நாளை சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருமா.? நம்பிக்கையில் திரையுலகினர்!

Cine Industry expect will Strike come to an end 17th April 2018கியூப் டிஜிட்டல் கட்டண உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திரைத்துறையினர் கடந்த 45 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இதனால் புதுப்படங்களோ, அது தொடர்பான சினிமா நிகழ்வுகளோ நடைபெறவில்லை.

இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள், கியூப் நிறுவன நிர்வாகிகளுடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகள்கள் அனைத்தும தோல்வியில் முடிந்தது.

எனவே ஏரோக்ஸ் உள்ளிட்ட புதிய டிஜிட்டல் நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நாளை ஏப்ரல் 17 முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர்கள் ரோகினி பன்னீர் செல்வம், அபிராமி ராமநாதன், மற்றும் கியூப் நிறுவன அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள் என கூறப்படுகிறது.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய விஷயங்கள் பற்றி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று கூடி விவாதித்தனர்.

அப்போது கியூப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்டுவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தணிக்கை சான்றிதழ் பெற்ற தேதியின் அடிப்படையில்தான் புதுப்படங்களை ரிலீஸ் செய்வது எனவும் அப்போது முடிவு செய்யப்பட்டது.

Cine Industry expect will Strike come to an end 17th April 2018

Overall Rating : Not available

Latest Post