BREAKING ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து தனுஷ் அறிக்கை.; ரஜினி குடும்பத்தில் அடுத்த டைவர்ஸ்

BREAKING ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து தனுஷ் அறிக்கை.; ரஜினி குடும்பத்தில் அடுத்த டைவர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ல் திருமணம் செய்துக் கொண்டார் நடிகர் தனுஷ்.

17 வயதில் சினிமாவில் அறிமுகமான தனுஷ் 22 வயதில் திருமணம் செய்தார்.

அப்போது நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனுக்கு கூட திருமணம் நடக்கவில்லை என்பதும் தனுஷை விட ஐஸ்வர்யா மூத்தவர் என்பது சலசலப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்தின் இல்ல திருமண விழா என்பதால் அப்போது கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் இந்த திருமண விழாவில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என பெயரிட்டனர். இவர்கள் தாத்தா ரஜினி மீது பாசமாக இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது 18 வருட மணவாழ்க்கைக்கு பிறகு தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷ் அறிக்கையில்…
18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம்.

மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதே குறிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், “கேப்ஷன் தேவையில்லை என நினைக்கிறேன். உங்கள் அனைவரின் புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது” என குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் அஸ்வின் என்ற கணவரை விவாகரத்து செய்தார். 2010ல் திருமணம் செய்து 2017ல் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் பிறந்தான்.

2019 முதல் தற்போது 2வது கணவர் விசாகனுடன் வாழ்ந்து வருகிறார் சௌந்தர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush announces separation from wife Aishwarya after 18 years

‘மாநாடு’ படத்தை அடுத்து ‘மன்மத லீலை’க்கு தாவிய வெங்கட்பிரபு

‘மாநாடு’ படத்தை அடுத்து ‘மன்மத லீலை’க்கு தாவிய வெங்கட்பிரபு

சிம்புவை வைத்து மாநாடு படம் இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இதனையடுத்து வெங்கட் பிரபுவின் அடுத்த படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இவரின் அடுத்த படம் அடல்ட் காமெடி திரைப்படமாக உருவாகவுள்ளதாம்.

வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனரான மணிவண்ணன் எழுதியுள்ளார்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களை இந்த படம் பேசும் என்கின்றனர்.

பாக்யராஜின் ‘சின்ன வீடு’ திரைப்பட பாணியில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ‘மன்மத லீலை’ என்று பெயரிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்ய வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

Director Venkat Prabhu’s next film is announced

பிணவறை ரகசியங்களை உடைக்க வரும் RK சுரேஷ் – ஆனந்தி ஜோடி

பிணவறை ரகசியங்களை உடைக்க வரும் RK சுரேஷ் – ஆனந்தி ஜோடி

ஆர்.கே. சுரேஷ் தயாரித்து நடித்து வரும் புதிய படம் ‘ ஒயிட் ரோஸ்’.

இப்பட டைட்டில் பொங்கல் தினத்தில் வெளியானது. மற்றொரு நாயகனாக ரூசோ நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஆர். கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோவின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில் நாயகியாக கயல்’ ஆனந்தி நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் ராஜசேகரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் சுசிகணேசனிடம் சினிமா பயின்றவர்.

மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.

சைக்கோ திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது.

இப்பட டைட்டில் அறிவிப்பை நடிகர் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

RK Suresh and Anandhi joins for a new film

‘குக் வித் கோமாளி 3’ சீசனில் அஸ்வின் இடத்தை பிடிப்பாரா தர்ஷன்.?

‘குக் வித் கோமாளி 3’ சீசனில் அஸ்வின் இடத்தை பிடிப்பாரா தர்ஷன்.?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சி இளைஞர்களிடையே மிக பாப்புலராக பேசப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின், புகழ், சிவாங்கி, சுனிதா, பார்வதி உள்ளிட்ட பலர் பிரபலமாகினர்.

இதனையடுத்து இவர்களுக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வரத்தொடங்கியது.

அஸ்வின் ஹீரோவாக நடித்த என்ன சொல்ல போகிறாய் படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இன்னும் சில படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளது.

இதில் நடிகர் தர்ஷன் கலந்துகொள்ளவார் என கூறப்படுகிறது.

இவர் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர்.

அஸ்வின் போலவே தர்ஷனும் கோவையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Will Tharshan replace Ashwin place?

ராஜமௌலி அஜித் படங்களை அடுத்து சூப்பர் ஸ்டார் படமும் ஒத்தி வைப்பு

ராஜமௌலி அஜித் படங்களை அடுத்து சூப்பர் ஸ்டார் படமும் ஒத்தி வைப்பு

2022 ஜனவரி 7ல் ராஜமௌலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம்… ஜனவரி 13ல் அஜித் நடித்துள்ள வலிமை படம் மற்றும் ஜனவரி 14ல் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம், ஆகிய படங்களை வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று பரவல் பல மாநிலங்களில் ஊரடங்கு என அமலில் உள்ளதால் இந்த மேற்கண்ட படங்களின் ரிலீஸ் தள்ளிபோனது.

ஜனவரி 13ல் வலிமை படம் ரிலீசாகாமல் போனாலும் அன்றைய தினத்தில் ValimaiFDFS என அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் என்பது வேற ஒரு காமெடி.

தற்போது மற்றொரு பெரிய பட்ஜெட் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவான திரைப்படம் ஆச்சார்யா.

கொரடலா சிவா இயக்கியுள்ள இந்த படம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகும் என முன்பே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த பட ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறைந்த வந்த பின்னர் புதிய ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Super star film postponed like Ajith and Rajamouli films

‘விருமன்’ படத்தையும் ஓடிடி-க்கு கொண்டு போகும் புரொடியூசர் சூர்யா..?

‘விருமன்’ படத்தையும் ஓடிடி-க்கு கொண்டு போகும் புரொடியூசர் சூர்யா..?

கார்த்தி, அதிதிஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’விருமன்’.

இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தை நடிகர் சூர்யா தன் 2டி எண்டர்டெய்ன்ட் பேனரில் தயாரித்து வருகிறார்.

செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட்ராஜன் எடிட்டிங் செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இப்பட டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சூர்யா தயாரித்த சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பு, ஜெய்பீம் படங்களை போல விருமன் படமும் ஓடிடியில் நேரடியாக வெளியாகுமா? என்ற சந்தேகம் உருவானது.

இந்த படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி அதன்பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகே அமேசான் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.

Karthi starrer Viruman to release in OTT?

More Articles
Follows