‘குக்கு வித் கோமாளி 4’ இந்தத் தேதியிலிருந்து தொடங்குகிறது . வெளியான புதிய அப்டேட்

‘குக்கு வித் கோமாளி 4’ இந்தத் தேதியிலிருந்து தொடங்குகிறது . வெளியான புதிய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குக்கரியில் நகைச்சுவை கலந்த `குக்கு வித் கோமாளி’ ரியாலிட்டி ஷோ விஜய் டிவி வரலாற்றில் முதலிடத்தில் உள்ளது.

இது மூன்று வெற்றிகரமான சீசன்களை உருவாக்கியுள்ளது .

பொதுவாக எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிற்கும் ரிப்பீட் மதிப்பு இருக்காது.

ஆனால் ‘CWC’ இன் முந்தைய சீசன்களின் கிளிப்புகள் தொடர்ந்து பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

‘CWC’ நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என்பதில் பெரும் ஆர்வம் உள்ளது, மேலும் இது ஜனவரி 28, சனிக்கிழமை இரவு 9.30 மணி முதல் திரையிடப்படும் என வெளியாகியுள்ளது .

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் டீசர் வெளியாகி வைரலானது.

‘Cooku With Comali 4’ begins from this date

பேத்தியின் ஆசையை ஸ்டைலாக நிறைவேற்றிய ராதாரவி

பேத்தியின் ஆசையை ஸ்டைலாக நிறைவேற்றிய ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று முன் தினம், ராதாரவி புதிய மற்றும் வித்தியாசமான சூப்பர் கூல் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

70 வயது முதியவரின் கலர் சூட் அணிந்த போஸ் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.

போட்டோஷூட்டுக்கு சம்மதம் தெரிவித்து பேத்தியின் ஆசையை ராதாரவி நிறைவேற்றியது தெரிய வந்துள்ளது.

திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் இவரது பேத்தி பவித்ரா சதீஷ், அவரை நவீன உடையில் பார்க்க ஆசைப்பட்டார்.

அதற்கு சம்மதம் தெரிவித்து ராதா ரவி இதை செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Radha Ravi fulfills his granddaughter’s wish in style

‘தளபதி 67’ படத்தின் ரகசியத்தை வெளியிட்ட ஃபஹத் பாசில்!

‘தளபதி 67’ படத்தின் ரகசியத்தை வெளியிட்ட ஃபஹத் பாசில்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தளபதி 67’ இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் படங்களில் ஒன்றாகும். தற்போது மிஷ்கின் மற்றும் சாண்டி சம்பந்தப்பட்ட பகுதிகள் கொடைக்கானலில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஒரு முக்கிய காட்சிக்காக குழு விரைவில் காஷ்மீருக்குச் செல்லும் என்றும், இந்தியா முழுவதும் உள்ள பிற இடங்களும் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விக்ரம்’ படத்தில் தோன்றிய ஃபஹத் பாசிலிடம் ‘தளபதி 67’ படத்தின் ஒரு அங்கம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, “இது LCU-வின் கீழ் வரும்.. அதனால் நான் அதில் நடிக்கலாம்..” என்று பதிலளித்தார்.

Fahadh Faasil reveals secrets about ‘Thalapathy 67’

ஹைதராபாத்தில் தளபதி விஜய் .. கூலான புகைப்படம் வைரல்

ஹைதராபாத்தில் தளபதி விஜய் .. கூலான புகைப்படம் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாரிசு படக்குழு சமீபத்தில் ஹைதராபாத்தில் வெற்றி விழாவை நடத்தியது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தளபதி விஜய்யும் கலந்து கொண்டார், மேலும் அவர் தனது தளபதி 67 சிகை அலங்காரத்தில் காணப்பட்டார்.

விருந்தில் பங்கேற்றுவிட்டு, சென்னைக்கு விமானம் மூலம் திரும்பிய விஜய், ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், பத்திரிகையாளர்களால் கிளிக் செய்யப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay spotted in Hyderabad – Uber cool photos go viral

பிக்பாஸ் 6 வின்னர் அசீம்..; ரன்னர் யார்.? பரிசுத் தொகை அப்டேட்ஸ் இதோ

பிக்பாஸ் 6 வின்னர் அசீம்..; ரன்னர் யார்.? பரிசுத் தொகை அப்டேட்ஸ் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிக் பாஸ் 6’ தமிழ் இறுதிப்போட்டி இன்று ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி மொத்தம் 21 போட்டியாளர்களுடன் இந்தப் போட்டி தொடங்கப்பட்டது.

முதலில் 20 போட்டியாளர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே ஜி.பி. முத்து தானாகவே போட்டியில் இருந்து வெளியேறி விட்டார்.

பின்னர், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி வந்தார்.

அடுத்தடுத்த வாரங்களில்.. இந்த போட்டியில் நடிகை சாந்தி, ஷெரினா, நான்காம் வாரத்தில் மகேஸ்வரியும், ஐந்தாம் வாரத்தில் நிவாஷினியும், ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டரும், ஏழாம் வாரத்தில் குயின்ஸியும், எட்டாம் வாரத்தில் ராம் மற்றும் ஆயிஷாவும், ஒன்பதாம் வாரத்தில் தனலட்சுமியும், பத்தாம் வாரத்தில் மணிகண்டனும், அதுக்கு அடுத்த வாரம் ரக்‌ஷித்தாவும், பன்னிரண்டாம் வாரத்தில் ஏடிகேயும் வெளியேறினர்.

பின்னர் கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னர், மிட் நைட் எவிக்‌ஷன் நடத்தப்பட்டது இதில் அதிர்ச்சிகரமாக மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார்.

மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் 11,75,000 பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறினார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் அஸிம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே இருந்தனர்.

இவர்களில், யார் சீசன் 6 நிகழ்ச்சியின் வின்னர், ரன்னர் என்பதை சற்றுமுன் கமல்ஹாசன் அறிவித்தார்.

#BiggBossTamil6 🏆

Azeem – Winner

Vikraman – First ruuner up

Shivin – Second runner-up

கூடுதல் தகவல்..

பிக் பாஸ் தமிழ் 6 வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அசீம் நிகழ்ச்சியின் இறுதியில் தெரிவித்தார்.

Bigg Boss Tamil 6 title winner Mohammed Azeem

மணிரத்னம் – லைகா நிறுவனத்திற்காக வழிவிட்டு ஒதுங்கிய சூப்பர் ஸ்டார்.?!

மணிரத்னம் – லைகா நிறுவனத்திற்காக வழிவிட்டு ஒதுங்கிய சூப்பர் ஸ்டார்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நெல்சன் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தை 2023 கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் ஏப்ரல் 28ஆம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ ரிலீசாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.

ஒருவேளை ஏப்ரல் 14ஆம் தேதி ‘ஜெயிலர்’ படம் வெளியானால் அதற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இடைவெளி இருக்கும்.

வெறும் 2 வார இடைவெளி மட்டுமே இருந்தால் அது படத்தின் வெற்றியை பாதிக்கும்.. லாபத்தை பாதிக்கும் என்பதால் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு படத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பொன்னியின் செல்வன்’ படம் தமிழர்களின் பெருமையை பேசும் பான் இந்தியா படம் என்பதாலும் அந்தப் படத்தில் தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் ரஜினிக்கு நெருக்கமானவர் என்பதாலும் தன் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் & கன்னட சூப்பர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் நடிப்பதால் இந்த முடிவு எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajini film postponed due to Maniratnam’s ponniyin selvan

More Articles
Follows