24 சர்வதேச விருதுகளை அள்ளி தமிழர்களை மகிழ்விக்க துள்ளி வரும் ‘சின்னஞ்சிறு கிளியே’

24 சர்வதேச விருதுகளை அள்ளி தமிழர்களை மகிழ்விக்க துள்ளி வரும் ‘சின்னஞ்சிறு கிளியே’

கமர்ஷியல் மசாலா திரைப்படங்ளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் எண்ணற்ற திரைவிழாக்களில் கலந்து கொண்டு 24 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது “சின்னஞ்சிறு கிளியே”தமிழ் திரைப்படம்,

அம்மாவின் பெருமையை உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான படங்கள் பேசியுள்ளன.

ஆனால் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பிணைப்பையும் அன்பையும் மனதை உருக்கும் வகையில் திரையில் வடித்திருக்கிறது இத்திரைப்படம்.

தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்டு, ஆங்கில மருத்துவத்தின் விபரீதத்தையும் இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தையும் விளக்கும் விதமாக, மிகவும் நேர்த்தியாகவும் யதார்த்தமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நம் இயற்கை மருத்துவத்தின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் விதமாகவும், மருத்துவதுறையில் புகுந்திருக்கும் வியாபார ரீதியிலான கார்பரேட் வணிகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.

உலக திரை விழாக்களில் படத்தை பார்த்த விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்கள்

இத்திரைப்படத்தை செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில்நாதன் தயாரித்து, நடித்துள்ளார். பல்வேறு குறும்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை வென்றுள்ள சபரிநாதன் முத்துப்பாண்டியன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கரகாட்டக்காரன் புகழ், மறைந்த நடிகர் சண்முகசுந்தரம் அவர்களின் மகன் பாலாஜி சுந்தரம் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பாண்டியன், இசை மஸ்தான் காதர், பாடல் வரிகள் பத்மநாபன் மற்றும் கீதா படத்தொகுப்பு குமரேஷ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்

உலக ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்த இப்படம் தமிழ் ரசிகர்களுக்காக வரும் செப்டம்பர் 24 அன்று திரையரங்கு வெளியீடாக வெளிவர இருக்கிறது

ChinnanjiruKiliye release date announced

ஹாலிவுட்டை எட்டிப் பிடித்த சென்னை பையன் எபின் ஆன்டனி.

ஹாலிவுட்டை எட்டிப் பிடித்த சென்னை பையன் எபின் ஆன்டனி.

சென்னை இளைஞன் எபின் ஆன்டனி ஆங்கில படத்தில் கதாநாயகனாக அறிமுகாகியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் ஆமேசன் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியான டேனில் ரான்சம் கதை எழுதி இயக்கிய ” ஸ்போக்கன் “(Spoken) என்ற ஹாரர் படத்தில் தான் இவர் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

இதில் நாயகியயை துரத்தி காதலிக்கும் இசை கலைஞனாக நடித்துள்ளார்.

சென்னையில் வளர்ந்த இவருக்கு சினிமா நடிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தினால் கல்லூரியில் படிக்கும் போதே நூறுக்கும் மேற்பட்ட தமிழ் , ஆங்கில படங்களுக்கும் கார்ட்டூன் படங்களுக்கும் குரல் கொடுத்து வந்தார் .

அதுவே இவருக்கு சினிமாவில் பிரவேசிக்க முதல் படியாக அமைத்தது. அமெரிக்காவில் மேல் படிப்புக்கு சென்றவர், தன் நடிப்பு திறனை அதிகரிக்க , லாஸ் ஏஞ்சல்சிலுள்ள நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் நடிப்பு கற்று கொண்டார்.

தற்சமயம் லியானார்டோ டிகாப்ரியோ போன்ற ஆஸ்கார், எமி விருது பெற்ற பிரபலங்களின் ஆக்டிங் கோச் லாரி மோஸ், டிம் பிலிப்ஸ் ஆகியோரிடமும் நடிப்பு கற்று வருகிறார்.

எபின் நடித்த இரண்டாவது ஆங்கில படம் , டாம் லெவினின் ‘ பார்ட்டி ‘ என்ற நாவலை தழுவி கெவின் ஸ்டீவன்சன் இயக்கிய ‘ பட்டர் ஃப்ளைஸ் ‘ இந்த வருடம் வெளிவர உள்ளது.

ஹாலிவுட் படங்களின் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வரும் வேளையில் தனக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பது தான் ஆசையும் லட்சியமும் என்கிறார் எபின் ஆன்டனி.

Chennai’s Ebin Antony makes his Hollywood debut

அக்டோபர் 3 முதல் ‘பிக்பாஸ் 5’.; காதல் மன்னனின் வாரிசு பங்கேற்பு..?

அக்டோபர் 3 முதல் ‘பிக்பாஸ் 5’.; காதல் மன்னனின் வாரிசு பங்கேற்பு..?

டிவி சேனல்களில் விதவிதமாக எத்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி மவுசு உள்ளது.

இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காவிட்டாலும் கூட அது பற்றி சில பேசிக் கொண்டே இருப்பார்கள். அப்படி அனைவரின் மனம் கவர்ந்து விட்டார் கமல்.

