பெண்களுக்கு தனுஷின் ஸ்பெஷல் விருந்து

பெண்களுக்கு தனுஷின் ஸ்பெஷல் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush rajkiranநடிகர் தனுஷ்க்கு பெண் ரசிகைகள் அதிகம்.

இவர் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். இனி டைரக்டர் தனுஷ்க்கும் ரசிகர்கள் அதிகரித்தாலும் ஆச்சரியமில்லை.

இந்நிலையில் மார்ச் 9ஆம் தேதி மகளிர் தினத்தில், தன் இயக்கத்தில் உருவாகியுள்ள பவர்பாண்டி படத்தின் இசையை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணிகளை இன்று தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜ்கிரண், சாயாசிங், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சீன் ரோல்டன் இசையமைக்க, தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Dhanushs Power Pandi treat on Womens day

பாவனா பாலியல் வழக்கில் குற்றவாளி கோர்ட்டில் சரண்

பாவனா பாலியல் வழக்கில் குற்றவாளி கோர்ட்டில் சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pulsar sunilபிரபல நடிகையான பாவனா சமீபத்தில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான நான்கு பேர்களை கைது செய்தனர்.

எனினும் இதில் மூளையாக செயல்பட்டவர் சுனில்குமார் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சுனில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

எனக்கு ஓட்டு போடாதவங்க கேள்வி கேட்கக்கூடாது – ‘காண்டான’ கருணாஸ்

எனக்கு ஓட்டு போடாதவங்க கேள்வி கேட்கக்கூடாது – ‘காண்டான’ கருணாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karunasநடிகர் கருணாஸ் அதிமுக கட்சியை சேர்ந்த எம்எல்ஏவாக உள்ளார்.

தற்போது ஓபிஎஸ்க்கு எதிராக சசிகலா அணியில் செயல்பட்டு வருகிறார்.

இதனால் இவரது தொகுதியை சேர்ந்த சிலரும் மற்ற பொதுமக்களும் இவரது ஆதரவு முடிவு குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

சிலர் இவரை போனில் தொடர்பு கொண்டு அசிங்கமாக பேசிவருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசினார்…

அப்போது… ‘திருவாடனை தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் தனக்கு ஓட்டு போட்ட 75,000 மக்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம். மற்றவர்கள் கேட்கக்கூடாது” என்றார்.

அஜித்தின் ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்… டைரக்டர் யார்?

அஜித்தின் ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்… டைரக்டர் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and junior NTRகே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வில்லன் மற்றும் வரலாறு ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றன.

இதில் அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் கிட்டதட்ட 11 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க, இப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தை தெலுங்கிலும் கே.எஸ்.ரவிகுமாரே இயக்குவாரா? என்ற தகவல் வெளியாகவில்லை.

பிப் 26 முதல் மார்ச் 3 வரை ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

பிப் 26 முதல் மார்ச் 3 வரை ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Baashaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே.

எனவே அவரது படங்கள் ரிலீஸ் முதல் பிறந்தநாள் வரை ஒன்றையும் விடாது அனைத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் திருமண நாள் வருகிறது.

எனவே இதனை கொண்டாட காமன் புரபைல் பிக்சரை (Common Profile Picture) டிசைன் செய்து வருகின்றனர்.

மேலும் அடுத்த மாதம் மார்ச் 3ஆம் தேதி பாட்ஷா படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் வெளியாகிறது.

எனவே இதனையும் கொண்டாடி அசத்தவிருக்கிறார்களாம்.

ஆக, ஒரு வாரத்திற்கு இணையத்தை ரஜினி ரசிகர்கள் அதிர வைக்க போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Rajini fans going to celebrate Thalaivar wedding Day and Baasha re-release

அழகான வாழ்க்கை தந்த அனைவருக்கும் கார்த்தி நன்றி

அழகான வாழ்க்கை தந்த அனைவருக்கும் கார்த்தி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthiசிவகுமாரின் இளைய மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளம் இருந்தாலும், ஆர்ப்பாடமில்லாமல் பருத்தி வீரனில் அறிமுகமானார் கார்த்தி.

இதனையடுத்து நான் மகான் அல்ல, பையா என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராகியுள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மெட்ராஸ், தோழா, காஷ்மோரா ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று பிப்ரவரி 23ஆம் தேதியுடன் இவர் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனையொட்டி தனக்கு அழகான வாழ்க்கையை தந்த குடும்பம், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

Karthi celebrates 10 years in Cinema Industry

karthi tnks

More Articles
Follows