சுஷாந்த் சிங் பிறந்த நாளில் டெல்லியில் முக்கிய சாலைக்கு அவரது பெயர் வைக்க அனுமதி

sushant singh rajputபல ஹிந்தி படங்களில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார்.

கடந்த 2020 ஜூன் மாதம் 14ஆம் தேதி மர்மமான முறையில் மும்பையில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 34.

இவரது மரணம் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது வரை இவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லியிலுள்ள ஆண்ட்ரூஸ் கஞ்ச் என்ற பகுதிக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர் சூட்டப்படவுள்ளது.

அந்த பகுதி காங்கிரஸ் கவுன்சிலரான அபிஷேக் தத், இதற்கான முன்மொழிவை கொண்டுவந்தார்.

இந்த முன்மொழிவினை உள்ளாட்சி அமைப்பின் சாலை பெயரிடுதல், மறுபெயரிடுதல் குழுவுக்கு அனுப்பி வைத்தது டெல்லி மாகராட்சி.

அந்த பகுதியில் ஆண்ட்ரூஸ் கஞ்ச் முதல் இந்திரா கேம்ப் வரை உள்ள சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் மார்க் என பெயர் வைக்க மக்கள் வலியுறுத்துவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே சுஷாந்த் பெயரை வைக்கும் இந்த முன்மொழிவுக்கு அவரது 35ஆவது பிறந்தநாளான நேற்று மாநகராட்சி ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சுஷாந்த் பெயரில் சாலை என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Delhi street to be named after Actor Sushant Singh Rajput

Overall Rating : Not available

Latest Post