ஆகஸ்டில் கேரளா & தமிழ்நாட்டில் ‘விருந்து’ வைக்கும் அர்ஜுன் – நிகில் கல்ராணி

ஆகஸ்டில் கேரளா & தமிழ்நாட்டில் ‘விருந்து’ வைக்கும் அர்ஜுன் – நிகில் கல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்டில் கேரளா & தமிழ்நாட்டில் ‘விருந்து’ வைக்கும் அர்ஜுன் – நிகில் கல்ராணி

ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள ‘விருந்து’ என்ற படம் ஆகஸ்ட் 29ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாளத்தில் இப்படத்திற்கு விருன்னு என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை தாமர கண்ணன் இயக்க நெய்யார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தாமர கண்ணன் வரல், உடும்பு , விதி: தி வெர்டிக்ட், பட்டாபிராமன் மற்றும் பல மலையாளப் படங்களை இயக்கியுள்ளார்.

அர்ஜூன் உடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர் மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இந்த படத்தின் எழுத்தாளர் தினேஷ் பள்ளத், இசையமைப்பு பணிகளை ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் ஆகியோர் மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பு பணிகளை வி.டி. ஸ்ரீஜித் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை சஹாஸ் பாலா, பாடல்களை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.

கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் தாமர கண்ணன்..

Bilingual movie Virundhu set to release 29th August

‘வீர சந்திரஹாசா’..: மீண்டும் இயக்குநராகும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

‘வீர சந்திரஹாசா’..: மீண்டும் இயக்குநராகும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வீர சந்திரஹாசா’..: மீண்டும் இயக்குநராகும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

‘கே ஜி எஃப்’ , ‘ சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்.

‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும்.

அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும்.

இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் ‘வீர சந்திரஹாசா’ – பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடைய செய்யும் என்கிறார்.

‘வீர சந்திரஹாசா’வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பாகும். பன்னிரண்டு ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளி திரைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவினை கொண்டிருந்தார்.

யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி என்பது துணிச்சலானது மற்றும் பாராட்டுக்குரியது.

புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் அக்கலையின் புதுமை மற்றும் ஆற்றலுக்காக.. இந்த அற்புதமான அணுகுமுறையுடன் தொடங்கப்பட இருக்கும் ‘வீர சந்திரஹாசா’ கொண்டாடப்பட வேண்டும்.

Music director Ravi Bashoor directs Veera Chandrahaasa

———

KCL – ஃபுட்பால் ரசிகர்களை கிரிக்கெட் பக்கம் திருப்பும் கீர்த்தி சுரேஷ்

KCL – ஃபுட்பால் ரசிகர்களை கிரிக்கெட் பக்கம் திருப்பும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KCL – ஃபுட்பால் ரசிகர்களை கிரிக்கெட் பக்கம் திருப்பும் நடிகை கீர்த்தி சுரேஷ்

*KCL கேரள கிரிக்கெட் லீக் போட்டி, திருவனந்தபுரம் அணி, இணை உரிமையாளரான கீர்த்தி சுரேஷ்

இந்தியாவில் பல மாநிலங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம்.. ஆனால் கேரளாவை பொறுத்தவரை அங்கு கால்பந்து (புட்பால்) விளையாட்டுக்குத்தான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தை தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கென தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது.

ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாக செயல்பட்டு வருவது போல், கேரள திருவனந்தபுரம் அணிக்கு உரிமையாளராக மாறி அசத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கேரளாவில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையிலும், திறமையான இளைஞர்களை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலும் இந்த KCL
போட்டிகள் நடக்கவுள்ளது. 6 அணிகள் கலந்துகொள்ளும் 33 போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

KCL கேரளா கிரிக்கெட் போட்டிகளுக்கான அம்பாஸிடராக, முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் செயல்படுகிறார்.

கேரளாவின் முக்கிய நகரங்களிலிருந்து மொத்தமாக 6 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளன. மொத்தமாக 33 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மொத்த போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. ஐபில் போலவே பல நட்சத்திரங்களும், பிஸினஸ் ஐகான்களும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு ஊக்குவிக்கவுள்ளனர்.

விரைவில் போட்டி அணிகள், போட்டி அட்டவணைகள், வீரர்கள் அறிமுகம், மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1ல் நேரலையில் ஒளிபரப்பாகவுள்ளது, முதல் போட்டி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மட்டும் ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

KCL Keerthy Suresh became owner of Trivandrum team

சொந்த ஊரில் ‘Return Of The Dragon’ நடத்தும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

சொந்த ஊரில் ‘Return Of The Dragon’ நடத்தும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சொந்த ஊரில் ‘Return Of The Dragon’ நடத்தும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

முதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert..

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது.

Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் மிகபெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தமிழக Independent Music துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் Icon ஆக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக் கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “Return Of The Dragon” எனும் பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் Music Concert யை நடத்தவுள்ளார்.

Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து இந்த Music Concert யை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன.

இந்த Music Concert ல் கோயம்புத்தூர் ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த Music Concert, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது.

இந்த Music Concert ல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது,

மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற Concert ல் ஏற்பட்ட சிக்கல்கள், எதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, ஆன்லைனில் Paytm ஆப் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

Return Of The Dragon Music Concert by Hiphop Aadhi

————-

மனிதனின் கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? சொல்ல வரும் யோகிபாபு & லக்‌ஷ்மி

மனிதனின் கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? சொல்ல வரும் யோகிபாபு & லக்‌ஷ்மி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனிதனின் கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? சொல்ல வரும் யோகிபாபு & லக்‌ஷ்மி

புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ் மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை.

யோகிபாபு, லக்‌ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி
நடித்திருக்கும் படம் செப்டம்பரில் வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார்.

மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது.
அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள்.

மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான்.

இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி , இனம் என்று இதற்கு பின்னால் நின்றுகொண்டு சக மனிதர்கள் மீது அன்பை மறந்து எதிர்கால சந்ததியினரின் வாழ்வை குறித்து கவலைப்படாமல் மனித பேராசை இயற்கையை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த கதை மனிதனின் சுய நல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப்பற்றிய ஒரு படைப்பாக வந்திருக்கிறது.

யோகிபாபு லக்‌ஷ்மி மேனன் காளிவெங்கட் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இமான் இசையமைத்திருக்கிறார்.

செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படத்தின் பாடல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகிறது.

Yogibabu and Lakshmi menon starring Malai release

பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட வெளியீட்டு உரிமையை வாங்கிய நிறுவனம்

பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட வெளியீட்டு உரிமையை வாங்கிய நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இமான் & பிரபுதேவா இணைந்த ‘பேட்ட ராப்’ பட வெளியீட்டு உரிமையை வாங்கிய நிறுவனம்

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சபையர் ஸ்டுடியோஸ்

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பினை பெற்றிருக்கிறது.

தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Imman and Prabudeva combo Petta rap updates

———-

More Articles
Follows