தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதில் நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக நடிகர் சூர்யா பேசி வருவதாகவும் மோடி அரசின் மக்கள் நல திட்டம் சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து எதிர்த்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
படைப்பாளிகளின் உரிமையை பாதுகாக்கும் ‘ ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு 2021 ‘க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சூர்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக இளைஞரணி மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
BJP Youth wing condemns Actor Suriya