ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

Digangana Suryavanshiதெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற RX 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் “ ஹிப்பி “ படத்தில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்துள்ளது. ஹிந்தி படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதினை நேற்று அவர் பெற்றுள்ளார்.

பல ஹிந்தி பாடல்களில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷி விரைவில் தமிழிலும் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாதாசாகெப் பால்கே விருது வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட அழகான காதல் கதை சில்லு கருப்பட்டி

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட அழகான காதல் கதை சில்லு கருப்பட்டி

sillu karuppatti stillsஇந்த சமூகத்தில் காதல் குறைந்து கொண்டே போகிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த நம்பிக்கைகளை புதுப்பிக்கும் நேரம் வந்துவிட்டது. நிச்சயமாக, ஒவ்வொரு காதலர் தினத்திலும் இசை காதலர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், இந்த ‘பிப்ரவரி’யும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சில்லு கருப்பட்டி படத்தின் “அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு” என்ற அழகான பாடல் வரிகள் மற்றும் மூலம் நமது இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சில்லு கருப்பட்டி சிங்கிள் தெய்வீகமான காதலின் ஆழத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பின் மழையில் அனைவரும் நிச்சயம் நனைவார்கள்.

பாடலுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பற்றி இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, “காதல் என்பது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொண்டது, நாம் முன்னர் சந்தித்திராத ஒருவரை சந்திப்போம், ஆனால் நாம் அவருடன் நீண்ட காலம் பழகியது போலவும், உரையாடியது போலவும் ஒரு வலுவான உணர்வை கொடுக்கும். அது தான் தெய்வீக காதலின் அழகு அல்லவா?. நாம் சந்திக்கும் முன்னரே ஆன்மாக்கள் ஒன்றாக இணைந்திருக்கின்றன. இது ஒரு தவிர்க்க முடியாத உண்மை, இதை நம்பாதவர்களுக்கு அந்த தருணம் இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை. பிரதீப்குமார் முதன் முதலில் டியூனை போட்டுக் காட்டியபோது, ஒவ்வொரு இசைக் குறிப்பிலும் காதலின் சாராம்சம் இருந்ததை உணர முடிந்தது. அவரது குரலின் மூலம் மயக்கும் காதல் பாடல்களை நமக்கு வழங்கிய அவர், சில்லுக் கருப்பட்டி மூலம் இசையிலும் காதலை அள்ளி தெளிக்கிறார் என்பதில் மகிழ்ச்சி” என்கிறார்.

கண்ணம்மா, மாயநதி, ஆகாயம் தீப்பிடிச்சா, ஆகாசத்த நான் பாக்குறன், மோகத்திரை மற்றும் பல ஆன்மாவை தொடும் பாடல்களை பாடி புகழ்பெற்ற பிரதீப் குமார், ஹலிதா ஷமீம் எழுதிய இந்த பாடலையும் பாடியிருக்கிறார்.

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட நான்கு அழகான காதல் கதைகளை கொண்ட ஒரு தொகுப்பு தான் சில்லு கருப்பட்டி. வெங்கடேஷ் வெலினேனி தயாரித்திருக்கிறார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் கே மற்றும் சில பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

மாதவன் – அனுஷ்கா இணையும் புது படம்

மாதவன் – அனுஷ்கா இணையும் புது படம்

madhavan and anushkaசில நேரங்களில் ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு மட்டும் நமக்கு மயிர்க்கூச்செரியும் அனுபவத்தை வழங்கும். நம் மனது அடுத்த உடனடியான சிந்தனையாக அந்த பெரிய படம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி கற்பனையாக சிந்திக்க துவங்கி விடும். மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்திய அளவில் புகழ் பெற்ற இந்த நடிகர்கள் நடிக்கும், இந்த படத்தின் பணிகள் தற்போது முழு மூச்சில் நடந்து வருகிறது. இது ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் மர்டர் மிஸ்டரி திரில்லர் திரைப்படமாகும். கோபி மோகன் உடன் இணைந்து கதை மற்றும் திதைக்கதையை எழுதுவதோடு இணை தயாரிப்பாளராவும் பணிபுரிகிறார் கோனா வெங்கட்.

இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறும்போது, “நான் உண்மையிலேயே உறைந்து போய் இருக்கிறேன். பல வருடங்களாக நடிப்பில் மகத்தான சாதனையை புரிந்திருக்கும் மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்துக்கு கிடைத்திருப்பது, என்னை மிகக் கடுமையாக உழைக்க, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உந்துகிறது. குறிப்பாக, இது ஒரு சைலண்ட் த்ரில்லராக இருப்பதால் அது முழுமையாக ‘நடிகர்கள்’ மற்றும் ‘தொழில்நுட்ப கலைஞர்கள்’ சார்ந்தது, அதற்கேற்ற வகையில் சிறப்பானவர்களை கண்டறிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மாதவனின் அர்ப்பணிப்பு அபாரம். அதனால் தான் அப்படிப்பட்ட திரைப்படங்கள் அவரை விரும்புகின்றன. அவரின் சமீபத்திய கதைகளில், சிறந்த நடிகராக ப்ரீத் சீரீஸிலும், மிகக்கடுமையான பயிற்சியாளராக இறுதிச்சுற்று படத்திலும் அவர் ஸ்கோர் செய்ததை பார்த்தாலே புரியும். அவர் ‘சாக்லேட் பாய்’ என்று சொல்லப்படுவதை விரும்புவதில்லை, மாறாக தன் திறமைகளை மேம்படுத்தும் கதைகளை நடிக்கவே விரும்புகிறார். இந்த படம் அவரது மகுடத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அனுஷ்கா ஷெட்டியின் எந்த சூழ்நிலையிலும் அவரது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி தான் ஒரு ‘அற்புதமான நடிகை’ என்று நிரூபித்தவர். இந்த படத்தில் அவரின் கதாப்பாத்திரத்துக்கு இது போன்ற குணங்கள் தேவைப்பட்டது. அனுஷ்காவை தவிர யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு ஆகியோர் மொழி மற்றும் எல்லைகளை கடந்து தங்கள் திறமையால் பிரபலமானவர்கள். அவர்களும் இந்த படத்தில் நடிப்பது பலம். குறிப்பாக கோனா வெங்கட் சார் மற்றும் கோபி மோகன் சார் எழுதிய கதை மற்றும் திரைக்கதையை திரையில் மொழி பெயர்க்கும் செயல்முறையை அனுபவிப்பதில் ஒரு இயக்குனராக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தில், ATMOS ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் மிக நேர்த்தியான காட்சியமைப்புகள் என ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் உயர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை கொண்டு இதுவரை உணர்ந்திராத மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். இதற்காக தான் மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறோம் என்கிறார் இயக்குனர்.

கோபி சுந்தர் இசையமைக்கிறார். பாப் பிரவுன் (ப்ரிடேடர்ஸ், தி வால் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் புகழ்) சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். க்‌ஷனம்’ மற்றும் ‘கூடாச்சாரி’ போன்ற திரைப்படங்களில் தன் ஒளிப்பதிவு மூலம் தெலுங்கு சினிமாக்கு ஒரு புது வண்ணத்தை வழங்கிய ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்கிறார். யனா ருசனோவா (ப்ரிசம், ட்ரோன் வார்ஸ், தி நெக்ஸ்ட் பிக் திங் புகழ்) கலை இயக்குனராக பணிபுரிகிறார். கோபி மோகன் திரைக்கதை எழுதியிருக்கிறார். 1500 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது.

ரஜினிக்கு இரு வேடம் கொடுத்து அழகு பார்க்கும் முருகதாஸ்

ரஜினிக்கு இரு வேடம் கொடுத்து அழகு பார்க்கும் முருகதாஸ்

Rajinikanth going to play dual role in Thalaivar 166ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதன் பின்னர் விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்பட சூட்டிங் அடுத்த மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் போலீஸ் அதிகாரி, சமூக சீர்திருத்த போராளி என இரண்டு வேடங்களில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth going to play dual role in Thalaivar 166

விஜய்யுடன் கை கோர்க்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் கபீஸ் பூவையார்

விஜய்யுடன் கை கோர்க்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் கபீஸ் பூவையார்

Super Singer fame Kabish Poovaiyar team up with Vijay in Thalapathy 63விஜய், நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு ஆகியோரது நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை தற்போது அட்லி படமாக்கியுள்ளார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பிரபலமான கபீஸ் பூவையார் என்ற சிறுவனும் இப்படத்தில் நடிக்கிறாராம்.

அத்துடன் ரஹ்மான் இசையில் ஒரு பாடலையும் கபீஸ் பாடவுள்ளதாக கூறப்படுகிறது.

Super Singer fame Kabish Poovaiyar team up with Vijay in Thalapathy 63

ஆர்கே. சுரேஷின் ‘அமீரா’ படத்தில் முக்கிய கேரக்டரில் சீமான்

ஆர்கே. சுரேஷின் ‘அமீரா’ படத்தில் முக்கிய கேரக்டரில் சீமான்

Seeman and RK Suresh team up for Ameera movie‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிகர் ஆர். கே. சுரேஷ் அவர்களும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஆர் சுப்ரமணியம் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்க நாயகியாக அனுசித்தாரா நடிக்கிறார்.

இவர் அண்மையில் வெளியான ‘பொதுநலன் கருதி’ படத்தில் நடித்தவர்.

இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இப்பட பூஜை நாளை பிப்ரவரி 22ஆம் தேதி காலை சென்னையில் நடைபெறவுள்ளது.

Seeman and RK Suresh team up for Ameera movie

More Articles
Follows