1200 VFX ஷாட்ஸ்.. ‘சதுர்’ ட்ரைலருக்காக தங்கலானை தள்ளி வைத்த தனஞ்செயன்

1200 VFX ஷாட்ஸ்.. ‘சதுர்’ ட்ரைலருக்காக தங்கலானை தள்ளி வைத்த தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1200 VFX ஷாட்ஸ்.. ‘சதுர்’ ட்ரைலருக்காக தங்கலானை தள்ளி வைத்த தனஞ்செயன்

“சதுர்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு

1200 VFX ஷாட்ஸ்களுடன் உருவாகியிருக்கும் படம் சதுர் – இயக்குநர் அகஸ்டின் பிரபு !!

டிரெய்லர் பார்த்து பிரமித்து விட்டேன் – சதுர் பட விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் !!

Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும், வித்தியாசமான எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “சதுர்”.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது திரைவெளியீட்டு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

இயக்குனர் அகஸ்டின் பேசியதாவது…

இந்தப்படத்தில் 1200 VFX ஷாட்ஸ் இருக்கிறது. சாதாரணமாக சின்னப்படத்தில் இவ்வளவு சிஜி இருக்காது. தயாரிப்பாளரிடம் இரண்டு கதை சொன்னேன், இந்தக்கதை இந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது என்றபோது, தியேட்டருக்கு வருபவர்கள், ஒரு புதுமையான அனுபவம் தர வேண்டும் என்றேன்.

பைலட் எடுத்து காட்டிய போது என்னை முழுதாக நம்ப ஆரம்பித்துவிட்டார். படம் முழுக்க நிறைய பிரம்மாண்டம் இருக்கிறது. கடலுக்குள் நடக்கும் காட்சி இருக்கிறது, கார் சேஸ், ப்ளைட் பைட், ஹிஸ்டாரிகல் காட்சிகள் என நிறைய இருக்கிறது. பாகுபலி அளவெல்லாம் முடியாது ஆனால் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம்.

கேமராமேன் சரியாக இருந்தால் தான் சிஜி சரியாக வரும், சந்துரு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். என் எதிர்பார்ப்புகளை புரிந்து இசையமைத்த ஆதர்ஷ்க்கு நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கு நன்றி. இன்னொரு முக்கிய காரணமாக இருந்த அமருக்கு நன்றி. படத்தில் எனக்காக கடும் உழைப்பை தந்த, சூர்யா தாமோதரன் என எல்லோருக்கும் நன்றி. எடிட்டர் கார்த்தி நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்துள்ளார். ஜூவா ரவி சார் நடிக்கும் போது இது கரக்டாக வருமா என்று கேட்டார், டிரெய்லர் பார்த்த பிறகு, இப்போது நம்புகிறார். தனஞ்செயன் சார் வந்து எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. ரசிகர்கள் மீதான் நம்பிக்கையில் புதிய அனுபவம் தர வேண்டுமென, இப்படத்தை பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…

நான் இந்த விழாவிற்கு வர முடியாத அளவுக்கு ‘தங்கலான்’ பட வேலை இருந்தது. அமர் டிரெய்லர் பாருங்கள் முடிந்தால் வாருங்கள் என்றார். பார்த்துவிட்டு வியந்துவிட்டேன். சின்ன பட்ஜெட்டில் இத்தனை விசயங்கள் கோர்த்து, மிக அழகாக எடுத்துள்ளார்கள். இந்தப்படம் கண்டிப்பாக கவனிக்கும் படியான படைப்பாக இருக்கும்.

அகஸ்டின் பிரபுவின் புது முயற்சி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். மக்களிடம் இந்தப்படத்தை அறிமுகம் செய்துவிட்டு தியேட்டருக்கு கொண்டு வந்தால் இன்னும் பெரிய வெற்றியைப் பெறும். சின்ன பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வருவது குறைந்துள்ளது. அதனால் அவர்களுக்கு இந்தப்படத்தை தியேட்டரில் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டு, படத்தை கொண்டு வாருங்கள். இப்படம் நல்ல படைப்பாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் ஜீவா ரவி பேசியதாவது..

