தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ் வெங்கட் ‘சார்’ வர்றாங்க…
குணச்சித்திர நடிகராக ஜொலித்த போஸ் வெங்கட் 2020ல் கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார்.
தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் ‘சார்’.
இதில் பருத்திவீரன் சரவணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாயா தேவி கண்ணன், சிராஜ், ரமா, ஜெயபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். ஒரு சில காரணத்தினால் தற்பொழுது “சார்” என மாற்றப்பட்டு இருக்கிறது.
நடிகர் விமல் நடித்துள்ள ‘சார்’ படம் வருகின்ற 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.. ஆயுத பூஜையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படம் திரைக்கு வருகிறது.. இந்த படம் வெளியாகி ஒரு வாரத்தில் ஆயுத பூஜையை பண்டிகை முடித்து விட்டு விமலின் சார் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் வெளியிட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.. இந்த நிறுவனம் விஜய் நடித்த கோட் படத்தின் வெளியிட்டு உரிமையும் பெற்று இருந்தது இங்கே கவனிக்கத்தக்கது..
Bose Venkat combo Sir movie release