BREAKING கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீடிப்பு; அதே சமயம்… – மோடி

BREAKING கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீடிப்பு; அதே சமயம்… – மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona lockdown extend till May 3 few conditional relief from April 20 says Modiகொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் பல உயிரிழப்புகள் தினம் அரங்கேறி வருகிறது. இதனால் மக்கள் வீட்டில் உள்ளே அடங்கி கிடங்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே 4-வது முறையாக இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

உலகில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

உலகில் பல நாடுகள் இந்தியாவின் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றன.

ஊரடங்கால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. அனைவரும் மாஸ்க் அணிந்தபடியே வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.

எனவே கொரோனாவை தடுப்பதற்காக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

ஏப்ரல் 20-ம் தேதி வரை கண்டிப்புடன் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.

அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்த பகுதிகளில் சில தளர்வுகள் செய்யப்படும். தளர்வுகளுக்கு பிறகு கொரோனா மீண்டும் பரவினால் நிச்சயம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Corona lockdown extend till May 3 few conditional relief from April 20 says Modi

யார் சூப்பர் ஸ்டார்.? 25 கோடி கொடுத்த அக்‌ஷய், எக்ஸ்ட்ரா 3 கோடி உதவி

யார் சூப்பர் ஸ்டார்.? 25 கோடி கொடுத்த அக்‌ஷய், எக்ஸ்ட்ரா 3 கோடி உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covid 19 Akshay Kumar donates Rs 3 crores to the BMCகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகள், வேலைக்கு செல்வோர், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இதனை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நிவாரண நிதி திரட்டி மக்களும் வழங்கி வருகின்றன.

ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார்.

இவரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

தற்போது மும்பை மாநகராட்சிக்கும் இன்னும் ரூ.3 கோடி வழங்கி இருக்கிறார் இந்த உயர்ந்த மனிதர்.

மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள் போன்றவற்றை தயார் செய்வதற்காக இந்த தொகையை அவர் வழங்கி உள்ளதாக அக்சய்குமார் தெரிவித்துள்ளார்.

“நம் மக்களை கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க இரவு-பகலாக வேலை செய்துவரும் காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தொண்டு அமைப்பினர், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.

தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருந்து தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினர் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே சூப்பர் ஸ்டார்” எனவும் அக்சய்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Covid 19 Akshay Kumar donates Rs 3 crores to the BMC

கொரோனா ஊரடங்கால் தீபாவளிக்கு தள்ளிப்போகும் ‘அண்ணாத்த’ ரஜினி

கொரோனா ஊரடங்கால் தீபாவளிக்கு தள்ளிப்போகும் ‘அண்ணாத்த’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinis Annaatthe postponed 2020 Diwaliசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையைமத்து வரும் இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும், நயன்தாரா வழக்கறிஞராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு முழுக்க முகுக்க கிராமத்து கதையம்சத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இப்பட சூட்டிங் ஐதராபாத் நடைபெற்றது.

விரைவில் கொல்கத்தா மற்றும் புனேயில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டனர்.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வடநாட்டு சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு ஐதராபாத்திலேயே மீண்டும் சூட்டிங்கை தொடர்ந்தனர்.

இந்த படத்தை ஆயுத பூஜையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர்.

ஆனால் கொரோனா பிரச்சினை தீரும் வரை சூட்டிங்கை நடத்த முடியாது என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.

எனவே இந்தாண்டு 2020 தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ ரிலீஸ் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

Super Star Rajinis Annaatthe postponed 2020 Diwali

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடிப்பு.; தமிழகம்-புதுவை முதல்வர்கள் அறிவிப்பு

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடிப்பு.; தமிழகம்-புதுவை முதல்வர்கள் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilnadu and Puducherry extended Corona lock down up to April 30உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல உயிர்களை கொன்று குவித்து வருகின்றது.

இதனைக் கட்டுப்படுத்த உலகில் உள்ள பல நாடுகள் முயற்சித்து வந்தாலும் இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அறிவித்த தேசிய ஊரடங்கு நாளை ஏப்ரல் 14 உடன் முடிவுக்கு வர உள்ளது.

