தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ரிலீசானது.
தோனி கேரக்டரில் சிறப்பான நடிப்பை கொடுத்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
மேலும் அமீர் கானின் “பி.கே” படத்திலும் அனுஷ்கா சர்மாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவருக்கு 34 வயதாகிறது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரின் இந்தத் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
எம்எஸ் தோனி படத்தில் வாழ்க்கையில் உண்மையாக உழைத்தால் உயரத்தில் அடையலாம் என அருமையாக நடித்திருப்பார். ஆனால் இன்று அவருக்கு என்ன பிரச்சினையோ..? தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
Dhoni biopic hero Sushant Singh Rajput committed suicide