தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிதாமகன் நஷ்டம்.; பாலா மீது விஏ துரை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..; வணங்கான் தலைப்புக்கும் தடையில்லை
வணங்கான் டைட்டிலை பயன்படுத்த பாலாவுக்கு தடை இல்லை ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வணங்கான்’ ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
இந்த படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பட வெளியீட்டை நோக்கி போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் எஸ்.சரவணன் என்பவர் ‘வணங்கான்’ என்கிற டைட்டிலை இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது படத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாண்புமிகு. வேல்முருகன் எஸ்.சரவணன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வணங்கான் என்கிற டைட்டிலை தனகளது படத்திற்கு பயன்படுத்த இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளார்.
இயக்குநர் பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வாதங்களை முன் வைத்து வாதாடினார்.
பல தடைகளைக் கடந்து ரிலீஸை நோக்கி முன்னேறி வரும் ‘வணங்கான்’ படக்குழுவினருக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பு இன்னும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது..
*இயக்குநர் பாலா மீது தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம்*
இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த ‘பிதாமகன்’ திரைப்படம் கடந்த 2003ல் வெளியானது. இந்தப் படத்தை எவர்கிரீன் நிறுவனம் சார்பில் வி ஏ துரை தயாரித்திருந்தார்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததுடன் நடிகர் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
ஆனால் இந்த படம் தயாரித்ததில் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, இயக்குநர் பாலா தனக்கு 25 லட்ச ரூபாய் தர வேண்டும் என நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் விஏ துரை பல வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்தநிலையில் கடந்த வருடம் உடல்நலக் குறைவால் அவர் மரணம் அடைந்தார்.
கடந்த வருடம் முதல் இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்து வேகமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை தயாரிப்பாளர் விஏ துரை தொடுப்பதற்கு முன்பே பல சமயங்களில் இயக்குநர் பாலா அவருக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார். ஆனாலும் தயாரிப்பாளர் விஏ துரை அவற்றை கருத்தில் கொள்ளாமல் ஏன் இப்படி ஒரு வழக்கை பாலா மீது தொடர்ந்தார் என்பது ஆச்சரியம் தான்.
அதுமட்டுமல்ல தற்போது இயக்குநர் பாலா, நடிகர் அருண்விஜய் நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்கி வரும் ‘வணங்கான்’ படத்திற்கு, அந்த தலைப்பை பயன்படுத்தக் கூடாது என எஸ்.சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து பாலாவிற்கு வணங்கான் தலைப்பை பயன்படுத்திக் கொள்ள தடை இல்லை என அனுமதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் வி ஏ துரை தொடர்ந்த வழக்கிலும் இயக்குநர் பாலாவின் பக்கம் உள்ள நியாயத்தை பறைசாற்றும் விதமாக மீண்டும் ஒரு நியாய தீர்ப்பு கிடைத்துள்ளது இயக்குநர் பாலா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Balas Vanagnaan title dispute Court order





