‘தேசிங்குராஜா 2’ பட விழாவில் 25 ஆண்டுகளை கொண்டாடும் எழில்

‘தேசிங்குராஜா 2’ பட விழாவில் 25 ஆண்டுகளை கொண்டாடும் எழில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில்.
இப்படத்தை தொடர்ந்து,
அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திகேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த
“பெண்ணின் மனதை தொட்டு”,
ஜெயம்ரவி, பாவனா நடித்த “தீபாவளி”,
விமல் நடித்த “தேசிங்குராஜா”,
விக்ரம் பிரபு நடித்த “வெள்ளகாரதுரை”,
விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்”,
உதயநிதி நடித்த “சரவணன் இருக்க பயமேன்”,
கவுதம் கார்த்திக்-பார்த்திபன் நடித்த “யுத்த சத்தம்”
போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தார்.

இத்தனை நடிகர்களின் ஹிட் லிஸ்டில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இவர் இப்பொழுது,
விமல் நடிக்க “தேசிங்குராஜா2” படத்தை இயக்கி வருகிறார்.

வருகிற 29ம் தேதி இவர், முதன் முதலாக இயக்கிய “துள்ளாத மனமும் துள்ளும்” வெளியாகி 25 வருடங்களாகிறது.

இதை, #எழில்25 விழாவாகவும், #தேசிங்குராஜா2 ஃபர்ஸ்ட் லுக் விழாவாகவும் நடத்த இதன் தயாரிப்பாளர் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் P.ரவிசந்திரன் திட்ட மிட்டுள்ளார்.

வருகிற ஜனவரி 27ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வடபழனி ‘கிரீன் பார்க்’ ஹோட்டலில் விழா நடை பெறுகிறது.

எழில் படங்களின் தயாரிப்பாளர்கள், பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவரும் விழாவில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார்கள்.

முதல் முதலாக டைரக்‌ஷன் வாய்ப்பு கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்திரி இந்நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.

இத்துடன், தேசிங்குராஜா 2 நாயகன் விமல்,
முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஜனா, நாயகிகள் பூஜிதா பொனாடா , ஹர்ஷிதா மற்றும் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் விழாவில் பங்கேற்கிறார்கள்.

இசை: வித்யாசாகர்
இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார்
ஒளிப்பதிவு: செல்வா.ஆர்
எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார்
ஆர்ட்: சிவசங்கர்
வசனம்-முருகன்
ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்’ கார்த்திக் ( Fire Karthik )
நடனம் : தினேஷ்
பாடல்கள்: யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம்
பி.ஆர்.ஓ: ஜான்சன்

படபிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது.

Dir Ezhil will celebrate his 25 years at Desinguraja2 event

Till Now Dir Ezhil’s Producers List:

● Thullatha Manamum Thullum – R.B.Choudary
● Penning Manathai Thottu – Roja combines – kaja mohideen
● Poovellam Un Vaasam – Aascar Film V.Ravichandran
● Raja – Thiruvengadam ( late )
● Amudhae – Karu Nagaraj
● Deepavali – Linguswamy , Subash Chandra Bose
● Manam koththi Paravai – Ambedh Kumar , Rajiv ( friend of dir ezhil )
● Desingu Raja – Escape Artist Madhan
● Vellakara durai – Anbu chezhiyan
● Velainnu Vanthutta Vellakkaran – Foxstar studios , Vishnu Vishal
● saravanan irukka bayamaen
– Red gaint – Udhayanidhi stalin , Shenbagamoorthy, Arjun Dhurai.
● Yutha satham – Kallal films – Saravanan
● Jaga jaala killadi – Ishan production – Dhushyanth
● Ayiram Jenmangal – Ramesh pillai

And Now P.Ravichandran.

