வர்மா படக்காட்சிகளை சுட்ட ஆதித்ய வர்மா .; விக்ரமுக்கு பாலா வார்னிங்

வர்மா படக்காட்சிகளை சுட்ட ஆதித்ய வர்மா .; விக்ரமுக்கு பாலா வார்னிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bala warning to Vikram and Adithya Varma movie teamதெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி.

அப்படத்தை டைரக்டர் பாலா தமிழில் ரீமேக் செய்தார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க இ4 எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்தது.

ஆனால் படம் திருப்தியில்லை என தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்ய மறுத்துவிட்டது.

எனவே படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என மாற்றி அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா என்பவரை இயக்க வைத்தனர்.

இதிலும் துருவ் விக்ரமே நாயகனாக நடித்தார்.

இந்நிலையில், ஆதித்ய வர்மா படத்தின் பெரும்பாலான காட்சிகள், வர்மா படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது என தகவல் கசிய தயாரிப்பு நிறுவனம், துருவ் விக்ரமின் அப்பா நடிகர் விக்ரம் ஆகியோருக்கு, இயக்குநர் பாலா கடிதம் எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது.

வர்மா படத்தை கைவிட்டப்பின் அதில் உள்ள காட்சிகளை பயன்படுத்த கூடாது என எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Director Bala warning to Vikram and Adithya Varma movie team

மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் விஜய்; டைரக்டர் இவரா?

மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் விஜய்; டைரக்டர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After long time Actor Vijay plans to produce moviesதளபதி 63 என்று தற்காலிக பெயர் கொண்ட படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அட்லி இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை பற்றி பார்த்தோம்.

‘மாநகரம், கைதி’ படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் தான் விஜய் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை விஜய்யே தயாரிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன.

பல வருடங்களுக்கு முன்பு ‘ரசிகன், செந்தூரபாண்டி’ ஆகிய படங்களை விஜய்யின் உறவினரான பிரிட்டோ என்பவர் தயாரித்திர்.

பிவி கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்தனர்.

தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவுள்ளார்.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், விஜய்யின் மேனேஜரான ஜெகதீஷும் லைன் புரொடியூசர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகிறது.

After long time Actor Vijay plans to produce movies

ஆக்சனில் களம் இறங்கும் நடிகர் சௌந்தரராஜா

ஆக்சனில் களம் இறங்கும் நடிகர் சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெரி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம்,மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சில்லுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும், எனக்கு வேறு எங்கும்கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சௌந்தரராஜா முதன் முறையாகமுழுநீள ஆக்சனில் களம் இறங்கியிருக்குறார்.

காபி என்னும் திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் சௌந்தரராஜா, சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார்.இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ஓம் சினி வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாரதி மற்றும் சதீஷ் இத்திரைப்படத்தை அதிகபொருள் செலவில் தயாரிக்கின்றனர்.

மேலும் நடிகர் சௌந்தரராஜா AGS தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63யிலும், இளைய தளபதி விஜயுடன் ஒரு முக்கியமான வேடத்தில்நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது சிறப்பு செய்தி.

‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..!

‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

‘நாகேஷ் திரையரங்கம்’ புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தின் இயக்குனர் விஜயன் கூறியதாவது,

” பேரழகி ஐ.எஸ்.ஓ ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.

ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். ஷில்பா தான் அந்த ரோலை செய்துள்ளார். அதன் பிறகு நடக்கும் குழப்பங்களை, காமெடியாக கூறியுள்ளோம். ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படமாக பேரழகி ஐ.எஸ்.ஓ இருக்கும்.

ஷில்பா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மொத்தம் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். விஜிபியில் அரண்மனை செட்டு போட்டு சில காட்சிகளை படமாக்கினோம். அது விஜிபி என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் வேலைகள் செய்துள்ளோம். குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை எடுத்துள்ளோம்”, என விஜயன் கூறினார்.

வரும் மே-24முதல் இந்த திரைப்படம் வெளியாகிறது.

ஹீரோ வேண்டாம்; நானே பாத்துக்கிறேன்.. கீர்த்தி சுரேஷ் முடிவு

ஹீரோ வேண்டாம்; நானே பாத்துக்கிறேன்.. கீர்த்தி சுரேஷ் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh new Thriller movie news updatesவிஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் நடித்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே கீர்த்தி சுரேஷ்க்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தது.

ஆனால் இவர் கதையின் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகையர் திலகம் படம் இந்தியளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.

தற்போது இதே பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கிறாராம்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் திரில்லர் பாணி கதையில் கீர்த்தி சுரேஷ் தான் நாயகி. இப்படத்தில் ஹீரோவே இல்லை என்பதுதான் சிறப்பு.

Keerthy Suresh new Thriller movie news updates

காலா – மெர்சல் பாணியில் என்ஜிகே படத்திற்கு கிடைத்த பெருமை

காலா – மெர்சல் பாணியில் என்ஜிகே படத்திற்கு கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Mersal and Kaala Now NGK got emoji in twitterசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்க யுவன் இசையமைத்துள்ளார்.

வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், என்.ஜி.கே படத்திற்கான எமோஜி ஐகான் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குமுன் ‘மெர்சல்’, ‘காலா’ படத்திற்கு ட்விட்டரில் எமோஜியை வெளியிட்டு இருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

After Mersal and Kaala Now NGK got emoji in twitter

More Articles
Follows