4 சீசன்களை வெற்றிக்கரமாக நடத்தி முடித்த கமல் தற்போது ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, வருகிற (காந்தி ஜெயந்தி தினத்திற்கு அடுத்த நாள்) அக்டோபர் 3 ஆம் தேதி ஒளிப்பரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் யார்? பங்கேற்பார்கள்? என சமூக வலைத்தளங்களில் விவாத மேடையே நடந்து வருகிறது.

இன்னும் உறுதியான தகவல்கள் வராத நிலையில் ஷகிலாவின் மகள் மிளா, சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, சுனிதா உள்ளிட்டவர்கள் பங்கேற்கிறார்கள் என தெரிகிறது.

இவர்களுடன் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் என்பவரும் இதில் கலந்துக் கொள்கிறார் என கூறப்படுகிறது.

இவர் சென்னை 28, பரமபத விளையாட்டு உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

முக்கியமாக கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு படமான ராமானுஜர் என்ற படத்தில் அறிமுகமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gemini Ganesan’s grandson Abinay to enter Bigg Boss house

சசிகுமார் – நிக்கிகல்ராணி இணைந்த ‘ராஜவம்சம்’ ரிலீஸ் அப்டேட்

சசிகுமார் – நிக்கிகல்ராணி இணைந்த ‘ராஜவம்சம்’ ரிலீஸ் அப்டேட்

சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு இயக்கத்தில் உருவாகி பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான படம் ‘ராஜவம்சம்’.

இதில் சசிகுமார், நிக்கி கல்ராணி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மிகப்பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் சுமார் 49 நடிகர், நடிகைகளுடன் இந்த படம் உருவாகியுள்ளதாம்.

இந்தப் படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரித்துள்ளார்.

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் வரும் அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

Sasi Kumar – Nikki Galrani in Raja Vamsam release date announced

சாதனையாளருடன் சந்திப்பு : உலகையே பைக்கில் சுற்றி வர அஜித் போடும் ப்ளான்

சாதனையாளருடன் சந்திப்பு : உலகையே பைக்கில் சுற்றி வர அஜித் போடும் ப்ளான்

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிலிருந்து தனது பைக் பயணத்தைத் தொடங்கியவர் மரால்.

இவர் ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பியக் கண்டங்களுக்கு அவர் தன் பைக்கிலேயே பயணப்பட்டார்.

தொடர்ந்து 1 1/2 ஆண்டுகள் பயணம் செய்து இப்பயணத்தின் மூலம் புதிய சாதனையையும் மரால் படைத்தார்.

தற்போது ஈரானியப் பெண்களுக்கு பைக் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும் மரால் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பைக்கில் தனியாகப் பயணம் மேற்கொண்ட இரானைச் சேர்ந்த மரால் யஸார்லூவை நடிகர் அஜித் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா..

“மரால் யஸார்லூவுடன் பைக்கில் உலகம் முழுவதும் மரால் தனியாகப் பயணப்பட்டிருக்கிறார்.

7 கண்டங்கள், 54 நாடுகளுக்கு அவர் சென்று வந்திருக்கிறார். மராலின் அனுபவங்களைக் கேட்டறிந்து, எதிர்காலத்தில் உலகம் முழுவதும் தான் மேற்கொள்ளவிருக்கும் பைக் பயணத்துக்கான யோசனைகளையும் பெற அஜித் குமார் டெல்லியில் மராலைச் சந்தித்து உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

Ajith plans a motor cycle world tour

தன் படத்திலிருந்து விலகிய சூர்யாவை எதிர்க்க அருண் விஜய்யை மோதவிடும் ஹரி.?

தன் படத்திலிருந்து விலகிய சூர்யாவை எதிர்க்க அருண் விஜய்யை மோதவிடும் ஹரி.?

நடிகர் சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’ சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘எஸ்-3’ (சி-3) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹரி.

‘சிங்கம் 3’ படத்தின் வெற்றியை பாராட்டி ஹரிக்கு ஒரு காஸ்ட்லி காரையும் பரிசளித்தார் சூர்யா.

இதனையடுத்து இவர்கள் கூட்டணி ‘அருவா’ படம் மூலம் 6வது முறையாக இணைகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சூர்யா கதையில் சொன்ன மாற்றத்தாலும் அதனை ஹரி ஏற்க மறுத்து விட்டதாலும் ‘அருவா’ திடீரென டிராப் ஆனது.

அந்த சமயத்தில் தான் சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் ‘சூர்ரைப்போற்று’ படங்கள் ஓடிடியில் ரிலீஸ் என சூர்யா அறிவித்தார்.

“தியேட்டர்களில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்” என மறைமுக கண்டன அறிக்கை வெளியிட்டார் ஹரி.

இதனால் சூர்யா & ஹரி மோதல் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார் சூர்யா.

இதன் பின்னர் ஹரி தனது மச்சான் அருண் விஜய் நடிக்க ‘யானை’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வரும் 2021 கிறிஸ்மஸ் நாளில் ரீலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு.

எனவே தான் இயக்கிய ‘யானை’ படத்தை சூர்யா படத்துடன் மோத திட்டமிட்டு வருகிறாராம் ஹரி.

‘யானை’ படத்தின் கதை சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்..

Arun Vijay and Suriya films to clash on christmas day ?

More Articles
Follows