UN LOCK 1.0 : ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு; ஜூன் 8 முதல் சில தளர்வுகள்

UN LOCK 1.0 : ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு; ஜூன் 8 முதல் சில தளர்வுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona Lock down to continue in Containment zones till June 30இந்தியா முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம் நாளை மே 31 தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது.

ஒரு பக்கம் கொரோனா உயிர் பலி அதிகரித்து வந்தாலும் 2 மாதங்களாக மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

எனவே பிரதமருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் நடத்தி ஆலோசனையின் பிறகு பொது முடக்கம் நீட்டிப்பு என அறிவித்துள்ளனர்.

ஜூன் 30 வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஜூன் 8ஆம் தேதி முதல் 3 கட்டங்களாகத் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 8ஆம் தேதி முதல் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன.

அதாவது அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

அதில்

ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

* திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

* பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது

* சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.

* ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

* பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

* கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

* ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

* சிறப்பு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

* இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.

* மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Corona Lock down to continue in Containment zones till June 30

‘பொன்மகள் வந்தாள்’ படத்திற்கு மாதர் சங்கம் எதிர்ப்பு.; இயக்குனர் மன்னிப்பு கோரினார்

‘பொன்மகள் வந்தாள்’ படத்திற்கு மாதர் சங்கம் எதிர்ப்பு.; இயக்குனர் மன்னிப்பு கோரினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ponmagal vandhal directorஅறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.

2டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்தது..

அதை தொடர்ந்து இயக்குநர் ப்ரெட்ரிக் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ” AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளக்கிறோம்.

இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

3 குடும்ப உறுப்பினர்கள் & வேலைக்காரியை தனி விமானத்தில் அழைத்து வர 20 லட்சம் செலவிட்ட தொழில் அதிபர்

3 குடும்ப உறுப்பினர்கள் & வேலைக்காரியை தனி விமானத்தில் அழைத்து வர 20 லட்சம் செலவிட்ட தொழில் அதிபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

flightதிடீரென அறிவிக்கப்பட்ட கொரோனா பொது முடக்கத்தால் 2 மாதங்களாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விமான சேவை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த மதுபான தொழிற்சாலை அதிபரின் குடும்பம் போபாலில் சிக்கிகொண்டதாம்.

தனது மகள் & அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் பணிப்பெண் ஆகிய 4 பேரை டெல்லி அழைத்து வர ஏர்பஸ்-ஏ 320 விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.

விமானம் டெல்லியில் இருந்து போபால் சென்று அந்த நால்வரை அழைத்துக்கொண்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பி வந்துள்ளது.

180 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தின் ஒரு நாள் வாடகை சுமார் ரூ .20 லட்சம் என தெரிய வந்துள்ளது.

விஜய்க்காக சரித்திர கதையுடன் காத்திருக்கும் டைரக்டர் சசிகுமார்

விஜய்க்காக சரித்திர கதையுடன் காத்திருக்கும் டைரக்டர் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sasikumarநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என் பன்முகம் கொண்டவர் சசிகுமார்.

இவரின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் இயக்கவுள்ள சரித்திர கதையில் விஜய் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

அதில்…’வரலாற்றுக் காலத்து உடைகள் அணிந்து சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை.

ஆனால் வரலாற்று கதையை இயக்க ஆர்வம் உள்ளது.

அதற்கான கதை ஒன்றை தயார் செய்து விஜய்யிடம் கூறினேன். அவருக்கு கதை பிடித்துவிட்டது. படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் படம் தொடங்கப்படவில்லை.

ஆனால் விரைவில் விஜய்யுடன் சேர்ந்து அந்த வரலாற்று கதையை படமாக்குவேன் என தெரிவித்துள்ளார் சசிகுமார்.

யுவனை இஸ்லாம் மதத்திற்கு ஏன் மாற்றினீர்..? ஷாஃப்ரூன் நிஷா பதிலடி

யுவனை இஸ்லாம் மதத்திற்கு ஏன் மாற்றினீர்..? ஷாஃப்ரூன் நிஷா பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yuvan shankar raja third wifeஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

நிறைய ரசிகர்கள் யுவனை ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்கள்? என கேட்டனர்.

இளையராஜா மகனை மாற்றிவிட்டீர்கள்? நீங்கள் ஏன் இந்துவாக மாறியிருக்க கூடாது என பல கேள்விகள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்துள்ளார் ஷாஃப்ரூன்.

எங்கள் திருமணத்திற்கு முன்னரே இஸ்லாம் மதத்தை தேர்வு செய்துவிட்டார் யுவன். அவருக்கு இஸ்லாம் பிடித்துவிட்டது.

அவர் இஸ்லாமை பின்பற்ற தொடங்கிய பின்னர் தான் எனக்கு அவரைத் தெரியும். அவருடைய தேடலுக்கான விடைகள் குரானில் கிடைத்திருக்கலாம். அதனால் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கலாம் என பதிலளித்துள்ளார்.

அப்டேட் தாடா என கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த நிறுவனம்

அப்டேட் தாடா என கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanசந் தா னம் 3 வேடங்களில் நடித்து வரும் ‘டிக்கிலோனோ’ பட 3 போஸ்டர்களை அப்பட தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

உடனே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர் அப்டேட் வேண்டும் என ஒருமையில் கேட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர், அயலான்’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது கேஜேஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகருக்கு கேள்விக்கு பதிலளித்துள்ளது அந்த நிறுவனம்.

“அப்டேட் கேக்கறது ஈஸி, கொடுக்கறது கஷ்டம். இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

லாக்டவுன் எப்போது முடியும் எனக் காத்திருக்கிறோம். முடிஞ்சதும் ‘டாக்டர், அயலான்’ அப்டேட் அள்ளும் பாருங்க,” என தெரிவித்துள்ளனர்.

ஆக.. இப்போ எந்த ஒரு அப்டேட் இல்லை என்பதுதான் இந்த அல்வா.

More Articles
Follows