பரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’: கொரோனா ஊரடங்கில் பல மைல்களை கடந்து 14 மாநிலங்களில் 117 பேர் படமாக்கினர்.!

பரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’: கொரோனா ஊரடங்கில் பல மைல்களை கடந்து 14 மாநிலங்களில் 117 பேர் படமாக்கினர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharat Balaஇந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். அனைவருடைய வாழ்க்கையிலும் இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது.

இதுவொரு திருப்புமுனை. இதை வரும் தலைமுறைகளுக்காக நாம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது அனைவருடைய மனதிலே இருந்தது. அதை இயக்குநர் பரத்பாலா செயல்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் எல்லா தலைமுறைக்காகவும் இந்தியாவை புதிய கோணத்தில் காட்சியமைத்து பதிவு செய்யும் இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ‘வந்தே மாதரம்’, ‘ஜன கன மன’, மேலும் ஜியோ உடோ படோ ஜீதோ, காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ காணொலி என அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்தக் காணொலிகள் அனைத்துமே தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படக் கூடியவை.

தற்போது இந்த கொரோனா ஊரடங்கை ‘மீண்டும் எழுவோம்’ என்ற பெயரில் ஆவணப்படுத்தியுள்ளார்..

தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து இதனை சாத்தியப்படுத்தியுள்ளார். வரும் தலைமுறைகளுக்காக இயக்குநர் பரத்பாலாவும், அவருடைய 117 பேர் கொண்ட 15 குழுக்களும் இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை தங்கள் கேமராக்களில் காட்சிகளாகச் சிறை பிடித்துள்ளனர்.

கண்டிப்பாக வரும் தலைமுறையினர் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய் தொற்றால் இந்தியா எப்படி முழுமையாக ஸ்தம்பித்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தப் படப்பிடிப்புக்கான தலைமை கட்டுப்பாட்டு அறையை மும்பையில் அமைத்து அங்கு ஒரு குழு வாரத்தின் அனைத்து நாட்களும் பூட்டப்பட்டே இருந்தனர். 14 மாநிலங்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து படம்பிடித்த காட்சிகள் அனைத்தையுமே இந்த குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

களத்திலிருக்கும் குழுக்கள் வாட்ஸ்-அப் வீடியோ கால், ஜும் செயலி உள்ளிட்ட தொழில்நுட்ப வாயிலாக பரத்பாலாவை தொடர்பு கொண்டு இதனை படமாக்கினர். தேவைப்படும் காட்சிகளை இங்கிருந்து கூற அதனைப் படக்குழுவினர் முழுக்க தொழில்நுட்ப வாயிலாகவே இந்தியா முழுக்கவே காட்சிப்படுத்தி சாதனை புரிந்துள்ளனர்.

4 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப் படம் கண்டிப்பாக இந்தியாவின் கொரோனா ஊரடங்கைப் பார்ப்பவர்களுக்கு எடுத்துரைக்கும் இப்படத்திற்கு ‘மீண்டும் எழுவோம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஊரடங்கிலிருந்து, பொருளாதார இழப்பிலிருந்து எப்படி மீண்டு வந்துள்ளோம் என்பதை வரும் தலைமுறையினர் கண்டிப்பாக உணரும் வகையில் இருக்கும்.

வரும் 6ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது

இப்படத்தின் 4 நிமிட தொகுப்பினை அனைத்து ஊடகங்களும் வரும் 13ம் தேதி வரை நேரடியாக முழுவதும் எடிட் செய்யாமலும்
அளிக்கப்படும் லிங்கினை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்

என விர்டுவல் பரத் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்படுகிறது.

கொள்ளையடிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம்…; பிரசன்னா கண்டனம்

கொள்ளையடிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம்…; பிரசன்னா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor prasannaகொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதனையடுத்து மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பழைய மின்சார கட்டணங்களையே செலுத்துமாறு தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது கணக்கெடுக்கப்படும் மின்சார ரீடிங்கின் படி அதிக தொகை செலுத்தும் நிலை உருவாகியிருப்பதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் பிரசன்னா, இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தியேட்டர்கள் திறந்தாலும் ‘மாஸ்டர்’ ரிலீஸ் இப்போ வேண்டாம்..; முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்!!

தியேட்டர்கள் திறந்தாலும் ‘மாஸ்டர்’ ரிலீஸ் இப்போ வேண்டாம்..; முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keyarதிரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று அவர்கள் நினைப்பது தவறு இல்லை. ஆனால் கொரோனோ வைரஸின் கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் முதல் படமாக ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை.

சாதாரண சலூன் கடைக்கு முடிவெட்ட செல்வதற்கே ஆதார் கார்டு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமல்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல.

