தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் தனுஷ் நடித்த படம் அசுரன்.
தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருந்தார்.
வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தனுஷ் நடித்த படங்களிலேயே ரூ. 100 கோடி வசூலித்த முதல் படம் இதான்.
தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்கின்றனர். அண்மையில் இப்பட போஸ்டர் இணையத்தில் வெளியானது.
இதனையடுத்து சிவராஜ் குமார் தயாரிப்பில் கன்னட மொழியிலும் அசுரன் படத்தை தயாரிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் அசுரன் சீனா மொழியில் டப் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
Dhanushs Asuran movie China language dubbing updates