ஒரு நல்ல கண்டண்ட் உள்ள படம் இந்த சதுர். படப்பிடிப்பில் ஒரு டப்பாவில் நிற்க சொன்னார் இயக்குனர், படத்தில் பார்த்தால் அது கடலுக்குள் லிப்டில் செல்கிறது. டிரெய்லரே மிரட்டலாக இருக்கிறது. புது குழுவினர் மிக அற்புதமாக படத்தை உருவாக்கியுள்ளனர். பல சின்ன படங்களுக்கு வியாபார ரீதியில் மிகப்பெரிய உதவியாக இருக்கும் தனஞ்செயன் சாருக்கு நன்றி.

அகஸ்டின் இந்தப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய இயக்குனராக உருவெடுப்பார். கோயம்புத்தூரிலிருந்து லோகேஷுக்கு பிறகு இவர் மிகப்பெரிய இயக்குனராக வருவார். இந்தப்படம் உங்களை வியக்க வைக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் அமர் பேசியதாவது…

பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. சதுர் படத்தில் நடிகனாக அறிமுகமாவது மிகப்பெரிய பெருமை. ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன், படத்தில் என் பெயர் தமிழ், அதுவும் எனக்கு பெருமை. அகஸ்டின் சொன்ன படி படத்தை ஆரம்பித்தார். டிரெய்லர் படத்தின் கலைஞர்களின் திறமையை சொல்லும். நிறைய திறமையாளர்கள் இப்படத்தில் தங்கள்
முழு உழைப்பைத் தந்துள்ளனர். இப்படம் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும் நன்றி.

நடிகர் அஜித் பேசியதாவது..

பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். படத்திற்கு உங்கள் முழுமையான ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் தாமோதரன் பேசியதாவது…

சதுர் படத்தில் வாய்ப்பு வழங்கிய இயக்குனர் அகஸ்டின் மற்றும் குழுவினருக்கு நன்றி. டிரெய்லர் இப்போது தான் பார்த்தேன். இயக்குனர் காட்டவே இல்லை. உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். படத்திற்கு உங்கள் முழுமையான ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் சூர்யா பேசியதாவது…

இந்தப்படத்தில் ஒரு மெயின் ரோல் செய்துள்ளேன். இயக்குனர் டிரெய்லரை யாருக்குமே காட்டவில்லை, இங்கு தான் அனைவரும் பார்த்தோம். திருப்தியாக உள்ளது. எங்களுடன் இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், எல்லோருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ராம் T சந்தர் பேசியதாவது…
இந்தப்படம் என் வாழ்க்கையில்
மிக முக்கியமான படம். இயக்குனர் அகஸ்டின் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நிறைய சிஜி ஷாட் பிளான் பண்ணி எடுத்துள்ளோம். இயக்குனர் அகஸ்டின் உயிரைக்கொடுத்து உழைத்துள்ளார். நிறையக் கஷ்டப்பட்டு தான் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். இந்த வாய்ப்பை வழங்கிய அகஸ்டினுக்கு நன்றி, எல்லோருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஆதர்ஷ் பேசியதாவது…
இது என் முதல் படம். இந்தப்படத்தில் வேலை பார்த்தது மிகப்பெரிய ஆசிர்வாதமாக நினைக்கிறேன். அகஸ்டின் அண்ணா தான் நிறைய ஊக்கம் தந்தார். அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். புதுமையாக பல விசயங்கள் முயற்சித்துள்ளோம், பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் பேசியதாவது…

தயாரிப்பாளராக இது என் முதல் மேடை, என் பெற்றோர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அகஸ்டின் விஷன் மிகப்பிரமாண்டமாக இருக்கும். டிரெய்லரை விட படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

எடிட்டர் கார்த்திக் பேசியதாவது…
இந்த வாய்ப்பை வழங்கிய அகஸ்டினுக்கு நன்றி. எடிட்டிங்கில் எனக்கு மிகப்பெரிய உதவியாக அகஸ்டின் இருந்தார். அவர் நிறைய சொல்லித்தந்தார். தியேட்டரில் பார்க்கும் போது இப்படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர்கள் : அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ், தாமோதரன், ஜீவா ரவி, நக்கலைட்ஸ் செல்லா, சூர்யா, அர்னவ் ஹரிஜா, பிரதீப் அரி, கிரிஷ் பாலா, ஜெகன் கிரிஷ், பாய்ஸ் ராஜன், ராஜன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர்*