டிக்கெட் கவுண்டரில் கூடுவது, இடைவேளையில் கேன்டீன்களில் முண்டியடிப்பது, டாய்லெட்டில் கூட்டமாக நுழைவது என்று எங்கும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் நடிக்கும் படங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே வசூலில் சாதனை செய்து வருகின்றன.

விஜய்யின் மாஸ்டர் படம் வெளிநாட்டு உரிமை மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அரபு நாடுகளில் மட்டுமே திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதிலும் 30 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வசூலை குவிக்கக்கூடிய ஒரு படத்திற்கு வெளிநாட்டில் வசூலை எடுக்க முடியாத நிலை ஏற்படும். அதேபோல இந்தியாவிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் நிச்சயமாக 100 சதவீதம் பார்வையாளர்களை அரசாங்கம் அனுமதிக்காது. குறைந்தது 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் இந்தப் படத்திற்கான வசூல் பாதிக்கப்படும். அது மற்ற ஹீரோக்களின் வியாபாரத்தையும் பாதிக்கும். எனவே பல கோணங்களில் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப் படுவதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வருமான இழப்பை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து, கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கும் தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் சிறிய படங்களுக்கு வரப்போகும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது திரையரங்குகளுக்கு எளிதாக இருக்கும்.

ரசிகர்களுக்கும் விதிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டு விடும். அதன்பிறகு பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது அதிக ரசிகர்கள் வந்தாலும் தியேட்டர்காரர்களால் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை முறைப்படி அமல்படுத்த முடியும்.

ஒருவேளை தமிழக அரசு தியேட்டர்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைவிட தியேட்டர்கள் திறப்பதை தள்ளிப் போடுவதே சாலச்சிறந்தது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள 90சதவீதம் திரையரங்குகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை.

அத்துடன் ஏசி வசதி இல்லாமல் இரண்டரை மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது மிக கடினமான விஷயம்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இப்படிக்கு,
கேயார்,
முன்னாள் தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

நாள்: 04.06.2020
சென்னை.

Attachments

மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தும் நடிகர் மகேஷ் பாபு .?

மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தும் நடிகர் மகேஷ் பாபு .?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahesh babu sonமகேஷ் பாபு நடிப்பில் பரசுராம் பெட்லா இயக்கியுள்ள படம் சர்கரு வாரி பாட்டா.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதை எடுத்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாற்றினார் மகேஷ் பாபு.

அப்போது ரசிகர் ஒருவர்.. “உங்கள் மகன் சினிமாவில் நடிக்க சம்மதிப்பீர்களா? என கேட்டுள்ளார்.

ஹீரோவாக வேண்டும் என அவர் விரும்புவதாக நான் நினைக்கிறேன். காலம் பதில் சொல்லும்” என மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் மீண்டும் இணையும் பிரபுதேவா நயன்தாரா..?

ஐசரி கணேஷ் தயாரிப்பில் மீண்டும் இணையும் பிரபுதேவா நயன்தாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu deva and nayantharaநடிகர் சங்கத்துக்கு உதவும் வகையில் பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்த படத்தில் சாயிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

கடந்த 2017-ம் ஆண்டு இந்த படம் தொடங்கப்பட்டது.

ஆனால் சில பிரச்சினைகளால் இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் இந்த படத்தை தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

கார்த்தியும் விஷாலும் இணைந்து நடிப்பார்களா? என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா.

அதனையடுத்து இருவரும் சில ஆண்டுகள் காதலித்தனர். திருமணம் வரை சென்ற அவர்களது காதல் திடீரென முறிந்தது.

தற்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வருகிறார்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் ஐசரி கணேஷ் தரப்பில்… ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ படம் மீண்டும் உருவாகவில்லை. அதுகுறித்து பரவிவரும் செய்திகள் உண்மையில்லை. ” என கூறியுள்ளார்.

பசியால் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை.; குழந்தையை தத்து எடுத்தார் ஷாருக்கான்

பசியால் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை.; குழந்தையை தத்து எடுத்தார் ஷாருக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shah Rukh Khanகடந்த மாதம் மே 27ந் தேதி அன்று பீகார் மாநிலம் முசார்பர்புர் நகர் ரயில் நிலையத்தில் ஒரு இளம் தாய் பசியால் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

அவரது உடல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கிடத்தப்பட்டு, துணியால் மூடப்பட்டிருந்தது.

தன் தாய் இறந்ததை கூட அறியாத பிஞ்சுக் குழந்தை தாயை எழுப்ப முயன்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் ‘மீர்’ பவுண்டேஷன் அந்த குழந்தையை தத்து எடுத்துள்ளது.

இது தொடர்பாக டிவிட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

பெற்றோரை இழந்த வலியை, தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த வலி எப்படி இருக்கும் என்று தமக்கு தெரியும் என்று குறிப்பிட்ட ஷாரூக், நமது அன்பும் ஆதரவும் குழந்தைக்குத் தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More Articles
Follows