தனுஷ் ஹன்சிகா ஜோடியை மீண்டும் இணைக்கும் மித்ரன் ஜவஹர்

dhanush hansikaதனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் கொரோனா பிரச்சினையால் தள்ளிப் போய்யுள்ளது.
இதனையடுத்து மாரி செல்வராஜின் கர்ணன் படமும் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.
இதனையடுத்து ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அகஷ்யகுமார், சாரா அலிகான் உடன் ‘அத்ரங்கி ரே’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.
இந்த படங்களை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் ஒரு படம். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படம் என கை வசம் வைத்துள்ளார் தனுஷ்.
இதில் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதில் தனுஷூக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பார் என கூறப்படுகிறது.
குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் தனுஷ் உடன் மித்ரன் ஜவஹர் இணைந்து பணியாற்றியுள்ளார்.
2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கிய ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷ் – ஹன்சிகா ஜோடி இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது 10 வருடங்களுக்குப் பின் இந்த ஜோடியை மீண்டும் மித்ரன் இணைக்கிறார்.

Overall Rating : Not available

Latest Post