‘வாஸ்கோடகாமா’ ஹைலைட்ஸ்.: ரஜினிக்கு நன்றி.. 40 வயது குழந்தை நகுலுக்கு நான் அம்மா.. – தேவயானி

‘வாஸ்கோடகாமா’ ஹைலைட்ஸ்.: ரஜினிக்கு நன்றி.. 40 வயது குழந்தை நகுலுக்கு நான் அம்மா.. – தேவயானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வாஸ்கோடகாமா’ ஹைலைட்ஸ்.: ரஜினிக்கு நன்றி.. 40 வயது குழந்தை நகுலுக்கு அக்கா இல்லை அம்மா.. – தேவயானி

நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு!

சினிமாவை அழித்து விடாதீர்கள் : நடிகர் நகுல் பேச்சு!

44 நடிகர்களை வைத்து 41 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள படம் வாஸ்கோடகாமா : இயக்குநர் ஆர்ஜிகே பேச்சு!

5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா. இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த
‘ வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.

விழாவில் நடிகை தேவயானி பேசும் போது,

“முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன.

என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அவனை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.

எனக்கும் அவனுக்கும் நல்ல அன்பான உறவு இருக்கிறது. நகுல் எங்கள் வீட்டுக் குட்டிப் பையன். அவன் எனக்குச் சின்னத்தம்பி.அவன் பல திறமைகள் உள்ளவன். நானே அவனுக்கு ஒரு விசிறி தான்.பாய்ஸ் படத்திற்குப் பிறகு அவனுடைய காதலில் விழுந்தேன் படத்தைப் பார்த்த போது அவனுக்குள் ஏற்பட்டிருந்த மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. நகுல் நல்ல திறமையான நடிகன். முழுப் படத்தையும் தன் தோளில் தாங்கி சுமப்பவன். அவனுக்கு ஒரு நல்ல கதை வேண்டும். நல்ல இயக்குநர் வேண்டும்.நல்ல ஒரு கதைக்காக, நல்ல ஒரு இயக்குநருக்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான்.எல்லாருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்வார்கள். அந்த நல்ல நேரத்திற்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன்.

அவன் எனது தம்பி என்பதற்காகச் சொல்லவில்லை .அவன் நல்ல திறமைசாலி. அவன் நல்ல நடிகன் மட்டுமல்ல, நன்றாகப் பாடுவான்; நன்றாக ஆடுவான்; இசை அமைப்பான். தன்னைச் சுற்றி உள்ளவர்களை உற்சாகமாக வைத்திருப்பான்..
அப்படிப்பட்ட ஒரு தம்பியும் அக்காவும் இந்த சினிமாவில் இருப்பதே அபூர்வம் தான்.இப்படி வேறு எங்கே இருக்கிறது?

அவனுக்கு நான் முறையில் அக்கா என்றாலும் வயதில் சின்னவனாக இருப்பதால் அவனை நான் அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வேன்.அவனுக்கு நான் இன்றும் அம்மாதான்.சின்ன வயதில் இருந்து துறுதுறு என்று இருப்பான். நல்ல திறமைசாலி.

அவன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் பட விழாவில் அக்காவாக நான் கலந்து கொள்வது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. இதை என்னால் நம்ப முடியவில்லை.

இப்படி ஒரு வாய்ப்பு எத்தனைப் பேருக்குக் கிடைக்கும்? எந்த அக்காவுக்கு கிடைக்கும்?

இன்று என் அப்பாவும் அம்மாவும் இல்லை. ஆனால் இங்கே நாங்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் இங்கே இருப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசீர்வாதம் இங்கே நிரம்பி இருப்பதாக நினைக்கிறேன்.இங்கு நடப்பது ஒவ்வொன்றும் அவர்களைப் போய்ச் சேரும்.எப்போதும் அவனுக்கு ஆதரவாக இருந்த அவர்கள் இப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அவனைச் சூழ்ந்து இருந்த கரிய புகைமேகங்கள் விலகி விட்டன. இனி அவனுக்கு நல்ல காலம் தான். இனி நீ நல்ல நல்ல படங்கள் செய்ய வேண்டும். நகுல் நீ எதற்கும் கவலைப்படாதே. மற்றவர்கள் அவனுக்கு ஆதரவு கொடுங்கள் “என்று கூறி வாழ்த்தினார் .

விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசும்போது,

“இந்த படத்தின் தயாரிப்பாளர் பெயர் சுபாஸ்கரன், எடிட்டர் பெயர் தமிழ்குமரன். இந்த பெயர்கள் எனக்கு லைகாவை நினைவூட்டுகின்றன. அந்த லைகா நிறுவனம் போல் இவர்களும் வளர வேண்டும். நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.படத்தை இயக்கியுள்ள ஆர் ஜி கே தன்னம்பிக்கை உள்ள இளைஞன். ‘எ பிலிம் பை ஆர்ஜிகே ‘என்று போடும்போது யாரும் எதுவும் சொல்வார்களோ என்று நினைக்காமல் தைரியமாகப் போட்ட அந்தத் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.

என்னிடம் வாஸ்கோடகாமா கதையைப் பற்றிச் சொல்லும் போது நல்லவர்கள் எல்லாம் ஜெயிலில் இருக்கிறார்கள், கெட்டவர்கள் எல்லாம் வெளியில் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட ஒரு கதை என்றார். அதுவே எனக்குப் பிடித்து விட்டது.
அவரிடம் எப்போதும் ஒரு தேடல் இருக்கும்.

படப்பிடிப்பில் அவர் அப்படித்தான் தனக்குத் தேவையானதைச் சமரசம் இல்லாமல் பெற்றுக் கொள்வார். இப்படிப்பட்ட நம்பிக்கைதான் ஒருவனுக்கு வெற்றியைத் தேடித் தரும்” என்று வாழ்த்தினார்.

இயக்குநர் அறிவழகன் பேசும்போது,

”ஒரு படத்தில் இயக்குநர் பணியாற்றும் போது தயாரிப்பாளரின் பட்ஜெட்டின் சூழலுக்கு ஏற்ப தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டும். அது முக்கியம். சரியான பட்ஜெட் இருக்கிறதா வசதிகள் இருக்கிறதா என்பதை எல்லாம் பார்ப்பதை விட இந்த அடாப்டேஷன் முக்கியம்.

கே.எஸ்.ரவிகுமாரின் இணை இயக்குநரிடம் நான் பேசிக்கொண்டிருந்த போது படையப்பா வில் அந்த ஊஞ்சல் காட்சி எடுக்கப்பட்ட விதத்தைக் கூறினார். மாலை மூன்று மணிக்கு அப்போது அவ்வளவு பெரிய சீன் எடுக்க முடியாத அளவுக்கு சூழல் இருந்தாலும் கூட அந்த நேரத்தில் ஆன்த ஸ்பாட் முடிவு செய்து இயக்குநர் அந்தக் காட்சியை எடுத்தது பற்றி அவர் கூறினார்.

ஒரு இயக்குநருக்கு படத்தின் கதையின் ஆன்மாவை எடுத்துச் செல்வது தான் முக்கியம் .அதுதான் வெற்றிக்கு வழி வகுக்கும். ஒரு படத்தின் டெக்னீஷன்கள் மனதார இதயபூர்வமாக அந்த படத்திற்காக உழைக்க வேண்டும். அது இந்தப் படத்திற்கு நடந்துள்ளது.

அந்த பாய்ஸ் படக் குழு இங்கு இருப்பதாக நான் உணர்கிறேன். நகுல் ஒரு ஆற்றல் மிக்க நடிகர். சினிமாவில் ஏற்ற இறக்கம் இழுபறி நிலைமை சகஜம். அதையும் தாண்டி ஜெயிப்பது தான் முக்கியம்” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்ஜிகே பேசும் போது…

” சினிமாவில் எனக்குத் தெரிந்ததெல்லாம் ரஜினி ஒருவர் தான். அவர் மூலம் தான் நான் சினிமாவைக் கற்றுக் கொண்டேன். நன்றி தலைவா !

