ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் ‘தூங்கா கண்கள்’

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் ‘தூங்கா கண்கள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Christmas release Thoonga Kangal movie news updatesவினு இயக்கத்தில் மைக்கேல், நிக்கி, நேகா, நிகிதா, ஆதி நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “தூங்கா கண்கள்”.

புதையலைத் தேடி காட்டுக்குள் பயணிக்கும் சிலர், அங்கு இருக்கும் அமானுஷ்யம் கொண்ட தீய சக்தியிடம் மாட்டிக் கொண்டு பலியாகின்றனர்.

இறுதியாக அந்த அமானுஷ்ய சக்தியை அழித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகிறது.

சீட்டின் நுனியில் ரசிகர்களை அமர வைக்கும் விதமாக காட்சிகளை மிக அருமையாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இமயவன்

இசையில் மிரட்டியிருக்கிறார் இளங்கோ கலைவானன்.

அனைத்து ரசிகர்களையும் எளிதாக கவரும் வகையில் தூங்கா கண்களை இயக்கியிருக்கிறார் இயக்குனர் வினு.

Christmas release Thoonga Kangal movie news updates

கருப்பினத்தவர்களின் கலை அரசியல்… ‘மார்கழியில் மக்களிசை’யை தொடங்கிய ரஞ்சித்

கருப்பினத்தவர்களின் கலை அரசியல்… ‘மார்கழியில் மக்களிசை’யை தொடங்கிய ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ranjith launches Margazhiyil Makkal Isai மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி என்று இயக்குனர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ வானம்” போன்ற பண்பாட்டு மீட்பு இசை நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் “நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் மாபெரும் இசைத்திருவிழா நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியினை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பா. இரஞ்சித் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர்.

தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் நாட்டுபுறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மதிப்புறு முனைவர் மதிச்சியம் பாலா, சுகந்தி, வி.எம். மஹாலிங்கம் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடினர். சேலம் ஆதிமேலம் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியும், வேலு ஆசான் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து இயக்குனர் பா. இரஞ்சித் பேசியதாவது, ”மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. நான் கருப்பினத்தவர்களின் கலை அரசியலை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறேன்.

அது போன்று இங்கே இருக்கின்ற மக்களை கலை, பண்பாட்டு ரீதியாக அரசியல் படுத்த வேண்டும் எனும் நோக்கத்தோடு தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏன் என்றால், இந்த நிகழ்ச்சி மக்களிடையே ஓர் எதிர்ப்புரட்சியை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் தற்போது திரையிசையில், பறையிசை என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. இந்த இசையை நாம்
மேடை ஏற்றி, அதன் மூலம் மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது.

அதன் பிரதிபலிப்பு தான் இந்த நிகழ்ச்சி. மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’” என்று கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது, ”இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

சமீபத்தில் நாட்டுபுறம், கானா, பறையிசை குறித்து ஆராய்ந்த போது, நம் இசை மிகவும் பன்மையானதாக இருந்தது. இப்படிப்பட்ட

இசைக்கென்று ஒரு மேடை அமைத்துக் கொடுத்த இயக்குனர் பா. இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இரஞ்சித் தான் முதன் முதலில் எனது கானா கண்களை திறந்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது கானாவுக்கு என்று தனியாக ஒரு ஆல்பம் தயார் செய்துகொண்டிருக்கிறேன், விரைவில் அது வெளிவரவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைக்கலைஞர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று கூறினார்.

Director Ranjith launches Margazhiyil Makkal Isai

‘கோடங்கி’ ஆபிரகாம் இயக்கத்தில் ‘ஒற்றன்’ துரை & ‘திடீர் தளபதி’ சதீஷ்முத்து கூட்டணி

‘கோடங்கி’ ஆபிரகாம் இயக்கத்தில் ‘ஒற்றன்’ துரை & ‘திடீர் தளபதி’ சதீஷ்முத்து கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ottran Durai and Sathish Muthu in Kodanki Direction பிரபல பத்திரிகையாளர் கோடங்கி என்ற ஆபிரகாம் ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். அதன் பர்ஸ்ட் லுக்கை புத்தாண்டு தினத்தில் வெளியிடவுள்ளனர்.

‘ருச்சி சினிமாஸ்’ & ‘பாஸ்ட் மெஸெஞ்சர்’ இணைந்து வழங்கும் பெயரிடப்படாத “Short Film No. 1” குறும்பட பர்ஸ்ட் லுக், டைட்டில் புத்தாண்டு அன்று வெளியாகிறது.

சமூகம் என்ற சுழலில் சிக்கி அவலமான தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண் அந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்பதே குறும்பட கதை.

