ரஜினியுடன் இணைந்து நடிப்பது எப்போ.? தனுஷ் விளக்கம்

ரஜினியுடன் இணைந்து நடிப்பது எப்போ.? தனுஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush clarify when he will act with Rajinikanthதன் மாமனார் ரஜினிகாந்த நடித்த காலா படத்தை தனுஷ் தயாரித்தார். எனவே அவர் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் சின்ன வேடம் என்பதால் ரஜினியே வேண்டாம் என கூறிவிட்டாராம்.

இதனையடுத்து அதற்கு பின் வெளியான பேட்ட, தற்போது தயாராகி வரும் தர்பார் படத்தில் தனுஷ் நடிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில், தனுஷின் சமீபத்திய பேட்டியில்… ரஜினியுடன் இணைந்து நடிக்க ஆசைதான். ஆனால் எப்போது என்பது தெரியவில்லை.

விரைவில் நடிக்கவுள்ளதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Dhanush clarify when he will act with Rajinikanth

அஜித்-60 படத்தில் இணையும் ஸ்ரீதேவி மகள் & ஏஆர். ரஹ்மான்

அஜித்-60 படத்தில் இணையும் ஸ்ரீதேவி மகள் & ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், இந்தி பட தயாரிப்பாளருமான போனிக் கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித்.

யுவன் இசையமைக்கும் இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் 8ல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணி இணைகிறது.

அதில், அஜித்தின் மகளாக போனிக் கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் உருவாகவுள்ள இந்த 60வது படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டுக்கு சென்று, அவரை போனி கபூர் சந்தித்து பேசினாராம்.

விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கும் பாகுபலி ராணா

விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கும் பாகுபலி ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)விஜய் சேதுபதி நடிப்பில் உருவான சிந்துபாத் படம் அண்மையில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது.

தற்போது மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி, சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம், விஜய் சந்தர் இயக்கும் சங்கத் தமிழன் ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இவை அனைத்தும் இந்தாண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.

டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன் என்பதால் இப்படத்திற்கு 800 என பெயரிடப்பட உள்ளது.

எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்கும் இப்படத்தை உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

பிரபல நிறுவனமான தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழில் முதன்முறையாக தயாரிக்கிறது.

இதன் சூட்டிங் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இந்த படத்தை இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த வருடம் 2020-ம் ஆண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

ஏ1 படத்தை தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு-3’ படத்தில் நடிக்கும் சந்தானம்

ஏ1 படத்தை தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு-3’ படத்தில் நடிக்கும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் வெற்றி பெறவே, தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்தார்.

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இதன் பின்னர் ஏ1 படத்தில் நடித்தார். இந்த படமும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த பாகமான ‘தில்லுக்கு துட்டு 3’ படத்தை 3டியில் எடுக்க சந்தானம் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது டகால்டி என்ற படத்தில் சந்தானம் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்பட தயாரிப்பாளரான சௌத்ரியே தில்லுக்கு துட்டு 3 படத்தையும் தயாரிக்க உள்ளார் என்றும் முந்தைய பாகங்களை இயக்கிய ராம் பாலாவே இப்படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்யை மிரட்டும் மலையாள நடிகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்யை மிரட்டும் மலையாள நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் இந்தாண்டு 2019 தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் விஜய்.

இதில் நாயகிகளாக ராஷ்மிகா, ராசி கண்ணா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடிக்கும் கைதி படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரேம்ஜிக்கு மேரேஜ்..? பெண் கிடைச்சிடுச்சா..?

நடிகர் பிரேம்ஜிக்கு மேரேஜ்..? பெண் கிடைச்சிடுச்சா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி.

இவர் அஜித்துடன் மங்காத்தா, சூர்யாவுடன் மாசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரின் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு 40 வயதை கடந்துவிட்ட போதிலும் திருமணம் நடக்கவில்லை.

எனவே இவரது பெற்றோர்கள் நண்பர்கள் பெண் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆணும் பெண்ணும் இணைந்து நிற்கின்ற வாசகத்துடன் கேம் ஓவர் என வரையப்பட்ட டீசர்ட் உடன் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனால் பிரேம்ஜிக்கு பெண் கிடைத்து விட்டது என பலரும் கூறி வருகின்றனர்.

More Articles
Follows