தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சௌந்தர ராஜாவிற்கும் தமன்னாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, விஷால், அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.
இந்நிலையில், விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றிருக்கிறார் சௌந்தரராஜா. இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில்,
‘தமிழ் சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சக மனிதரிடத்திலும் சினிமா குடும்பத்தினரிடமும் கேப்டன் அவர்கள் காட்டும் அன்பில் அவர் மிக உயர்ந்த மனிதர்.
அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும் என் மனைவியும் வாழ்த்துப்பெற்றதை பெருமிதமாக உணர்கிறேன்.
என்னையும் என் மனைவியையும் அன்போடு வாழ்த்திய விஜயகாந்த் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.
Captain Vijayakanth wishes to new married couple Soundararaja and Tamanna