தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஊரெங்கும் ‘அந்தகன்’ அலப்பறை.. மீண்டும் பிரகாசிக்கும் பிரஷாந்த்.; வசூல் எவ்ளோ?
தியாகராஜன் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் ‘அந்தகன்’.
இதில் கதையின் நாயகனாக பிரசாந்த் நடித்த அவருடன் சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு, சமுத்திரகனி, ஊர்வசி, மனோபாலா, வனிதா விஜயகுமார், கே எஸ் ரவிக்குமார், ஆதேஷ் பாலா, ஜே எஸ் கே கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடித்திருந்தார்.
படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்த படத்தின் பிரமோஷன் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நடிகர் பிரசாந்த் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து முக்கியமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பட பிரமோஷன் பணிகளை செய்து வந்தார்..
இதனால் எந்த சமூக வலைத்தளம் பக்கங்கள் திரும்பினாலும் அந்தகன் பற்றிய பேச்சாகவே இருந்தது.. எனவே ரசிகர்களிடம் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
இப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியாகி இரண்டே நாட்களில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் இதன் மூலம் மீண்டும் திரையுலகில் பிரகாசிப்பார் பிரசாந்த் என தகவல்கள் வந்துள்ளன.. இதில் எந்த சினிமாத்தனமும் இல்லாமல் மாஸ் ஹீரோ என அலட்டிக் கொள்ளாமல் கொடுத்து வேலையை பிரசாந்த் சிறப்பாக செய்து இருக்கிறார்.
முக்கியமாக கண் பார்வையற்றவராக அவர் நடித்திருக்கும் காட்சிகள் அருமை என அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வரும் வேளையில் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Andhagan received positive response from audience