இந்தப் படத்தில் ஒரு 40 வயது குழந்தை நகுலை நான் நடிக்க வைத்துள்ளேன் . இந்தப் படத்தில் 44 நடிகர்களை நடிக்க வைத்து 41 நாட்களில் படத்தை முடித்துள்ளேன். குறிப்பிட்ட பட்ஜெட்டில்,சொன்ன மாதிரி குறிப்பிட்ட நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம்.

இந்தப் படத்தில் நாங்கள் எடுக்க நினைத்ததை எடுத்திருக்கிறோம். நிச்சயமாக அது உங்களுக்குப் பிடிக்கும். நல்ல என்டர்டெய்னராக இருக்கும். வேண்டாம் என்று தோன்றுகிற பல காட்சிகளை பாரபட்சம் பார்க்காமல் எடுத்து விட்டோம்.கஷ்டப்பட்டு எடுத்து விட்டோமே என்று வைக்காமல் தூக்கி இருக்கிறோம்.

படம் பார்ப்பவர்களின் உணர்வு தான் முக்கியம். இதை உணர்ந்து சரியானபடி எடுத்துள்ளோம் என்று நினைக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு உள்ளது உள்ளபடி எழுதுங்கள் .நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்று எழுதுங்கள். இல்லை என்றால் நன்றாக இல்லை என்று எழுதுங்கள்” என்றார்.

நாயகன் நகுல் பேசும் போது,

“முதலில் இங்கு வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நட்பு வட்டம் சிறியது தான். ஆனால் என்றும் நான் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன். அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன் முன்பெல்லாம் நான் புலம்புவதுண்டு. வாழ்க்கை இப்படியே போகிறது என்று.

எனது வாழ்க்கை எங்கே தொடங்கி எங்கே போகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. மும்பையில் பள்ளியில் படித்த போது அக்கா இங்கே நடிக்க வந்து விட்டார். அவருக்காக, அவர் அழைத்ததால் இங்கு வந்து விட்டோம்.
நான் முதலில் பைலட் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்றேன் . பிறகு விஸ்காம் சேர்ந்தேன். அதுவும் ஒரு காதலுக்காக மாறினேன். அதுவும் நிறைவேறவில்லை.
ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன் .அதற்காக எடையெல்லாம் குறைத்தேன்.அதுவும் நடக்கவில்லை .

ஏதோ ஒரு அதிர்ஷ்டம், ஏதோ ஒரு ஆசீர்வாதம் காரணமாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.

ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் தான் பாய்ஸ் படத்தில் நடிக்க வந்தேன். பிறகு காதலில் விழுந்தேன் வந்தது. நான் ஒன்று நினைத்தால் எல்லோரும் இன்னொன்றை என்னிடம் ரசித்தார்கள். நான் பாடலாம் என்றால் அவர்கள் நகுல் நன்றாக ஆடுகிறார் என்றார்கள்.

படத்தில் எனது சண்டைக்காட்சிகள் இருந்தபோது நான் பயந்தேன். ஆனால் அவர்களோ என் நடனத்தை ரசித்தார்கள்.
பல தடைகள் தாமதங்களுக்குப் பிறகு எப்படியோ அடுத்தடுத்த படங்கள். இப்படித்தான் மாசிலாமணி வந்தது, பிறகு வல்லினம் வந்தது.

சில மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கூட இருந்தேன் .ஒரு கட்டத்தில் புலம்பதில் பயனில்லை என்று புரிந்தது. எதெது எப்போது நடக்குமோ அதது அப்போது நடக்கும் என்கிற தெளிவு வந்தது.

இரண்டு மணி நேரம் சிரிக்கச் சிரிக்க இந்த வாஸ்கோடகாமா படத்தின் கதையைச் சொன்னார் ஆர்ஜிகே. அதேபோல் எடுத்துள்ளார். இதுவரை நான் நடிக்காத டார்க் ஹ்யூமர் கதை இது . இப்படத்தில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இயக்குநர் நம்பிக்கையை விடவில்லை .என்னை அவர் நம்பினார்.. அவரை நான் நம்பினேன் .தயாரிப்பாளர் எந்தக் குறையும் வைக்கவில்லை.

