புதுச்சேரி பள்ளிகள் திறப்பு.: இரண்டு மாணவிகளுக்கு கொரோனா தொற்று.. வகுப்பறைகள் மூடல்

pondicherry school studentsபுதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கடந்த 8-ம் தேதி 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதன் பின்னர் 14-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்தன.

மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் இருந்தால் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என புதுவை கல்வித்துறை அறிவித்திருந்த்து.

இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற காலாப்பட்டு அரசு பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி மற்றும் வாதானூர் அரசு பள்ளியில் 10-ம்வகுப்பு படிக்கும் மாணவிக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது.

இதனையடுத்து மாணவிகள் இருவரும் தனிமைப்படுத்தபட்டனர்.

மேலும் அவர்கள் படித்த வகுப்புகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

அந்த வகுப்பில் இருந்த சக மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

புதுச்சேரியில் பள்ளிக்கு சென்று வந்த 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் பள்ளி வகுப்பறையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத, கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Class 12 boy tests positive for covid 19 in pondycherry

Overall Rating : Not available

Latest Post