நடிப்பு கலைஞர்கள்:

கதை நாயகி – கயல்விழி, ஜோயல் பென்னட்,

‘திடீர் தளபதி’ சதீஷ்முத்து,

ஹிதயத்துல்லா,

‘ஒற்றன்’ துரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம்: ருச்சி சினிமாஸ் & பாஸ்ட் மெஸெஞ்சர்

தொழில் நுட்ப கலைஞர்கள்:

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: அனிஷ் ஆஞ்சோ

இசை: விசு

விளம்பர வடிவமைப்பு: SMB கிரியேஷன் மணிபாரதி செல்வராஜ்

செய்தி தொடர்பு: யுவராஜ்

தயாரிப்பாளர்: P. சுமித்ரா

எழுத்து – இயக்கம்: கோடங்கி ஆபிரகாம்

Ottran Durai and Sathish Muthu in Kodanki Direction

அது வேற வாய்.. இது நாற வாய்.. ச்..ச்..சீமானை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்

அது வேற வாய்.. இது நாற வாய்.. ச்..ச்..சீமானை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanதமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தாக்கினால் தமிழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்களை தாக்குவோம் என்று 2010ல் பேசினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

எனவே அவர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது.

அந்த வழக்கு விசாரணைக்காக நேற்று பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.

அவர்… “ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது.

நடிகன் என்ற ஒரே தகுதியை வைத்து நாடாள நினைக்க கூடாது.

நல்லக்கண்ணு அய்யா ஒருவருக்குத் தான் அந்த தகுதி் உள்ளது. ஆனால் அவரை பற்றி யாரும் பேசுவதில்லை.

நானும் நடிகன் தான். ஆனால் நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. மக்களை சந்தித்தேன்..

எம்.ஜி.ஆர். பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார். அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி கொடுத்தார்.?”

இவ்வாறு சீமான் பேசினார்.

சீமானின் இந்த பேச்சை கண்டித்து தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் ‘அரசியலின் நடிகன் சீமானே எங்கள் தளபதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. அன்று சொன்னது வேற வாய்.. இப்போ சீமானின் வாய் நான் வாய்” என கண்டிக்கும் வாசகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

Vijay fans stick posters against Seeman

‘அண்ணாத்த’ சூட்டிங்கில் நால்வருக்கு கொரோனா..; காதலி நயன்தாராவை பத்திரமாக அழைத்து வந்த விக்கி

‘அண்ணாத்த’ சூட்டிங்கில் நால்வருக்கு கொரோனா..; காதலி நயன்தாராவை பத்திரமாக அழைத்து வந்த விக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara Vignesh Shivanரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘அண்ணாத்த’.

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் இப்பட சூட்டிங் மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது டிசம்பர் 14-ம் தேதி முதல் சூட்டிங் மீண்டும் தொடங்கியது.

இதில் பங்கேற்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார் ரஜினி. நயன்தாராவும் ஹைதராபாத் சென்றார்.

கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் படத்தில் பணியாற்றிய 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

ஆனாலும் அவர் ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

விரைவில் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நேற்றே அவசர அவசரமாக ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்துள்ளார்.

காதலர் விக்னேஷ் சிவன் தன் காதலி நயன்தாராவை பத்திரமாக அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் ஐதராபாத் விமான நிலையம் வந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Actress Nayanthara and Vignesh Shivan back to Chennai after Annaatthe shoot got stalled

சிம்பு & கௌதம் இணையும் ‘பத்து தல’..; பக்காவான டைட்டில் வைத்த சூர்யா பட டைரக்டர்

சிம்பு & கௌதம் இணையும் ‘பத்து தல’..; பக்காவான டைட்டில் வைத்த சூர்யா பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ படம் ரிலீஸூக்கு ரெடியாகிவிட்டது.

இந்த படம்பொங்கல் ரேஸில் இணையவுள்ளது.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படங்களை தொடர்ந்து கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் நடிக்கிறார்.

சிம்புவுடன் கெளதம் கார்த்திக் இணைந்துள்ளார்.

சிம்புவுக்கு நெகட்டிவ் கேரக்டர், கெளதம் கார்த்திக் போஸீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் ‘பத்து தல’ என இன்று அறிவித்துள்ளனர்.

ஒரு வருடத்துக்கு முன்பு, பட படப்பிடிப்பு தொடங்கி பின்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தற்பொழுது மீண்டும் துவங்குகிறது.

தற்போது பட இயக்குநரை மாற்றியிருக்கிறது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

STR and Gautham Karthik film is titled Pathu Thala

More Articles
Follows