அப்பனுக்கே சவால் விடும் பிள்ளை.; சிக்ஸ் பேக்கில் மிரட்டும் துருவ் விக்ரம்.!

அப்பனுக்கே சவால் விடும் பிள்ளை.; சிக்ஸ் பேக்கில் மிரட்டும் துருவ் விக்ரம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhruv vikramஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இதனையடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனை முடித்துவிட்டு கோப்ரா பட நிறுவனமான 7 ஸ்கிரீன் தயாரிப்பில் மீண்டும் இணைகிறார் விக்ரம்.

இதில் விக்ரம் மகன் துருவ்வும் நடிக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த கதையில் தன் மகனுக்கு வில்லனாக விக்ரம் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன் தந்தையை விட அதிகமான உடல் கட்டுகளை மாற்றியிருக்கிறாராம் துருவ்.

துருவ் விக்ரம் வெளியிட்ட புகைப்படமானது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ரஜினி ரசிகர்களை வெறியேற்ற சிம்பு – லாரன்ஸை இணைத்த ‘ப்ரெண்ட்ஷிப்’

ரஜினி ரசிகர்களை வெறியேற்ற சிம்பு – லாரன்ஸை இணைத்த ‘ப்ரெண்ட்ஷிப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raghava lawrence simbuஜான் பால்ராஜ் & ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கும் படம் ப்ரெண்ட்ஷிப்.

இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

அர்ஜூன் வில்லனாகவும், நகைச்சுவை நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர்.

நாயகியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ஆன்தம் (Superstar Anthem) என்ற முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த சூப்பர் ஸ்டார் பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார்.. நடிகர் ராகவா லாரன்ஸ் பாடலை வெளியிட்டார்.

ரஜினி ரசிகர்களுக்காகவே இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது எனலாம்.

இந்த பாடல் ரஜினிகாந்த் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh rainaகொரோனா வைரஸ் பரவலால் உலகமே திக்கு முக்காடி போய்க் கொண்டிருக்கும் நிலையில் காவல் துறையினர் தங்கள் உயிரை துச்சமென கருதி பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். ஆனால், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனது செயல்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

புகார் அளிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்கு பிறகு ஒவ்வொரு புகார்தாரரிடமிருந்து வழக்கு விசாரணை பற்றி கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

காணொளிக்காட்சி மூலம் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், வழக்குரைஞர் ஆகியோருடன் அவ்வப்போது கலந்தாலோசனை செய்து வருகிறார்.

அம்மாவட்ட திருநங்கையர்களும் காவல்துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்செயலைக் கண்டு அனைவரும் பாராட்டி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா,

மக்கள் அளிக்கும் புகார் குறித்து புகார்தாரர்களிடம் கருத்துக்களைக் கேட்க போன் அழைப்புகள் தொடங்கியதற்காக எஸ்.பி. விஜயகுமாருக்கு ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், இது அற்புதமான முயற்சி. இந்த செயல்முறைகளை மேலும் செம்மைப்படுத்துவதில் காவல்துறையினருக்கு உதவுவதோடு குடிமக்களுக்கு அதிக ஊக்கமளிக்கும் என்றார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

friends of policeசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், ஊரடங்கு நேரத்தில் விசாரணை என்ற பெயரில் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கைதிகளை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில், அவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்கும் தொடர்பு உள்ள நிலையில் தூத்துக்குடியில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை சரகத்தில் 4 மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்தக் கூடாது என டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை பயன்படுத்த தடை என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த கூடாது என அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

கணக்கு காட்ட தயார்.. விஷால் ஆபிஸ் அக்கௌண்டன்ட் சவால்..; அடுத்த ட்விஸ்ட் இது.!

கணக்கு காட்ட தயார்.. விஷால் ஆபிஸ் அக்கௌண்டன்ட் சவால்..; அடுத்த ட்விஸ்ட் இது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalநடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சென்னை, சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் உள்ளது.

இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை, வருமான வரித்துறைக்கு விஷால் முறையாக செலுத்தவில்லை என்ற புகார் சில மாதங்களுக்கு முன்பு எழுந்தது.

இதனையடுத்து இந்த வழக்கில் விஷால் தரப்பில் 80 சதவீதம் வருமான வரித்துறைக்கு பணத்தைக் கட்டினர்.

இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றதில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த நிறுவன மேலாளர் ஹரி கிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் தங்களது நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டார் என கூறியிருந்தார்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக விஷால் தரப்பு கூறியுள்ள குற்றச்சாட்டு பொய் என கணக்காளர் ரம்யா விளக்கம் அளித்துள்ளார்.

போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர்.

தான் பணியாற்றிய காலத்தில் உள்ள மொத்த கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கத் தயார் எனவும் ரம்யா கூறியுள்ளார்.

இந்த வழக்கில் இது புதிய ட்விஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது.

எனவே யார் கூறுவது உண்மை? என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனா கொடுமை..; ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் நடிகை மஞ்சு

கொரோனா கொடுமை..; ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் நடிகை மஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

serial actress manjuகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் 3 மாதங்களாக மக்கள் வீட்டிலேயே முடங்கிகிடந்தனர்.

தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும் சினிமா துறைக்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை.

தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. சூட்டிங்குகள் நடைபெறவில்லை. அதுபோல் மேடை நாடக கலைஞர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் மஞ்சு என்ற நாடக நடிகை பிழைக்க வேண்டி தற்போது ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறாராம்.
கடந்த 15 ஆண்டுகளாக மேடை நாடகங்களில் நடித்து வருகிறார் இவர்.

சில ஆண்டுகளில் ஒரு ஆட்டோ வாங்கியுள்ளார் அதிலேயே நாடகம் முடிந்து வீட்டுக்கு திரும்புவது தான் இவரது வாடிக்கை.

தற்போது கொரோனா ஊரடங்கால் நாடகம் கை விடவே இந்த ஆட்டோ அவருக்கு கை கொடுத்துள்ளது.

முழுநேரமாக ஆட்டோ ஓட்டி தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறாராம் மஞ்சு.

More Articles
Follows