தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல ஹாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆல்ஃபிரடோ ஜேம்ஸ் அல் பசினோ.
1969 ஆம் ஆண்டு வெளியான ‘மீ நடாலியா’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டின் தடம் பதித்த அல் பசீனோ உலகளவில் நடிப்பின் அசுரனாக வலம் வந்தார்.
இவர் 1972 ஆம் ஆண்டு நடித்து வெளியான ‘தி காட்ஃபாதர்’ படத்தில் நடித்ததால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.
இந்த படத்தில் மார்லன் பிராண்டோவின் மகனாக அவர் நடித்திருந்தார்.
50க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களிலும், 7 ஆவணப்படங்களிலும், 5 டிவி சீரியல்களில் அல் பசீனோ நடித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த 1988 ஆம் ஆண்டு ஜன் டர்னட் என்பவரை காதலித்து அல் பசீனோ திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கை ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது.
இதன்பின்னர் 8 ஆண்டுகள் காலம் கழித்து 1997 ஆம் ஆண்டு பிவர்லி டி ஏஞ்சலோ எனும் ஹாலிவுட் நடிகையை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் இந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
அதை தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு லூசிலா போலக் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அல் பசீனோ 2018 ஆம் ஆண்டு 3வது மனைவியையும் விவாகரத்து செய்தார்.
இந்நிலையில், தற்போது 29 வயது ஹாலிவுட் நடிகையான நூர் அல்ஃபலாவுடன் இல்லற வாழ்க்கை நடத்தி வரும் அல் பசீனோ தற்போது அப்பாவாக போகிறார்.
இன்னும் 2 மாதங்களில் நூர் அல்ஃபலா குழந்தை பெற்றெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அல் பசீனோவின் முதல் மனைவிக்கு பிறகு குழந்தைக்கு தற்போது 33 வயதாகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு உணவகம் ஒன்றில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததன் மூலம் இவர்களின் மண வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்தது.
அல் பசினோவும் நூர் அல்ஃபல்லோவும் கொரோனா தொற்று பரவிய நாட்களில் இருந்தே பழகி வந்துள்ளனர். அதேசமயம் அல்ஃபல்லோ இதுவரை அதிக வயதுடைய நபர்களுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார்.
நூர் அல்ஃபலா பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் வசதியானவர்களுடன் தான் இதுவரை டேட் செய்துள்ளார். அதனால் தான் வயதை பொருட்படுத்தாமல் தன் அப்பாவை விட அதிக வயதுள்ள அல் பசினோவுடன் அல்ஃபல்லோ இல்வாழ்க்கை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகர் அல் பசீனோ தற்போது ஜானி டெப் இயக்கப்போகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Al Pacino’s 29 year old girlfriend Noor Alfallah gets prengnent