’ கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’.

ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி (ARTUPTRIANGLES FILM KAMPANY) சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார்.

கதாநாயகனாக நடிகர் ஆதவன் அறிமுகமாகிறார். ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலசுப்பிரமணியம் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர்.

சமீபத்தில் இப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இசையமைப்பாளர் தேவா பாடிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’ (Hill Anthem) ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ரிலீஸை நோக்கி படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன,. இந்த நிலையில் படத்தின் நாயகன் ஆதவன் இந்தப் படத்தில் தான் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

“சிறுவயதிலேயே படங்கள் பார்க்கும்போது அதில் வரும் கதாபாத்திரங்களாக என்னை நானே கற்பனை செய்து கொள்வேன். அதனால் சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தபோது கூட நடிப்புக்கென எங்கேயும் சென்று பயிற்சி பெறாமல் படங்களைப் பார்த்தே நடிப்பைக் கற்றுக்கொண்டேன்.

படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு ஒரு பக்கம் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டே இன்னொரு பக்கம் ஆட்டோ, கார் என ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட தயாரிப்பாளர் மூலமாக சினிமாவிற்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு அப்படியே ஒரு நண்பர்கள் கூட்டம் உருவானது. பின் அனைவரும் ஒன்று சேர்ந்து குறும்படம் ஒன்றை உருவாக்கி நாளைய இயக்குநர் போட்டியில் பங்கேற்றோம்.

அதன்பின் ஒரு முழு நீள படம் தயாரிக்கும் எண்ணம் உருவானது. சில பல முயற்சிகளுக்கு பிறகு நாங்களே படம் தயாரிப்பது என முடிவுக்கு வந்தோம்.

அப்படி ஒரு கதையை உருவாக்கி விட்டு அதற்கான லொக்கேஷன் தேடுவதற்காக கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தேர்வு செய்தோம். போக்குவரத்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த கிராமம் எங்களுக்கு பொருத்தமாக இருந்ததுடன் அந்த கிராமத்தில் நாங்கள் உருவாக்கி வைத்திருந்த கதை போன்றே நடந்த நிஜ சம்பவங்களும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் கூட ஒருவர் உடல் நலக் குறைவால் இறந்து போனது மிக வருத்தமான செய்தி. எங்கள் படம் போன்றே நடந்திருக்கிறது. யூனிட்டே வருத்தமானோம்.

‘கெவி’ படத்தில் மலைக் கிராமத்தில் வசிக்கும், எந்தப் பிரச்சனைக்கும் போகாத ஒரு சாதாரண இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் அந்த கிராமத்திற்கு அவனால் ஒரு பிரச்சனை வந்த போது அதை சமாளிக்க முடிந்ததா? என்பது போல எனது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் எனது தலை முடியையும் தாடியையும் வெட்டாமல் வளர்த்தேன். இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் இந்த படம் தொடங்கப்பட்ட சமயத்தில் எனது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்திருந்த சமயத்தில் சில காரணங்களால் படப்பிடிப்பு காலம் நீண்டு கொண்டே போனது. எனது மற்றும் மனைவி குடும்பத்தினர் என் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஆதரவளித்தனர்.

என்னுடைய தாடியை எடுக்காமலேயே திருமணம் நடைபெற்றது. அந்த அளவிற்கு இந்த

படத்தின் மீது எங்கள் குழுவினர் வெகுவாக நம்பிக்கை வைத்துள்ளோம்

கிட்டத்தட்ட 110 நாட்கள் வெள்ளக்கெவி பகுதியில் கோடை காலம், குளிர் காலம் என இரண்டு சீதோஷ்ண நிலையிலும் படப்பிடிப்பு நடத்தினோம். அதிலும் கோடைகாலத்தில் இந்தப் பகுதியில் தண்ணீரே கிடைக்காது.

அது மட்டுமல்ல நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதியில் எங்களுக்கு வேண்டிய உணவை நாங்களே தயாரித்து தான் கீழே இருந்து மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்வோம்.

படப்பிடிப்பு துவங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே நான் இந்தப் பகுதிக்கு வந்து இங்குள்ள மக்களுடனேயே வாழ ஆரம்பித்து விட்டேன்.

