இலவச ரேஷன் பொருட்கள்.. வாடகை கார் ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ 5000 உதவித்தொகை..; முதல்வர் உத்தரவு

auto driverகொரோனா பரவலைத் தடுக்க கடந்த 3 வாரங்களாக கடும் விதிகளுடன் புதுதில்லியில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

தற்போது வரை புது டில்லியில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனவே அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜரிவால்.

இந்த ஊரடங்கால் கொரோனா பாதிப்பு 35% குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து கூறியுள்ளதாவது…

“ஊரடங்கால் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆனால், கட்டுமானம் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே பதிவு செய்த கட்டிடப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினோம்.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாகப் பொருட்கள் வழங்கப்படும்.

ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்களும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள். அவர்களும் ஊரடங்கு காலத்தில் சிரமப்படுவார்கள்.

இதனால் பதிவு செய்த ஓட்டுநர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் ஊரடங்கு நீக்கப்படும்.” என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Delhi CM provides 5000 rs to auto and cab drivers

Overall Rating : Not available

Latest Post