அரசியல்வாதிகளை அச்சுறுத்தும் நடிகர்கள்..; டைரக்டர் எஸ்ஏசி ஓபன் டாக்

Director SA Chandrasekar talks about Actors in Politicsஇயக்குனர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’.

திரைப்படங்களை சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இணையத்தில் பதிவேற்றப்படுவதை தடுப்பதற்காக ஒரு மணி நேர விழிப்புணர்வு படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்துக் கொண்டு பேசினார்.

நாம் எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. படம் ரிலீசாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகிறது.

இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான். எத்தனை முறை ஆட்சி மாறினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு பிறகு, வேறு எந்த ஆட்சியாளர்களும் சினிமாவுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

அரசியல்வாதிகளுக்கு சினிமாக்காரர்களை பார்த்து பயம். எங்கே நம்ம இடத்துக்கு இவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம்.

பைரசி இணையதளத்துக்கு அரசியல்வாதிகள் தான் ஏஜெண்டாக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இல்லை என்றால் அவர்களால் இத்தனை தைரியமாக செயல்பட முடியாது.” இவ்வாறு அவர் கூறினார்.

Director SA Chandrasekar talks about Actors in Politics

Overall Rating : Not available

Latest Post