மானிய விலையில் தீவனங்கள்.. உணவுப் பதன தொழிற்சாலைகள்.; வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு பவன்குமார் பன்சால் கோரிக்கை

மானிய விலையில் தீவனங்கள்.. உணவுப் பதன தொழிற்சாலைகள்.; வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு பவன்குமார் பன்சால் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டசபையில் விரைவில் வேளாண் தொடர்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

அது தொடர்பாக அனைத்து கட்சி வேளாண் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில விவசாய அணி தலைவர் பவன் குமார் பன்சால் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தார்.

அவர் வெளியிட்ட கோரிக்கைகள்:

தமிழகத்தில் சிறப்பான நிர்வாகத்தை தொடங்கி இருக்கும் தமிழக அரசுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தனது வாழ்த்துகளையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதியும், விவசாயத்தை மேம்படுத்தவும் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு சில கோரிக்கைகளை முன் வைக்கிறது.

***கோரிக்கைகள்***

# காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க மண்டல வாரியாக அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்பட வேண்டும்.

# விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க உலர்த்தும் வசதியுடன் கூடிய பிரம்மாண்டக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும்.

# கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 5,000 நெல் மூட்டைகளை சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இனி மழையால் நெல் மூட்டைகள் சேதம் என்ற நிலை ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

# உற்பத்தி செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் வாங்கப்படாமல் காத்திருக்கும் நிலையால், குறைந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் அவலம் ஏற்படுகிறது. அந்த நிலையை மாற்றி ஈரப்பதத்தை காரணம் காட்டி தாமதப்படுத்தும் நிலையைமாற்ற வேண்டும்.

# அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

# விவசாயிகள் தங்களின் விளைப் பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

# விவசாய வேளாண் கல்வியை அதிகரிக்க புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்க வேண்டும். கோவையில் ஏற்கெனவே கோவையில் வேளாண் பல்கலைக்கழகம் இருப்பதை போல விவசாய மண்டலமான தஞ்சாவூரிலும், திருநெல்வேலியிலும், விழுப்புரத்திலும் புதிய விவசாய வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைத்து விவசாயத்தை இளைய சமுதாயத்தினரும் மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.

# விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகள் கிடைப்பதற்கு வசதியாக மாவட்டம் தோறும் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட வேண்டும்.

# கால் நடைகளுக்கான தீவன வினியோகமும், தீவனங்களுக்கான விலையும் சாமானியர் வாங்கும் நிலையில் இல்லை. கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. எனவே இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தி மண்டல வாரியாக நல்ல தரமான கால் நடைத்தீவனங்கள் மானிய விலையில் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

# தமிழகம் முழுதும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

# பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை மேலும் அதிகரித்து இயற்கை சீற்றங்களால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

# தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000 மூலதன மானியம் வழங்கப்படுகிறது. அதோடு, மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படுகிறது. இந்த தொகையை இன்னும் உயர்த்தி வழங்க வேண்டும்.

#இயற்கை சீற்றங்களால் பயிர்களை இழந்த விவசாயிகளின் விவசாய கடன் தொகைகளை எந்த நிபந்த்னையும் இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.

# விவசாய நிலங்களின் குறுக்கே உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் பட்சத்தில், அந்த விவசாயிக்கு பாதிப்பு தொகையாக ஒரு மானியத்தை மாதந்தோறும் வழங்க வேண்டும்.

# நீலகிரி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படா வகையில் காப்பீடு அறிவிக்கப்பட வேண்டும். அதே நேரம் பறிக்கப்படும் தேயிலைக்கும் உரிய நியாயமான விலையும் வழங்கப்பட வேண்டும்.

# கிராமப்புரத்தை ஒட்டி இருக்கும் நெடுஞ்சாலைகளில் தினசரி சந்தை அமைக்க ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு உரிய விலையும் கிடைக்கும், விளைபொருட்கள் வீணாவதும் தவிர்க்கப்படும்.

# விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த 3 தீர்மானங்களையும் ஏற்கமாட்டோம் என கூட்டத்தொடரில் அரசு அறிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

# மழைக்காலத்தை சமாளிக்கவும், கோடை காலத்தில் குடி நீர் தட்டுப்பாட்டை போக்கவும் நீர் நிலைகளை தூர் வாரி ஆக்ரமிப்புகளை அகற்றி நீரை சேமிக்க ஆவன செய்ய வேண்டும்.

# மண்டலங்கள் தாண்டி மாவட்ட, வட்ட தாலுகா வாரியாக விவசாய சந்தைகளை ஏற்படுத்தி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Congress leader Bawan Kumar Bansal requests TN govt

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்தார் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்தார் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபுவின் 28வது படம் இதுவாகும்.

இன்று மகேஷ்பாபுவின் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கில் பிரபாஸின் ’ராதேஷ்யாம்’ மற்றும் சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் பூஜா.

Beast heroine Pooja Hegde’s next film with Super Star

மீண்டும் கமல் படத்தில் விஸ்வரூப நாயகி.; லோகேஷுடன் மீண்டும் கூட்டணி

மீண்டும் கமல் படத்தில் விஸ்வரூப நாயகி.; லோகேஷுடன் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் நடித்து வரும் படம் ‘விக்ரம்’.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்பதை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

இதனிடையில் பிரபல நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ‘Code Red’ என குறிப்பிட்டுள்ளார்.

