தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்.
திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர்.
61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார்.
ஜுன் 2ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்து வந்தார்.
அன்பழகனின் உடல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விசாரித்தார். மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரித்துச் சென்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரும் அன்பழகனின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 8.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இன்று ஜெ.அன்பழகனின் பிறந்தநாளும் கூட.
அன்பழகனின் நிலை குறித்து அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு சென்றார்.
அன்பழகன் உயிர்பிரியும் நேரம் அவர் மருத்துவமனையில்தான் இருந்தார்.
அங்கு அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.
கொரோனா பாதிப்பால் அன்பழகன் உயிரிழந்துள்ளதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடலை அடக்கம் செய்யவுள்ளனர்.
கண்ணம்மாபேட்டை சுடுக்காட்டில் நல்லடக்கம் நடைபெறவுள்ளது.
இதனிடையில் அன்பழகனின் குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் என்ற படத்தை தயாரித்துள்ளார் அன்பழகன்.
Corona case DMK MLA J Anbazhagan passed away on his birthday