இதனையடுத்து இந்த ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற அறிவிப்பை நாளை ஏப்ரல் 14 காலை 10 மணிக்கு அறிவிக்கவுள்ளார் பிரதமர் மோடி.

இதற்கு முன்பே தெலுங்கான, ஒடிசா,பஞ்சாப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்கள் ஊரடங்கை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி இருவரும் இந்த ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

Tamilnadu and Puducherry extended Corona lock down up to April 30

கமிஷனுக்கு இது நேரமல்ல.; உதவுபவன் கையை தட்டிவிடுவதா?; – கமல்

கமிஷனுக்கு இது நேரமல்ல.; உதவுபவன் கையை தட்டிவிடுவதா?; – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal slams TN CM for his order in stop volunteers help in lock downகொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வீதிக்கு வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் தினக்கூலியை நம்பியிருக்கும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அரசு உதவிகள் செய்தாலும் அது போதுமானதாக இல்லை. மேலும் அது நிறைய மக்களை சென்றயடையவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் தொண்டுள்ளம் கொண்டவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்கள் இயன்ற உதவிகளை தினம் செய்து வருகின்றனர்.

காய்கறி, அரிசி, மளிகை பொருட்களை ஏழைகளுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.

திமுக கட்சினர், ரஜினி மக்கள் மன்றத்தினர், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர்.

தற்போது வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு தனியார் அமைப்புகள் நேரடியாக உதவி செய்வதற்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உதவி செய்ய நினைப்பவர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படியும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்…

“அண்டை மாநிலங்கள் சில COVID19 உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப் பலரின் உதவியை நாடிப் பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டி விடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். This is no time for commision or omission. People are watching

Kamal slams TN CM for his order in stop volunteers help in lock down

https://twitter.com/ikamalhaasan/status/1249357039861559296

மோடிக்கு ஏன் கமல் கடிதம் எழுதினார்.? ஸ்ரீப்ரியா சொல்றத கேளுங்க!!

மோடிக்கு ஏன் கமல் கடிதம் எழுதினார்.? ஸ்ரீப்ரியா சொல்றத கேளுங்க!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sri Priya clarifies Why Kamal wrote letter to Modi நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தான் சொல்ல விரும்பும் கருத்தை பெரும்பாலும் ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகிறார்.

இதனால் இவரை அடிக்கடி ட்விட்டர் அரசியல் செய்கிறார் என்று சொல்பவர்களும் உண்டு.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் இருளை அகற்ற அனைவரும் அகல் விளக்கு ஏற்ற சொல்லியிருந்தார் பிரதமர் மோடி.

மோடியின் இந்த செயலைக் கண்டித்து 3 பக்க கடிதம் ஒன்றை கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

ஒரு பிரதமருக்கு இப்படியொரு காட்டமான கடிதத்தை யாரும் எழுதியிருக்க மாட்டார்கள் என்றனர்.

அந்த கடிதத்தில் பண மதிப்பிழப்பு எப்படித் திட்டமிடப்படாமல் நடத்தப்பட்டதோ, அதேபோல் ஊரடங்கும் சரியாகத் திட்டமிடப்படவில்லை.

அடித்தட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.. இது பால்கனியில் வாழும் மக்களுக்கான பால்கனி அரசு… என பல விஷயங்களை சுட்டிக் காட்டியிருந்தார் கமல்.

சிலர் வழக்கம் போல விமர்சித்தாலும் பலர் பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று தான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஸ்ரீப்ரியா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

“ஏன் கடிதம் எழுதுகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, என்ன செய்வது? நேரே சென்று மனுக்கள் கொடுக்க முடியாது, பொதுக்கூட்டங்கள் போட்டு மக்களுக்கு நிலைமையை எடுத்துக்கூற இயலாது. அப்புறம்? சமூக ஊடகம், தொலைப்பேசி, கடிதம். தகவல் போய்ச்சேர வேண்டுமே… சரிதானே?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Sri Priya clarifies Why Kamal wrote letter to Modi

https://twitter.com/sripriya/status/1249366387492974592

More Articles
Follows