தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம். இந்த நிறுவனம் சில ஆண்டுகளாக படம் தயாரிக்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தயாரிக்கும் புதிய படத்திற்கு அந்த நாள் என்று பெயரிட்டுள்ளனர்.
அந்த செய்தி வருமாறு…
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க R. ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் அந்த நாள்.
வித்தியாசமான கதையமைப்போடு கிரைம், திரில்லர் கலந்த திகில் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஆர்யன் ஷாம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கான இறுதி க்கட்ட ப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
விரைவில் வெளிவரவிருக்கும் அந்த நாள் படத்தில் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதை நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் ராஜ்குமார், கைதி பட புகழ் கிஷோர், ஆகியோருடன் காமெடி வேடத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு: சதீஷ் கதிர்வேல், இசை: N. S. ராபர்ட் சற்குணம்,
இயக்கம்: வி.வி.
தயாரிப்பு : R .ரகுநந்தன்
விரைவில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
இப்பொழுது படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று 18-8-2020 வெளியிடப்பட்டது.
AVMs Andha Naal movie 2nd look poster released