படத்தில் முதல் 20 நிமிடம் தான் நான் முழு ஆடையுடன் வருவேன். அதன் பிறகு மீதி படம் முழுவதும் ஒரு காக்கி டவுசர் மட்டுமே எனது உடையாக இருக்கும். இந்த உடையுடன் குளிர்காலத்தில் வனப்பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பில் உடலெங்கும் சேரும் சகதியுமாக பூசிக்கொண்டு நடித்தது மிகக் கடினமான விஷயமாகவே இருந்தது.

சண்டைக் காட்சியின் போது ஒரு முறை நெருப்பில் அடித்தபோது காலில் காயம் ஏற்பட்டு அதனால் பல நாட்கள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு சில சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது அது நிஜமாக இருக்க வேண்டும் அதேசமயத்தில், சிறிது சுணங்கினாலும் அக்காட்சியை மீண்டும் படமாக்க நேரும். அது அனைவருக்கும் சிரமம் என்பதால் அடியின் வலியைத் தாங்கிக் கொண்டு நடித்தேன்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மலை உச்சியில் கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் படமாக்கப்பட்டது. அங்கே எளிதாக சாப்பாடு கொண்டு செல்ல முடியாததால் ஒரு கேன் தண்ணீரை வைத்துக் கொண்டு சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம்.

இவ்வளவு கடினமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்த வேண்டுமா? என பலரும் கேட்டனர். ஆனால் படம் ரியலிஸ்டிக்காக ஆக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு சிரமங்களையும் நாங்கள் எதிர்கொண்டோம்.

அதுமட்டுமல்ல, மலைவாழ் மக்களின் வலியைச் சொல்வதற்கு அந்த வலியை நாங்களும் தாங்கிக்கொண்டு பணியாற்றுவது அவசியமாக இருந்தது.

படத்தில் சினிமா நடிகர்கள் என கணக்கிட்டால் நாங்கள் வெறும் ஆறு பேர் மட்டும் தான். மற்றபடி அந்தப் பகுதி மக்கள்தான் இப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகியான ஷீலா நாற்பது நாட்களுக்கும் மேல் வெயிலிலும் குளிரிலும் மெனக்கிட்டு நடித்தார். நாங்கள் சமாளித்துவிடலாம். ஆனால் ஊசிக் குத்தும் குளிரில் நடித்தார்.

இன்னொரு நாயகியான விஜய் டிவி ஜாக்குலினும் குளிரை சமாளித்து பேருதவியாக நின்று நடித்துக் கொடுத்தார். அதேபோன்று ‘தர்மதுரை’ ஜீவா அக்காவும் முழுமையாக அர்ப்பணித்து நடித்தார். நான் மட்டுமல்ல ..ஒட்டுமொத்த குழுவும் இல்லையென்றால் இந்தப் படம் சாத்தியமே இல்லை. இயக்குநர் தமிழ் தயாளனுக்கும் ஒளிப்பதிவு செய்த ஜெகனுக்கும் என் நன்றிகள். நாங்கள் நண்பர்கள்தான். ஆனால் படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் எல்லா வலியையும் தாங்கத் தயாராகிவிடுவோம். எல்லா சுமைகளையும் சேர்ந்து சுமப்போம். நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் இது.

தங்குவதற்கு என எந்த ஒரு வீடும் கிடைக்காததால் தனியாக டென்ட் அடித்து தங்கினோம். இதுதான் கதாநாயகிகளுக்கு நாங்கள் செய்து கொடுத்த அதிகபட்ச வசதி. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்குவதற்கு முன்பாக மிகப்பெரிய புயல் ஒன்று வீசியது. அந்த பேராபத்திலிருந்தும் தெய்வாதீனமாக தப்பித்தோம்.

இந்த படத்தில் நடித்த காலக்கட்டத்தில் எனக்கு மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் இந்தப் படத்தை முடித்துவிட்டுத் தான் அடுத்த படத்தில் நடிப்பது என உறுதியாக இருந்துவிட்டேன்.

இப்போது படம் பார்த்தபோது அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டேன் என்கிற மனநிறைவு இருக்கிறது”.

” கமல் சார், விக்ரம் சார், ‘நான் கடவுள்’ படத்திற்காக ஆர்யா சாரெல்லாம் கஷ்டப்பட்டதைவிட நானொன்றும் பெரிதாக கஷ்டப்படவில்லையென்றாலும் அவர்களின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் மனதில் வைத்துக்கொண்டு நடித்தேன். அதில் ஒரு துளி அளவிற்குக் கூட நாம் நம் படத்திற்காக உழைக்கவில்லையென்றால் எப்படி? என்கிறார் ஆதவன், தன்மையாக!!

More Articles
Follows