என்னுடைய வாழ்க்கை என்னுடைய வழி, இதுதான் எனது கொள்கை. இப்படித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் .

நான் என்னென்னவெல்லாமோ கற்பனை செய்தேன்.. நான் எப்போதும் நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை எல்லாம் நல்ல நேரம் தான் என்று நினைக்கிறேன்.

நான் நினைத்துப் பார்க்கிறேன் அந்த நேரத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் எப்போதும் என்னைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன்.

சினிமாவில் விமர்சனம் கூடாது என்பது அல்ல ,அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சினிமா நூற்றாண்டு கண்டு விட்டது. இதை நம்பி பலபேர் இருக்கிறார்கள். இங்கே யாரும் பர்பெக்ட் கிடையாது. எல்லோரிடமும் குறைகள் உள்ளன. விமர்சனம் என்கிற பெயரில் சினிமாவை அழித்து விடாதீர்கள்.

ஆகஸ்ட் இரண்டாம் தேதி என் மகளது பிறந்த நாள். அன்று இந்தப் படம் வெளியாக உள்ளது கூடுதல் மகிழ்ச்சி ” என்றார்.

இவ்விழாவில்,படத்தைத் தயாரித்திருக்கும் டத்தோ. பா. சுபாஸ்கரன், நாயகி அர்த்தனா பினு,இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பயில்வான் ரங்கநாதன், பாய்ஸ் மணிகண்டன், வாழ்த்த வருகை தந்த சாந்தனு, ஜெகன் படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் யுவராஜ், இசையமைப்பாளர் அருண் என்.வி , ஒளிப்பதிவாளர் என். எஸ். சதீஷ்குமார், எடிட்டர் தமிழ்குமரன் , கலை இயக்குநர் ஏழுமலை ஆதிகேசவன், பாடகர் அந்தோணி தாஸ், இணைத் தயாரிப்பாளர் கோபிநாத் நபராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.முன்னதாகத் தயாரிப்பாளர் டத்தோ பா. சுபாஸ்கரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

Devayani emotional speech at Vascodagama trailer launch

மக்கா மிஷி.. அப்படின்னா என்ன பால் டப்பா.? பிரதர் உங்களுக்கு தெரியுமா.?

மக்கா மிஷி.. அப்படின்னா என்ன பால் டப்பா.? பிரதர் உங்களுக்கு தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கா மிஷி.. அப்படின்னா என்ன பால் டப்பா.? பிரதர் உங்களுக்கு தெரியுமா.?

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் 8வது தயாரிப்பு பிரதர்.

அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப படமாக உருவாகியுள்ளது ‘பிரதர்’.

‘பிரதர்’ படத்திற்காக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளனர்.

இதில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷ் கையாளுகிறார்.

இந்த படம் ஜெயம் ரவியின் 30வது படமாக உருவாகியுள்ளது. ரவி அக்காவாக பூமிகா நடித்துள்ளார்..

விரைவில் இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில் தற்போது படத்தின் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிரதர் படத்தில் இடம்பெற்றுள்ள மக்கா மிஷி என்ற பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கா மிஷி என்றால் என்ன?:என்ற ப்ரோமோ வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது..

மக்கா மிஷி என்றால் கெத்து ஸ்வாக் என்று பாடலைப் பாடிய பால் டப்பா தெரிவித்துள்ளார்..

Makka Mishi song promo from Brother

அசத்த வரும் ‘அமீகோ’.. இந்தியாவின் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி திரில்லர்

அசத்த வரும் ‘அமீகோ’.. இந்தியாவின் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி திரில்லர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசத்த வரும் ‘அமீகோ’.. இந்தியாவின் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி திரில்லர்

தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை சாந்தினி தமிழரசன் (Chandini Tamilarasan) கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அமீகோ’ (Amigo)எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லர் ஜானரில் ‘அமீகோ’ திரைப்படம் தயாராகி இருப்பதால், இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.‌

அறிமுக இயக்குநர் பி. பிரவீண் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமீகோ’ எனும் திரைப்படத்தில் சாந்தினி தமிழரசன், அர்ஜுன் சோமையாஜுலா, சுவிதா ராஜேந்திரன், பிரவீன் இளங்கோ, வத்சன் சக்கரவர்த்தி, வெக்கே, மனிஷா ஜஷ்னானி, பிரக்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘அயலி’ எனும் இணைய தொடர் புகழ் ரேவா இசையமைத்திருக்கிறார்.