Till Now Dir Ezhil’s Artist List:

● Vijay
● Prabhu Deva
● Ajith Kumar
● Jai Akash
● Jayam Ravi
● Sivakarthikeyan
● Vemal
● Vikram Prabhu
● Vishnu vishal
● Udhanidhi Stalin
● Parthiban
● Gautham Karthik
● Simran
● Jaya seal
● Jyotika
● Madhumitha
● Bhavana
● Athmiya Rajan
● Bindhu Madhavi
● Sri Divya
● Nikki Galrani
● Regina Cassandra
● Sai Priya
● Sivakumar
● Sayaji Shinde
● Sona
● Yugendran
● Ilavarasu
● Thaadi Balaji
● Madhan Bop
● Mouli
● Ponnambalam
● Priyanka Trivedi
● Uma Sumithra
● Chaams
● Soori
● Robo Shankar
● V.Gnanvel ( Producer )
● Singamuthu
● Aadukalam Naren
● Nivedha Pethuraj
● Yogi Babu
● Mansoor Alikhan
● R.Sundarajan
● GV.Prakash
● Eesha Rebba
● Anandraj
● Vadivukkarasi
● Scissor Manohar
● Loolusabha Swaminathan
● Karu.Palaniyappan
● Nikisha Patel
● Sathish
● Aishwarya (Lakshmi),
● Mahanadi Shankar
● George Mariyan
● Joe Malloori
● Ashwin Raja LMM
● Srushti Dange
● Sonia
● Reshma pasupuleti
● Motta Rajendran
● Saravanan Subbiah,
● Srinath
● Cool Suresh
● Namo Narayanan
● Bose Venkat
● Devadharshni
● Fatima Babu
● Kottaankachi
● Kovaisarala
● Sonu Sood
● Lollusaba Udhayakumar
● Chaplin Balu
● Pasi Sathya
●Charlee
● Ranjitha
● Sambathram
● Jangri Madhumitha
● Nalini
● Bawa Lakshmananan
● Lal

Till Now Dir Ezhil’s Technician :

Music Director:

SA.Rajkumar,
Vidyasagar,
Sunil Xavier,
Yuvan Shankar Raja,
D.Imman,
C.Sathya

DOP:

R.Selva,
V.Manikandan,
Arthur A.Wilson,
Aravind Kamalanathan,
Sivakumar,
SD.Vijaymilton,
Sooraj Nallusamy,
Sakthi,
KG.Venkatesh,
RB.Gurudev.

Editor

● Jai Shankar
● Sreekar Prasad
● SP.Anand
● Sasi
● Gopi Krishna
● Anand

Fight Master
● Kanal Kannan
● Dilip Subbarayan
● Fire Karthik

Choreographer:
● Raju Sundaram
● Prabhu Deva
● Brindha
● Dinesh
● Kalyan
● Dina

Art Director:
● Prabhakar
● Selva
. Murugan

காதலிலும் கலந்த அரசியலை சொல்லும் சினிமாக்காரன் நிறுவன படம்

காதலிலும் கலந்த அரசியலை சொல்லும் சினிமாக்காரன் நிறுவன படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘சேத்துமான்’ என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார்.

லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது.

“நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி, சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது.

இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது” என்கிறார் இயக்குநர் தமிழ்.

‘ஹிருதயம்’, ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படப்புகழ் தர்ஷனா ராஜேந்திரன், ‘கனா’ புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.

இரவு- பகல் என ஒரேக் கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது.

படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்திருக்க, பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*..

திரைக்கதை & இயக்கம் : தமிழ்,
கதை & வசனம் : பெருமாள் முருகன்
தயாரிப்பு : செ. வினோத்குமார்,
ஒளிப்பதிவு : தீபக்,
இசை: பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ்,

படத்தொகுப்பு : கண்ணன்,
கலை வடிவமைப்பு : பி. ஜெயமுருகன்
ஒலிப்பதிவு : அந்தோனி பி. ஜெ. ரூபன்,
சண்டைப்பயிற்சி : பில்லா ஜெகன்,
உடை வடிவமைப்பு : ஈகா பிரவீன்,
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: திவாகர். ஜெ,
விளம்பர வடிவமைப்பு : சிவா
மக்கள் தொடர்பாளர் : சுரேஷ் சந்திரா,
நிறுவனத்தின் பெயர் : சினிமாக்காரன்

Politics mixed in Love too Seththuman fame Tamil directorial

மாயாஜால பெட்டி ரகசியம்..; ‘சிரஞ்சீவி 156’ படத்தலைப்பு வீடியோவுடன் வெளியானது

மாயாஜால பெட்டி ரகசியம்..; ‘சிரஞ்சீவி 156’ படத்தலைப்பு வீடியோவுடன் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – மெகா156 #Mega156 ‘விஸ்வம்பரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

அதிர வைக்கும் டைட்டில் க்ளிம்ப்ஸேவுடன் , 2025 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெகாஸ்டார் சிரஞ்சீவி கடந்த சங்கராந்திக்கு ‘வால்டர் வீரய்யா’ படம் மூலம் தனது ரசிகர்களுக்கும், திரையுலக பிரியர்களுக்கும் அறுசுவை விருந்தளித்தார்.

