தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பீகார் மாநிலத்தில் உள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
நவம்பர் 10-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.
அதில், முதல் வாக்குறுதியாக கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்றால் , பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
As soon as #COVID19 vaccine will be available for production at a mass scale, every person in Bihar will get free vaccination. This is the first promise mentioned in our poll manifesto: Union Minister Nirmala Sitharaman at the launch of BJP Manifesto for #BiharPolls pic.twitter.com/x4VjVmkA3Q
BJP promises free Covid 19 vaccination in manifesto