ஏழுமலை ஆதி கேசவன் கலை இயக்குநராக பணியாற்ற, படத்தொகுப்பு பணிகளை பிரதீப் சந்திரகாந்த் கவனித்திருக்கிறார். சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரத்யாக்ரா மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. கிரிஜா தயாரித்திருக்கிறார்.

இணை தயாரிப்பு பணியை ஜீத்து பிரபாகரன் மேற்கொண்டிருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” அமீகோ திரைப்படம் இந்தியாவில் தயாராகி இருக்கும் முதல் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் திரைப்படமாகும்.

இந்திய திரை உலகினரை திரும்பிப் பார்க்க வைக்கும் புதுமையான திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.

டிஜிட்டல் உலகின் மறுபக்கத்தை.. திகிலூட்டும் அம்சங்களுடன் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் தொடர்பான அத்துமீறலில் சிக்கும் நண்பர்கள் குழுவை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.‌

இவர்கள் இணையத்தின் மறைவான பகுதியில் பதுங்கி இருக்கும்.. ஒரு தீங்கை விளைவிக்கும் நிறுவனத்தின் கொடூரமான சவால்களை எதிர்கொண்டவர்களாக இருக்கலாம் அல்லது வெளிப்புறத் தோற்றத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற பயங்கரமான யதார்த்தமாகவும் இருக்கலாம்.

இந்த திரைப்படத்தின் சிறப்பம்சம்- அதன் தனித்துவமான திரைக்கதையிலும், ஜானரிலும் உள்ளது. சைபர் திரில்லர் திரைப்படங்கள் – பல ஆண்டுகளாக பார்வையாளர்களை வசீகரித்து, தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கத்தையும், அதிகரித்து வரும் ஆபத்துகளையும் விவரித்திருக்கிறது.

திகில் படங்களும் ஏராளமாக வருகை தந்திருக்கிறது.

ஆனால் அமீகோ – அற்புதமான கற்பனை மற்றும் அறிவியல் புனைவு கதை அம்சங்களை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இது மேலும் மர்மத்தை பற்றிய பயத்தை கூடுதலாக அதிகரிக்கிறது. இந்த தனித்துவமான கலவையானது இந்தியாவில் திகில் பட படைப்புகளை.. அதன் எல்லைகளை மறு வரையறை செய்யும் திறனை கொண்டிருக்கிறது.‌

பாரம்பரியமாக இந்திய திகில் படங்கள் பெரும்பாலும் பேய் , ஆவி போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை நம்பியுள்ளன. ஆனால் ‘அமிகோ ‘ இதுவரை யாரும் அறியப்படாத பிரதேசத்திற்குள் நுழைகிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் உலகில் அமைதியற்ற சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது. இந்த புதிய முற்போக்கான படைப்பு பார்வையாளர்களை பயமுறுத்தவும் செய்யும். அதே தருணத்தில் கவர்ந்திழுக்கவும் செய்யும்.

அமீகோ என்றால் நண்பர் என பொருள். இந்தத் திரைப்படம் நண்பர்களை சுற்றியுள்ள சூழ்ச்சிகளையும், அதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளையும் சுவாரசியமாக வழங்குகிறது. மேலும் இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க அடையாளத்தை ஏற்படுத்தும்.

ஊடக துறையில் பணியாற்றும் நண்பர்கள் குழுவிற்கு இடையேயான உரையாடலின் போது… எதிர்பாராத வகையில் அன்னியன் ஒருவனின் காணொளி அழைப்பு குறிக்கிடுகிறது. இவர்களின் உரையாடலில் எதிர்பாராமல் ஊடுருவிய அந்த அன்னியன் .. எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்துகிறான். அந்த மர்ம உருவம் – நண்பர்களைப் பற்றிய அந்தரங்கமான விசயங்கள்.. அவர்கள் மறைக்கும் இருண்ட ரகசியம் ..‌ தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கிறது.

