அரவிந்த் சாமிக்கு ஜோடி சோனாக்ஷி? அமலா பால்?

அரவிந்த் சாமிக்கு ஜோடி சோனாக்ஷி? அமலா பால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baskhar the rascal stillsமம்மூட்டி, நயன்தாரா நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

இதில் அரவிந்தசாமி நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக நடிக்க லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு புறம் அமலா பாலிடமும் பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறதாம்.

யார் முதலில் ஒப்புக் கொள்கிறார்களோ? உடனே அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தனுஷால் அஜித்திற்கு வரும் ‘தல’வலி..?

தனுஷால் அஜித்திற்கு வரும் ‘தல’வலி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith dhanushபெரும்பாலும் ரஜினி, கமல், விஜய், சிம்பு படங்களுக்குதான் வெளியாகும் சமயத்தில் எதிர்ப்பு வரும்.

தற்போது இவர்களைப் போன்ற சிக்கல் பிரச்சினையில் அஜித்தும் சிக்க இருக்கிறார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் சூட்டிங் தற்போது பல்கேரியா நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதே நிறுவனம் தயாரித்த தனுஷின் தொடரி படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

ஆனால் படம் எதிர்பார்த்த லாபத்தை விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே அஜித் படம் வெளியாகும் சமயத்தில் அந்த விநியோகஸ்தர்கள் பிரச்சினை எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சந்தானத்திற்கு மட்டும் ஓகே… மக்கள் தீர்மானிக்கட்டும்..’ சிம்பு ஓபன் டாக்

‘சந்தானத்திற்கு மட்டும் ஓகே… மக்கள் தீர்மானிக்கட்டும்..’ சிம்பு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and santhanamசேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் ‘சக்கப் போடு போடு ராஜா’.

இப்படத்தில் வைபவி ஷாந்தலியா, விவேக், ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்டோர் நடிக்க, விடிவி கணேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்தில் ‘சர்வர் சுந்தரம்’ நாயகியான வைபவி ஷாந்தலியா இதிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இதுகுறித்து சிம்பு தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது.

“கதை பிடித்தது எனவே இசையமைக்க ஓகே சொன்னேன்.

சந்தானம் படம் என்பதால் ஓகே. மற்றவர் என்றால் கொஞ்சம் யோசிப்பேன்.

முதன்முதலாக ஒரு படத்துக்கு இசையமைக்கப் போகிறேன் என்ற பயமெல்லாம் எனக்கு இல்லை.

என் இசை எப்படி என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்” என்றார் சிம்பு.

ஐஸ்வர்யா ராய்க்கு தனுஷ் வலை… சிக்கியது வேறொருவர்?

ஐஸ்வர்யா ராய்க்கு தனுஷ் வலை… சிக்கியது வேறொருவர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Aishwarya Raiதனுஷ் நடிக்க, வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கி வருகிறார்.

இதில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது நீலாம்பரி கேரக்டரைப் போல நெகட்டிவ்வான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

முதலில் இந்த கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராயைதான் கேட்டார்களாம்.

அவர் மறுக்கவேதான் கஜோல் ஒப்புக் கொண்டாராம்.

அமலாபால் நாயகியாக நடிக்க, இப்படத்தை கலைப்புலி தாணு உடன் இணைந்து தயாரிக்கிறார் தனுஷ்.

மீண்டும் மாஸ் காட்ட வரும் மாரி தனுஷ்

மீண்டும் மாஸ் காட்ட வரும் மாரி தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maari dhanushவெற்றிப் பெற்ற படங்களின் அடுத்த பாகத்தை எடுப்பது தற்போது வாடிக்கையாகி விட்டது.

சூப்பர் ஸ்டார்கள் முதல் அனைவரும் இந்த பார்முலாவை கடைப்பிடித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் சூட்டிங்கை ரஜினி தொடங்கி வைத்தார்.

தற்போது மற்றொரு சூப்பர் ஹிட் படமான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார் தனுஷ்.

இதனை பட இயக்குனர் பாலாஜி மோகன் உறுதி செய்துள்ளார்.

எனவே மிக விரைவில் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

திரையுலகை காப்பாற்ற பஸ் ஓனர்களுக்கு விஷால் வேண்டுகோள்

திரையுலகை காப்பாற்ற பஸ் ஓனர்களுக்கு விஷால் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal new stillsதிருட்டு விசிடிக்கு எதிராக திரையுலகில் குரல் கொடுத்து வருபவர் நடிகர் விஷால்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள கத்தி சண்டை படம் டிச. 23ல் வெளியாகிறது.

இந்நிலையில் இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் விஷால்.

அதில்…

என் அன்புமிக்க சகோதர்களுக்கு வணக்கம்!

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்,

வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி நான் நடித்த கத்திசண்டை திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் நான் உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

திரைப்பட உலகில் அனைத்துதர மக்களின் உழைப்புடன் ஒரு திரைப்படம் வெளிவருகிறது. அத்திரைப்படம் ஒரு சில விஷமிகளின் இழிச்செயலால் திருட்டு VCD யாக வெளிவருகிறது.

அவ்வாறு வெளிவரும் VCD-க்களை உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய ஊழியர்கள் பயணம் செய்யும் பேருந்தில் திரையிடுகின்றனர், அவர்களுடைய இச்செயலால் திரைப்பட உலகில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.

திருட்டு VCDக்கு எதிராக நான் பல முறை குரல்கொடுத்து இருப்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இம் முறை நான் உங்களுடன் கைகோர்த்து குரல்கொடுக்க விரும்புகிறேன்.

ஆதலால் நீங்கள் உங்களுடைய வாகனத்தில் புதிய படங்களை திரையிடாமல் இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உத்தரவிட வேண்டிக்கொள்கிறேன்.

இதன் மூலம் திரையுலகை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளிபெருக வழி வகுக்கும். எங்களில் நீங்களும் ஒருவராக இருந்து செயல்பட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

More Articles
Follows