தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் தளபதி 63 படத்தில் மீண்டும் விஜய், அட்லி, ரஹ்மான் கூட்டணி அமைந்துள்ளது.
இப்படத்திற்காக ரஹ்மான் சில பாடல்களை முன்பே பதிவு செய்து விட்டார்.
தற்போது இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பை முடித்து, எடிட் செய்து அதை ரஹ்மானிடம் காட்டியிருக்கிறாராம் இயக்குனர் அட்லீ.
அவற்றைப் பார்த்த ரஹ்மான்..
அதில், “இங்க யார் இருக்கிறார் பாருங்கள், எடிட் ஆன இரண்டு பாடல்களை நான்தான் முதலில் பார்த்தேன்” என போட்டுள்ளார்.
அந்த பதிவில் தளபதி 63 முதல் பாடல் எடிட் என இருக்கிறது.
விஜய்யின் ரசிகர்கள் தான் ஆர்வமுடன் இது போல் பகிர்வார்கள். தற்போது ரஹ்மானே நான் தான் பர்ஸ்ட் என பகிர்ந்துள்ளது தளபதி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
AR Rahman talks about Thalapathy 63 song editing