எழுத்து இயக்கம் : அகஸ்டின் பிரபு
தயாரிப்பு: ராம் மணிகண்டன்
பேனர்: ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் நிர்வாகத் தயாரிப்பாளர் : D சக்திவேல் ஒளிப்பதிவு: ராம் T சந்தர்
VFX மேற்பார்வையாளர்: அகஸ்டின் பிரபு.
எடிட்டர்: கார்த்திக் செல்வம்
இசையமைப்பாளர்: ஆதர்ஷ்.
மக்கள் தொடர்பு : A ராஜா

சதுர் டிரெய்லர் லிங்க் – https://youtu.be/dLgaw3K9iyM?si=QMrEto3ZuSv4smwP

Dhananjayan appreciated Sathur movie trailer

வரலட்சுமியின் முதல் காதல் நானல்ல..; மகளுடன் சரத்குமார் பெயர் எப்பவும் இருக்கும்.. – நிக்கோலய்

வரலட்சுமியின் முதல் காதல் நானல்ல..; மகளுடன் சரத்குமார் பெயர் எப்பவும் இருக்கும்.. – நிக்கோலய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரலட்சுமியின் முதல் காதல் நானல்ல..; மனைவி பெயருடன் மாமனார் பெயர் இருக்கும்.. – நிக்கோலய்

*நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

நிக்கோலய் பேசியதாவது,…

“எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு.

என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன்.

ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்கிறேன். நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம்.

வரலட்சுமி என்னைத் திருமணம் செய்திருந்தாலும் நான் அவருடைய முதல் காதல் இல்லை. அவருடைய முதல் காதல் எப்போதும் சினிமாவில் நடிப்பதுதான். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார். உங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் அவருக்கு வேண்டும்” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்…

“நீங்கள் எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. நிக்கோலய் சொன்னதுபோல என்னுடைய காதல் அவர்.

ஆனால், என்னுடைய உயிர் சினிமாதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன். வந்து வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சரத்குமார்…

“வரலட்சுமிதான் நிக்கோலயை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். நிக்கோலயுடன் எங்கள் குடும்பத்திற்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. ரொம்ப எனர்ஜிட்டிக்கான மனிதர் அவர். அவர் கொடுத்திருக்கும் சந்தோஷம் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இறைவனால், இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்”.

Varalakshmis first love cinema says Nicholas Sachdev

கலவை விமர்சனங்களை காலி செய்யும் கமல்.; விநாடிகளை குறைத்து விறுவிறுப்பை ஏற்றிய லைக்கா & ஷங்கர்

கலவை விமர்சனங்களை காலி செய்யும் கமல்.; விநாடிகளை குறைத்து விறுவிறுப்பை ஏற்றிய லைக்கா & ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலவை விமர்சனங்களை காலி செய்யும் கமல்.; விநாடிகளை குறைத்து விறுவிறுப்பை ஏற்றிய லைக்கா & ஷங்கர்

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 என்ற அறிவிப்பு வெளியான போதே இதன் மீதான பரபரப்பு இந்திய ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது.

இந்தியன் 2 படமாகும் வேளையில் பல பிரச்சனைகளால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனது.. இதனால் இந்தியன் 2 வெளிவராது என்ற பல தகவல்கள் வந்த நிலையில் அதனை அடித்து நொறுக்கும் வகையில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆக இரண்டு பாகத்தையும் ஒரே நேரத்தில் படமாக்கி அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் ஷங்கர்.

ஷங்கரின் முயற்சிக்கு உறுதுணையாக கமல் மற்றும் லைக்கா இருவரும் கைகோர்த்து நிற்க அதன்படி கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படமானது திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய அனிருத்தின் இசையில் படம் உருவாகி வெளியானது.

பிரபல நட்சத்திரங்கள் பிரம்மாண்டம மேக்கிங் செட் அமைப்பு என அனைத்தும் கவரும் வகையில் இருந்தாலும் இந்த படத்தின் நீளம் கலவையான விமர்சனங்களை கொண்டு வந்தது.

தற்போது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட படக்குழுவினர் 12 நிமிடங்களை குறைத்து இந்தப் படத்தை திரையிட்டு வருகின்றனர்.