அத்துடன் அவர்களை ஒரு வகையான விளையாட்டில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கிறது. அவர்களும் வேறு வழி இல்லாமல் ஆபத்தை உணர்ந்தே அந்த விளையாட்டில் மூழ்குகிறார்கள். அவர்களின் ஆன்லைன் உலகத்திற்கும், யதார்த்தத்திற்கும் இடையிலேயான நிலைபாடு கேள்விக்குறியாகிறது.

அந்த நண்பர்கள்- மர்ம மனிதன் வீசிய வலையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை” என்றார். ஆகஸ்ட் மாதம் விக்கி பிலிம்ஸ் வெளியீடாக வருகிறது..

#amigo #amigotamilmovie #amigomovie #amigothriller #amigohorror #amigopanindianmovie #amigoapp #amigo2024

Amigo Official Trailer and movie news

—–

தங்கலான் Vs அந்தகன்..; ஒரே நாளில் மோதும் கசின்ஸ் பிரஷாந்த் – விக்ரம்

தங்கலான் Vs அந்தகன்..; ஒரே நாளில் மோதும் கசின்ஸ் பிரஷாந்த் – விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கலான் Vs அந்தகன்..; ஒரே நாளில் மோதும் கசின்ஸ் பிரஷாந்த் – விக்ரம்

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் `அந்தாதூன்’.

தற்போது இந்த படத்தை தமிழ் ரீமேக் ரைட்ஸ் பெற்று உருவாக்கி இருக்கிறார் தியாகராஜன்.

அந்தகன் என்ற இந்த படத்தில் பிரஷாந்த், கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை பிரஷாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த படத்தில் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இதே நாளில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படமும் வெளியாகும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோலார் தங்க வயல் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருக்கிறார்..

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் மாளவிகா நாயகியாக நடித்திருக்கிறார்..

கூடுதல் தகவல்…

விக்ரம் மற்றும் பிரசாந்த் இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Prashanths Andhagan and Vikrams Thangalaan clash on 15th August

விக்னேஷ் ரீ-என்ட்ரி.. ‘ரெட் ப்ளவர்’ பட போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

விக்னேஷ் ரீ-என்ட்ரி.. ‘ரெட் ப்ளவர்’ பட போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் ரீ-என்ட்ரி.. ‘ரெட் ப்ளவர்’ பட போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

“RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டர்ஐ வெளியிட்டார் நடிகர் “விஜய் சேதுபதி

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் “RED FLOWER” ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.

நடிகர் விஜய் சேதுபதி “RED FLOWER” படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்.

நடிகர் விக்னேஷ் நடித்த ரொமான்டிக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் அவரது கதாபாத்திர வடிவமைப்பும் , அவரது தோற்றமும் , நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும்.

அவரது மறுபிரவேசத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், பெரியதோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ள இப்படம், காதலுக்கு விருந்தாக இருக்கும் என உறுதியளிக்கிறது.

காலத்தால் அழியாத காதலை சமகாலக்கூறுகளுடன் கலக்கும் கதைக்களத்துடன் வடிவமைத்துள்ளார் இயக்குனர், இந்தப் படம் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

மனிஷா ஜஷ்னானி நாயகியாக நடிக்கிறார். படத்தின் மற்ற கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க, படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே.மாணிக்கம் தயாரிக்கும் “Red Flower“மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள அக்ஷன் த்ரில்லர் திரைப்படம்.. இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயங்களை பற்றி இப்பபடம் பேசும் என்று இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்தார்…

Vignesh starring Red flower poster launched by Vijaysethupathi

வன்முறையான சமூகம் இது.; ‘வள்ளியம்மா பேராண்டி’ அறிவு விழாவில் ரஞ்சித் & இமான் பங்கேற்பு

வன்முறையான சமூகம் இது.; ‘வள்ளியம்மா பேராண்டி’ அறிவு விழாவில் ரஞ்சித் & இமான் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வன்முறையான சமூகம் இது.; ‘வள்ளியம்மா பேராண்டி’ அறிவு விழாவில் ரஞ்சித் & இமான் பங்கேற்பு

