கைப்புள்ள விஜய்.; வண்டுமுருகன் அஜித்..; தல-தளபதி ரசிகர்கள் மோதல்

As usual again Vijay and Ajith fans clash in twitterசில தினங்களுக்கு முன் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர் கொண்ட பார்வை பட டிரைலர் வெளியானது. இதில் வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார் அஜித்.

ட்ரைலர் டிரெண்ட் ஆகும்போது அதற்கு நிகராக விஜய் ரசிகர்களும் அஜித்தை கலாய்த்து டிரெண்டிங் செய்தனர்.

இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் பட போஸ்டர்கள் வெளியானது. இதனை இவர்கள் ட்ரெண்ட் செய்ய, அஜித் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த கலாய்ப்பு டிரெண்டிங் வடிவேலுவின் கேரக்டர்கள் & கெட் அப் பக்கம் திரும்பியது.

கைப்புள்ள விஜய் என அஜித் ரசிகர்கள் கலாய்க்க, வண்டு முருகன் அஜித் என விஜய் ரசிகர்கள் கலாய்க்க இவை இரண்டும் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது.

இந்த ரசிகர்களின் இந்த மோதலால் மற்ற ரசிகர்களும் நடுநிலையாளர்களும் எரிச்சல் அடைந்தனர்.

இதை தடுக்க சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஏதாவது செய்வார்களா?

As usual again Vijay and Ajith fans clash in twitter

Overall Rating : Not available

Latest Post