அதன்படி புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இது கமல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மீண்டும் ஒரு வரவேற்பை கொடுத்துள்ளது..

Indian 2 movie scenes trimmed upto 12 mins

அர்ஜுன் தாசுக்கு ஜோடியாகும் கார்த்தி – சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

அர்ஜுன் தாசுக்கு ஜோடியாகும் கார்த்தி – சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அர்ஜுன் தாசுக்கு ஜோடியாகும் கார்த்தி – சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’*

*அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்*

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4 ‘ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.‌

(கார்த்தி நடித்த விருமன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் ஆகிய படங்களில் அதிதி நாயகியாக நடித்திருந்தார்.)

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து, தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து, திரையுலக வணிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றிருக்கும் தயாரிப்பாளரும், தன்னுடைய காந்த குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கும் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைவதாலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆரவாரமான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Arjundass and Aditi pair in new project

‘மூக்குத்தி அம்மன் 2’.. நயன்தாராவுடன் இணைந்து தயாரிக்கும் ஐசரி கணேஷ்

‘மூக்குத்தி அம்மன் 2’.. நயன்தாராவுடன் இணைந்து தயாரிக்கும் ஐசரி கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மூக்குத்தி அம்மன் 2’.. நயன்தாராவுடன் இணைந்து தயாரிக்கும் ஐசரி கே. கணேஷ்

*வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’*

*வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’*

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டில் மட்டும் ‘சிங்கப்பூர் சலூன்’, ‘ஜோஷ்வா இமைப் போல் காக்க’, ‘பி டி சார்’ என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் அடுத்த வெற்றி படைப்பாக ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படம் தயாராகவுள்ளது.

இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் பட தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படத்தை 2025 ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Mookuthi Amman 2 produced by Nayanthara and Isari Ganesh

800 இருக்கைகளுடன் 3 தியேட்டர்ஸ்.. தஞ்சையில் பிரம்மாண்டமான ‘லாங்க் வால் மால்’

800 இருக்கைகளுடன் 3 தியேட்டர்ஸ்.. தஞ்சையில் பிரம்மாண்டமான ‘லாங்க் வால் மால்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

800 இருக்கைகளுடன் 3 தியேட்டர்ஸ்.. தஞ்சையில் பிரம்மாண்டமான ‘லாங்க் வால் மால்’

*தஞ்சையில் மிக பிரமாண்டமாக துவங்கப்பட்ட “லாங்க்வால்” மால்,

தஞ்சையில் லாங்வால் வணிக வளாக துவக்க விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் துவக்க விழா (10.04.2024) நடத்தப்பட்டது.

இவ்விழாவை தமிழக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி. ராஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

விழாவில் பேசிய…

“டி.ஆர்.பி. ராஜா பேசுகையில் தமிழகத்தில் முக்கிய நகரமாக தஞ்சையை மாற்றுவதில் முதல்வர் தீவிரமாக உள்ளார்.

தஞ்சை நகரில் தொழில் வளர்ச்சி வர வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது.

விவசாய பெருங்குடி மக்கள் உள்ள இந்த பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் இந்த மால் மிகப்பிரம்மாண்டமாக 2,00,000 சதுர அடியில் உருவாகியுள்ளது.

இந்தியாவின் முன்னனி ஆடை நிறுவனங்களும் உலகின் தலை சிறந்த நிறுவனங்களும் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட உள்ளன. மேலும் இங்கு 800 இருக்கைகள் கொண்ட மூன்று திரையரங்குகளும் அமைந்துள்ளது.
சிறப்பான விசயமாக உள்ளது.

இப்பெரும் நிறுவனம் உருவாக காரணமான வி.என்.டி இளங்கோவன், சுஜய் கிருஷ்ணா, சஞ்சய் குமார் உள்ளிட்டோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் மாநகராட்சி மேயர் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆஷிஸ் ராவத் IPS சென்னை சில்க்ஸ் நந்தகோபால் அரவிந்த் Eye Hospital அரவிந்த் Hereditary trustee ஸ்ரீ பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய லாங்வல் மால் சேர்மன் திரு. சுஜய் கிருஷ்ணா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழில்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Long wall complex launched in Tanjore

More Articles
Follows