தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பைக் ரேசர் டிடிஎஃப் வாசன். இவர் அதிவேகமாக பைக் ஓட்டி அந்த வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றி பிரபலமானார்.
இதனையடுத்து இவரை லட்சக்கணக்கான சிறுவர்கள் பின் தொடர்ந்தனர் . இவர் பலமுறை விபத்து ஏற்படுத்தி சர்ச்சைக்கு உள்ளானார். ஆனாலும் காவல்துறை நடவடிக்கை மற்றும் கட்டுப்பாட்டுகளை மீறி அடிக்கடி அதிவேகமாக பைக் ஓட்டி விபத்துக்குள்ளானார்.
சமீபத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டி தனக்குத்தானே விபத்து ஏற்படுத்தினார்.
இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாகி கோர்ட்டில் வழக்கானது.
அவரது பைக்கை பறிமுதல் செய்ய வேண்டும்.. லைசென்ஸ் வழங்கக் கூடாது.. இவரால் பல சிறுவர்களும் அதிவேகமாக பைக் ஓட்ட ஆசைப்படுகின்றனர்.. அவர்களும் சாகசங்கள் செய்ய ஆசைப்படுகின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார் டி டி எப் வாசன். அதன் பின்னர் மூன்று முறை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அக்டோபர் 30ஆம் தேதி 4வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்…
டிடிஎஃப் வாசன் யூடியுப்பில் பிரபலமானதை தொடர்ந்து ‘மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் அந்த படம் எடுக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே அவர் விபத்துக்குள்ளானதும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Bike racer and Actor TTF Vasan arrested news updates