தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானோ வைரஸ் முதலில் சீனாவில் தான் ஆரம்பமானது.
அதன்பின்னர் இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி அங்கு பல பேரின் உயிரை வாங்கி தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.
தற்போது இத்தாலி நாட்டை விட அமெரிக்காவில் உயிர் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
ஆனால் சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இதுநாள் வரை கடைகள், தியேட்டர்கள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
அரசு அலுவலங்கள் மூடப்பட்டு இருந்தன. பேருந்து, ரயில், விமானம் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருந்தன.
தற்போது தியேட்டர்களை திறக்க ஆரம்பித்துள்ளது சீனா.
இதுவரை 700 தியேட்டர்களை திறந்திருக்கிறார்களாம்.
சீனா நாட்டில் மட்டும் 70 ஆயிரம் தியேட்டர்கள் உள்ளது என கூறப்படுகிறது. தற்போது 1 சதவிகிதம் தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை தியேட்டர்கள் மூடப்பட்டதால் சுமார் 2 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
China opens few cinema theatres after lock down