இந்த ஆண்டு மெகாஸ்டாருக்கு எந்த திரையரங்கு வெளியீடும் இல்லை என்றாலும், அவரது பிரம்மாண்டமான திரைப்படமான #Mega156 இன் தயாரிப்பாளர்கள், படத்தின் தலைப்பை அற்புதமான க்ளிம்ப்ஸேவுடன் வெளியிட்டதன் மூலம், ரசிகர்களுக்கு இந்த சங்கராந்தியை கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.

தற்செயலாக விழும் மாயாஜாலப் பெட்டியை யாரோ ஒருவர் பூட்டி வைக்க, ஒரு பரலோக உலகத்திற்கு நம்மைக் கொண்டு செல்வதில் இருந்து இந்த கிளிம்ப்ஸே வீடியோ தொடங்குகிறது.

அப்பெட்டி கருந்துளை வழியாகச் சென்று சிறுகோள் மீது மோதி, பல இடையூறுகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு, இறுதியாக பூமியை அடைகிறது.

இது ஒரு பெரிய அனுமன் சிலையுடன் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது. பூமியில் மோதும்போது ஒரு பள்ளம் தோன்றுகிறது, ஆனால் மாயப் பெட்டிக்கு எதுவும் நடக்கவில்லை. இறுதியாக, படத்தின் தலைப்பு “விஸ்வம்பரா” என கண்களுக்கு விருந்தாக விரிகிறது.

பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்லும் வகையிலான இந்த வீடியோவில் காட்டப்படும், மாயாஜால பெட்டியின் பயணம், நாம் காணப்போகும் சினிமா அனுபவத்தைப் பற்றிய சிறு தெளிவைத் தருகிறது.

இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலகத்தரத்தில் அமைந்துள்ளது மிக முக்கியமாக, விஸ்வம்பரா எனும் தலைப்பு வெகு கவர்ச்சிகரமாக உள்ளது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும். இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

விஸ்வம்பரா

ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர்.

ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது. இப்படம் 2025 சங்கராந்தி விருந்தாக திரைக்கு வருமென, தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Chiranjeevis Mega 156 movie title video goes viral

https://youtu.be/0HO0VUAY_4ஃ

ப்ரித்திவிராஜ் நடித்த ‘தி கோட் லைஃப்’ பட செகண்ட் லுக் ரிலீஸ்

ப்ரித்திவிராஜ் நடித்த ‘தி கோட் லைஃப்’ பட செகண்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் முதல் போஸ்டரை அவரது ‘சலார்’ படத்தின் கோ-ஸ்டார் பிரபாஸ் வெளியிட்டது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சரான இந்தப் படத்தின் 2வது பார்வை போஸ்டரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் தனது சமூக ஊடக தளத்தில் வெளியிட்டார்.

இந்த படத்தின் போஸ்டர்களில் நடிகர் பிரித்விராஜின் மாறுபட்ட தோற்றங்கள், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘தி கோட் லைஃப்’பை மாற்றியுள்ளது.

இப்போது வெளியாகியுள்ள படத்தின் 2வது தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும்.

இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

*விஷுவல் ரொமான்ஸ் பற்றி:*

விஷுவல் ரொமான்ஸ் என்பது கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். 7 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், இந்த நிறுவனம் சிறந்த படைப்புகளைக் கொடுத்து முக்கியமான தயாரிப்பு நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

‘100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம்’ என்ற 48 மணிநேரம் நீடித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பின் மூலம் விஷுவல் ரொமான்ஸ் சினிமா உலகில் ஒரு மைல்கல்லை எட்டியது. இந்தப் படம் பரவலாகப் பாராட்டப்பட்டது மட்டுமல்லாது, கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இது சினிமா மீது விஷுவல் ரொமான்ஸின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இயக்குநர் பிளெஸி இந்தப் படத்தில் சிறப்பான கதையை சொல்லியுள்ளார்.

ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட, இந்திய சினிமாவின் தலைசிறந்த விருதுகளை பிளெஸி பெற்றுள்ளார். பிளெஸி ஐப் தாமஸின் திறமையான இயக்கத்தின் கீழ், விஷுவல் ரொமான்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதுவிதமான சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.

Prithiviraj starring The Goat life movie 2nd look launched

கோடம்பாக்கத்தில் தண்ணீர் பிரச்சனை.; மக்கள் பிரச்சனை தீர்த்த விஷால்

கோடம்பாக்கத்தில் தண்ணீர் பிரச்சனை.; மக்கள் பிரச்சனை தீர்த்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சமத்துவ பொங்கல் விழாவில் பொதுமக்களுடன் கoலந்துக் கொண்டு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் தங்களுக்கு கடந்த சில நாட்களாக குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும் குடிதண்ணீர் ஏற்பாடு செய்து தந்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை கேட்டுக் கொண்டே நடிகர் விஷால் தனது மேலாளர் ஹரி கிருஷ்ணனிடம் உடனே கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கூறினார்.

அதன் தொடர்ச்சியாக கோடம்பாக்கத்தில் கோரிக்கை வைத்த மக்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

விஷால்

Vishal solved Peoples water issue at Kodambakkam

தனுஷ் – நாகார்ஜுனா – சேகர் கம்முலா இணைந்த DNS படம் பூஜையுடன் தொடங்கியது

தனுஷ் – நாகார்ஜுனா – சேகர் கம்முலா இணைந்த DNS படம் பூஜையுடன் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் திறமைகள் ஒரு சேர அமையப் பெற்ற – தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் கிங் நாகார்ஜுனா அக்கினேனி இணைந்து ஒரு கலகலப்பான பல்வேறு திரை நட்சத்திரங்கள் கூடும் படைப்பானது #DNS தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவால் இயக்கப்பட உள்ளது,

மேலும் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரால், ஸ்ரீ நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஏசியன் குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனம் சார்பில், அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சோனாலி நரங் வழங்க பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது.

#DNS (தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா என்பதன் சுருக்கம்) திரைப்படத்தின் பூஜை விழாவில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலர் கலந்து கொள்ள பிரமாண்டமாக இன்று தொடங்கப்பட்டது. படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று முன்னணி நடிகர்கள் நடிக்கும் வசனங்கள் நிறைந்த பகுதியின் படப்பிடிப்புடன் தொடங்கியது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சில முக்கியமான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன.

DNS

தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முறையே அவர்களின் சங்கராந்தி வெளியீடுகளான கேப்டன் மில்லர் (தமிழ்) மற்றும் நா சாமி ரங்கா மூலம் பிரமாண்ட வெற்றியை வழங்கியதால், இந்த முன்னணி நடிகர்கள் இணையும் பிரம்மாண்டமான காவியத்தைப் பற்றிய உற்சாகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும் அவர்கள் திரையை ஒருசேர பகிர்ந்து கொள்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்கிறார்.

ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய இரண்டு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த பிறகு, சேகர் கம்முலா பெரிய அளவிலான படைப்புடன் வருகிறார். தொழில்நுட்ப அம்சங்களிலும் படம் உறுதியுடன் சிறந்து விளங்கும்.

தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்க, சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென் ஆக்‌ஷன் பகுதியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார்.

மீதமுள்ள நடிகர்கள் மற்றும் படக் குழுவினரை விரைவில் தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள்.

DNS

நடிகர்கள்: தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்குனர்: சேகர் கம்முலா
படத்தை வழங்குபவர்: சோனாலி நரங்
தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்கள்: சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ்
ஒளிப்பதிவு இயக்குனர்: நிகேத் பொம்மி
தயாரிப்பு வடிவமைப்பு: ராமகிருஷ்ணா சப்பானி, மோனிகா நிகோட்ரே
சண்டைப் பயிற்சி: யானிக் பென்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அகமது
விளம்பரங்கள்: வால்ஸ் மற்றும் டிரெண்ட்ஸ்

DNS

Dhanush Nagarjuna Sekar Combo movie started with Pooja

More Articles
Follows