வேரற்ற மனிதர்களானால் வெட்டி வீழ்த்தப்படுவோம்.. பாடகர் அறிவு விழாவில் ரஞ்சித் & இமான் பங்கேற்பு

தனி இசை கலைஞர் அறிவு எழுதி பாடி ஆடிய ‘வள்ளியம்மா பேராண்டி’ முதல் பாகம் இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.‌ ரஞ்சித், ராப் பாடகர் அறிவு, இசையமைப்பாளர் இமான், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இமான்…

“தெருக்குரல் அறிவு என்பதை மாற்றும் நேரம் வந்து விட்டது. ஒவ்வொரு பாடலும் நன்றாக இருந்தது. நேற்று போன் பண்ணி சொந்த அண்ணணாக கேட்கிறேன். வாருங்கள் என்று சொன்னார். அதற்காக வந்து விட்டேன்.. வள்ளியம்மா பேராண்டி ஆல்பத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அருமை வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளரும் இயக்குநருமான ரஞ்சித் பேசியதாவது…

ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தான் ஒரு கலைஞனை பக்குவப்படுத்தும், எதிர்மறையான விமர்சனங்களை கண்டுகொள்ள தேவையில்லை.. எனவே அறிவு நிறைய கற்றுக் கொள்வான் என்று நினைக்கிறேன்.

கலை இலக்கியத்தை அரசியல்படுத்த வேண்டும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம்.. எனவே சினிமாவுக்கு வந்தோம்.

அரசியல் தன்மையோடு இருக்க வேண்டும்.. அந்த யோசனை இருப்பவர்களுடன் வேலை செய்ய வேண்டும்.. முதன் முதலில் என் முன் பாடிய அறிவு இப்போது நன்றாக வளர்ச்சி அடைந்த மாற்றத்தை பார்த்து வருகிறேன்.‌

காலா படத்திலும் அறிவு எழுதிய பாடல் அருமை. நான் பார்ப்பதற்கு முன்பே அம்பேத்கரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். அது எனக்கும் அவருக்குமான நெருக்கத்தை அதிகரித்தது.

வடசென்னை, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களிலும் அறிவு எழுதிய பாடல்கள் மக்களிடம் சேர்ந்திருக்கிறது. அதிலும் எஞ்சாயி என்ஜாமி பாடல் மிகப்பெரிய ஹிட். அந்த பாடல் மூலம் அவர் பல பிரச்னைகளை சந்தித்தார், மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார். அதற்கு பதிலடி தான் இந்த ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பம்” என்று பேசினார்.

பாடகர் அறிவு பேசியதாவது…

“என்ஜாய் என்ஜாமி பாடலை பாடும் போது நான் பேச நினைத்தது எனக்கு பிரச்சினையாக இருந்தது.

இந்த சாதியில் பிறந்ததால் உனக்கு படிப்பு வராது என்று சொன்னார்கள். அதை கேட்டதும் கோபமாக வந்தது.. ஏன் அப்படி சொன்னார்கள் ? கலையை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் சமூக மாற்றத்துக்கான கருவியாக பயன்படுத்த வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

நாம் வேரற்ற மனிதர்களானால் எளிதில் வெட்டி வீழ்த்தப்படுவோம். ஆபத்தான வன்முறை நிறைந்த சமூகத்தில் நாம் இருக்கிறோம்.

ஒருவேளை நாளை கொல்லப்படுகிற ஆள் நான் ஆகவோ அல்லது எனக்கு தெரிந்த நபராகவோ இருக்குமோ என்ற பயத்துடன் வாழ வேண்டி இருக்கிறது.

நாம் எந்த தவறும் செய்யாதவர்கள். ஒட்டுமொத்த உலகத்தையும் நேசிக்கும் பேராண்மை கொண்ட மக்கள், நம் மாண்பை மீட்டெடுப்போம்” என்று பேசினார்.

Imman Ranjith Arivu speech at Valliyamma Perandi album launch

More Articles
Follows