‘விக்ரம்’ படத்தின் அனைத்து போஸ்டர்களிலும் இதே வார்த்தைகள் குறிப்பிடப்பட்டு இருப்பதால் அவர் ‘விக்ரம்’ படத்தில் நாயகியாக இணைகிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

கமலுடன் ‘விஸ்வரூபம்’ படத்திலும் லோகேஷுடன் ‘மாஸ்டர்’ படத்திலும் ஆண்ட்ரியா பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Andrea joins Kamal Haasan’s Vikram movie ?

சிம்புவுடன் டூயட் பாட கன்னட நடிகையை கொண்டு வரும் கௌதம் மேனன்

சிம்புவுடன் டூயட் பாட கன்னட நடிகையை கொண்டு வரும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று பெயர் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் பழைய தலைப்பை நீக்கிவிட்டு புதிய தலைப்பான ‘வெந்து தணிந்தது காடு’ என தலைப்பிட்டு சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

எவருமே எதிர்பாராத வகையில் 15 கிலோ குறைத்து சிம்பு ஸ்லிம்மாகி பாலா பட நாயகன் போல இருந்தார்.

சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடிக்கவுள்ளார்.

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் ஒன்றை தழுவி உருவாகிறதாம்.

இதன் படப்படிப்பு தற்போது திருச்செந்தூரில் தொடங்கி விட்டது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை, புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம்.

இந்நிலையில் இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு நாயகியாக கயடு லோஹர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஹிந்தி தெலுங்கு & கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kayadu Lohar is the heroine for STR’s next film ?

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் நிறுத்தம்? இயக்குனருக்கே ரகசியம் சொன்ன ஊடகம்.; செல்வராகவன் கொடுத்த பதிலடி

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் நிறுத்தம்? இயக்குனருக்கே ரகசியம் சொன்ன ஊடகம்.; செல்வராகவன் கொடுத்த பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2010ல் ரிலீசான திரைப்படம் ’ஆயிரத்தில் ஒருவன்’.

இந்த திரைப்படத்தின் மேக்கிங் பாராட்டப்பட்டாலும் படம் வசூலில் மோசம்தான்.

ஆனாலும் ரசிகர்கள் இப்படத்தின் 2ஆம் பாகம் குறித்து அடிக்கடி கேட்பதுண்டு.

இதனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார் செல்வராகவன். ஆனால் இதில் கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்கிறார் என அறிவித்தார்.

2024 ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் ரிலீஸ் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் முன்னணி நாளிதழ் ஒன்றில் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த செய்திக்கு இயக்குனர் செல்வராகவன் தன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்…

“எப்போது அந்த மர்மமான ஆரம்பகட்ட பணிகள் நடந்தது ? அந்த மர்மமான தயாரிப்பாளர் யார் என கூற முடியுமா? உங்களது தரப்பிலிருந்து இந்த படம் குறித்து சரியாக விசாரியுங்கள் என பதிலடியாக தெரிவித்துள்ளார்.

Selva Raghavan’s reply to Aayirathil Oruvan 2 drop news

கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் மருத்துவ செலவை ஏற்று பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா

கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் மருத்துவ செலவை ஏற்று பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது பிறந்த நாளை, எப்பொழுதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதே வழக்கம்.

இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல. சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்தில் அவர் பங்களிப்பில் அவரது பிறந்த நாள் கோலகலமாக கொண்டாடப்பட்டது.

அதே நேரத்தில் மும்பையில் தன் குடும்பத்துடன் இந்த சந்தோஷ தருணத்தை பகிர்ந்துக் கொண்டாடிய அவர், தான் மும்பையில் தத்தெடுத்த பெண்களுடன் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார்.

தான் பொறுப்பெடுத்துகொண்ட கேன்சரால் பாதிக்கப்பட்ட 10 பெண் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளை முழுவதுமாக இவரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவர்கள் அனைவரையும் முழுமையாக குணமடைய செய்து சாதாரண வாழ்க்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் தற்போது உள்ளார்.

மேலும் சென்னை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு தான் வரும் பொழுதெல்லாம் உணவு வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த முறை, பிரபஞ்சம் அவரது பிறந்த நாளை மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றியுள்ளது.

ஒரு புறம் தனது பிறந்த நாளை ஆதரவற்றவர்களுடன், அர்த்தமுள்ளதாக அவர் கொண்டாட, திரையுலகை சேர்ந்த நண்பர்கள் அவரது பிறந்த நாளை பிரமாண்டமானதாக மாற்றியுள்ளனர்.

அவர் நடித்து வரும் My Name is Shruthi, மற்றும் பரபர திரில்லரான One Not Five Minutes படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவர் பிறந்த நாளை ஒட்டி கோலகலகமாக வெளியாகியுள்ளது.

மேலும் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக, நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50 வது படமான ” மஹா ” படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் அவரை பெருமைப்படுத்தும் வகையில் ” A Glimpse of Princess work ” என்ற தலைப்பில் இன்று மாலை 6 மணிக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளார்.

அனைத்து புறங்களில் இருந்து வாழ்த்து மழையிலும், புகழ் மழையிலும் நனைந்து வருகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளை ஒட்டி, பொது மக்களிடம் சில வேண்டுகோளை வைத்துள்ளார்.

மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் , தங்களது கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், உயிரை பறிக்க கூடிய கொரோனா நோய்க்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை, அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும், என அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Hansika provides money for cancer affected student

More Articles
Follows