மீண்டும் செல்வராகவன்-தனுஷ் கூட்டணியை அமைத்த தாணு

மீண்டும் செல்வராகவன்-தனுஷ் கூட்டணியை அமைத்த தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Selvaraghavan to work together after 8 yearsதனுஷ் சினிமாவில் அறிமுகமான காலத்தில் அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார் தனுஷ்.

இவர்களின் கூட்டணியை ரசிகர்கள் அதிகம் விரும்பினர்.

எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த கூட்டணியை இணைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளாராம் கலைப்புலி எஸ். தாணு.

இப்படம் புதுப்பேட்டை 2ஆக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் அசுர வேகத்தில் உருவாகி வருகிறது.

Dhanush and Selvaraghavan to work together after 8 years

வறுமையில் வாடும் பாக்யராஜ் சிஷ்யனுக்கு உதவிய சௌந்தரராஜா

வறுமையில் வாடும் பாக்யராஜ் சிஷ்யனுக்கு உதவிய சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soundararaja help to old actor Sundara Kandam fame Nandagopalஇந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது.

அதில் முக்கியமான படங்களில் ஒன்று சுந்தரகாண்டம்.

அதில் ‘டேய்… சண்முகமணி’ என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர் நந்தகோபால்.

இவர் தற்போது சினிமா வாய்ப்பு இன்றி வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையறிந்த நடிகர் சௌந்தரராஜா அவருக்கு பண உதவி செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

‘நிறைய நடிகர்கள் இன்னும் போராட்ட வாழ்க்கையில் தான் எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் உதவிகள் செய்ய இயலாது.

எனவே சில மருத்துவ உதவிகளை செய்து ஆதரவை கொடுப்போம்.

பிளாக் பாண்டியின் மூலம் நடிகர் நந்தகோபால் நிலை உதவினேன். உதவி செய்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்வோம் வாழவைத்து வாழ்வோம்’ என கூறினார்.

Soundararaja help to old actor Sundara Kandam fame Nandagopal

தளபதி 64 படத்தின் நாயகிகள் இவர்களா..? சூப்பர்ல..

தளபதி 64 படத்தின் நாயகிகள் இவர்களா..? சூப்பர்ல..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்நிலையில் இதில், ராஸி கண்ணா மற்றும் ‘கீதா கோவிந்தம்’ பட நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளார்கள் என கூறப்படுகிறது.

எனவே விரைவில், அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

நம்பியார், ரகுவரன் வரிசையில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

நம்பியார், ரகுவரன் வரிசையில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார் இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள முகம் வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார்.
காரணம், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி 2 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘களவாணி 2 படமே உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட கதை. சொந்த பந்தங்களே கூட பகைவராக மாறும் தேர்தல் அது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைக்களம், கதாபாத்திரங்கள் தொடர்ந்தாலும் கதை புதிதாக இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை இருக்கும்.

அரசியல் காமெடி கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் துரை சுதாகர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், எழில் இயக்கும் படத்திலும் மேலும் முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

வில்லன்களாக முத்திரை பதித்த பிரபல நடிகர்கள் நம்பியார், ரகுவரன் வரிசையில் தானும் முத்திரை பதிப்பேன் என்று கூறுகிறார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.

பாராட்டு வேண்டாம்; அது என் கடமை..; தர்பார் படத்தில் எஸ்பிபி பாட்டு

பாராட்டு வேண்டாம்; அது என் கடமை..; தர்பார் படத்தில் எஸ்பிபி பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
லைகா தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரஜினியின் பெரும்பாலான படங்களில் ஓபனிங் பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம் தான் பாடுவார். ஆனால் அது சில படங்களில் இல்லாமல் போனது.

இதனையடுத்து பேட்ட படத்தில் மரண மாஸ் பாடலை பாடினார் எஸ்பிபி.

இந்நிலையில் தர்பார் படத்திலும் எஸ்.பி.பி ஓபனிங் சாங் பாடியுள்ளார்.

அது குறித்து அவர் கூறியதாவது…

ஒரு காட்சியில் என்னை ஏன் பாராட்டுறீங்க. போலீஸா இருக்குறதுனால உங்களுக்கு கடைமையை செய்யறேன். இந்த யூனிபார்ம கழட்டிட்டா நான் உங்களில் ஒருத்தன். அறிமுக பாடல் நன்றாக வந்திருக்கிறது. அனிருத் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என கூறியுள்ளார்.

தனுஷை அடுத்து அதர்வாவுடன் இணையும் கொடி நாயகி

தனுஷை அடுத்து அதர்வாவுடன் இணையும் கொடி நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)பிரேமம் என்ற மலையாளப் படத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன்.

தனுஷ் நடித்த கொடி படத்தில் நாயகியாக அறிமுகமானார் இவர்.

அதன்பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

தற்போது அதர்வாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.

இப்படத்தை பூமராங் புகழ் கண்ணன் இயக்கவுள்ளார்.

இந்த ஜுலை மாதம் சூட்டிங்கை ஆரம்பித்து வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

More Articles
Follows