ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. சர்வர் சுந்தரம் டைரக்டர் புலம்பல்; OTTல் ரிலீஸ் திட்டம்.?

Anand Balki wish to release Server Sundaram on OTTஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’.

வைபவி சாண்டில்யா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், ராதாரவி, செஃப் தாமோதரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

உணவே மருந்து என்பதை மையப்படுத்தை இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது-

இந்த படத்தின் ரிலீஸ் 2020 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிக் கொண்டே போனது.
தற்போது கொரோனா ஊரடங்கால் இனி 3 மாதங்களுக்கு ரீலீசுக்கு வாய்ப்பே இருக்காது.

இந்த நிலையில், படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, தனது ட்விட்டர் பதிவில்…

‘உன் காசு என் காசுன்னு சொல்லி, ஆக மொத்தம் ஒன்றுக்கும் உதவல. ‘சர்வர் சுந்தரம்’ படத்தை வெளியிட்டு இருக்கலாம் இல்லடா. ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்று ஒரு பதிவில் கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், இந்தப் படம் ஏன் ரிலீஸ் ஆகவில்லை என்று கேட்கும் ரசிகர்களுக்கு, தவறான வியாபாரிகளின் முதிர்ச்சியில்லாத அணுகுமுறை, சம்பந்தமில்லாதவர்களின் தலையீடு, பொறுப்பான நபர்கள் கை கழுவியது, படத்தின் ரிலீஸுக்கு யாரும் உதவத் தயாரில்லை.

பொறுப்பில்லாத ஒருவர் படத்தை வாங்க, பொறுப்புள்ளவர் பொறுப்பில்லாமல் நடப்பதன் பின்விளைவுதான். நம்பிக்கைதான் வாழ்க்கை. பொறுத்திருப்போம்.

இனி ரீலிஸைத் தவிர எதுவுமில்லை அனுபவிக்க’ என்று கூறியுள்ள அவர், மற்றொரு பதிவில், ‘சர்வர் சுந்தரம்’ படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா? என்று கேட்டுள்ளார்.

சர்வர் சுந்தரம் படத்தின் தயாரிப்பாளர் என்ன சொல்ல போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Anand Balki wish to release Server Sundaram on OTT

Overall Rating : Not available

Latest Post